jump to navigation

லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி! ஏப்ரல் 13, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இந்துத்துவம், ஒரிசா, கந்தமால், பழங்குடிகள், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை.
Tags: , , ,
trackback

kandhamal violence

ஒரிசாவில் இந்துத்துவம் - பின்னணி

ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் இந்துத்துவதீவிரவாதத்திற்கு உதாரணமாகும் சிறப்புத் தகுதி உடையது. காலங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் தலித்துகளும் பழங்குடிகளும் இம்மாவட்ட மக்கள். கிறித்துவ மிஷனரிகள் தலித், பழங்குடிகள் மத்தியில் பணியாற்றிவருகிறார்கள். விளைவாக மதமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் கிறித்துவர்களாக மாறும்போது பழங்குடிகளுக்குண்டான அரசாங்க உரிமைகள் அத்தனையும் கிடைக்கும் என்பதும் தலித்துகள் கிறித்துவர்களாக மாறும் தலித்துகளுக்குரிய உரிமைகள் இல்லை, அதனால் மிஷனரிகள் பிரத்யேக உரிமைகளை தலித்துகளுக்குப் பெற்றுத்தர முயற்சித்தார்கள் என்பதும் இங்கு தலித்-பழங்குடிகளிடையே புகைச்சல் ஏற்பட்டதன் பின்னணி. இதை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா..க போன்ற இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. இந்த புகைச்சலை ஊதிப்பெரிதாக்கிள எரிய விட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன். 1994 முதல் தலித்-பழங்குடி மோதல் கிறித்துவர்கள்-இந்துக்கள் இடையேயான மோதலாக உருவெடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆஸ்ரமங்கள் என்ற பெயரில் கந்தாஸ் பழங்குடி இன மக்களை வன்முறையாளர்களாக இந்துத்துவ ரவடிகளாக மாற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானவர் லக்ஷ்மாணனந்தா சாமியார் 1960களிலே கர சேவை செய்வதற்காக கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தவர். கிறித்துவத்துக்கு மாறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பழங்குடி மக்களை இந்துத்துவ விஷத்தை ஊட்டி ஏவி விட்டுக்கொண்டிருந்தவர். கிறித்துவதுக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை தாய்மதத்திற்கு திருப்புவதுதான் பல பத்தாண்டுகளாக இவர் செய்து வந்த குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேலை!

கிறிஸ்துமசுக்கு முன் தினமான டிசம்பர் 24, 2007ல் சதாரணமாக இருதரப்பினருக்கிடையே ஆரம்பித்த வாய்ச்சண்டை கிறித்துவ தலித்துகளுக்கு எதிராக பெரும் கலவரமாக வெடித்தன் பின்னணியில் லக்ஷ்மணானந்தா சாமியார் இருந்ததாக கைகாட்டுகிறார்கள். சர்ச்சுகளுக்கு முன்பு தலித் கிறித்துவர்கள் உயிரேடு கொலுத்தப்பட்டது, கிராமம் கிராமமாக கிறித்துவர்களின் வீடுகள்,இருந்த சுவடே தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டது, குழந்தை,பெண்கள் உள்பட பல கிறித்துவர்கள் தேடிக் கொல்லப்பட்டது என வன்முறைகள் இந்துத்துவதீவிரவாதிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்டன. (தலையில் காவித்துணி கட்டி, இரண்டு கைகளும் வாள் ஏந்தி விண்ணை அதிரவைக்கும்படி கூவிக்கொண்டு வன்முறையை காட்டிய ஒரு காவித்தொண்டரின் புகைப்படம் அத்தனை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கலாம்!) பா..க ஆதரவோடு ஆட்சியை அலங்கரித்துக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் அரசு வன்முறையை தடுத்து நிறுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அந்த தாக்குதலின் போது சேதமான வீடுகள்கூட இன்னும் அங்கே சீரமைக்கப்படவில்லை.

 லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!

கடந்த வாரம் என்னுடைய தோழியை சந்திப்பதற்காக எத்திராஜ் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். தோழியை பார்க்க நேரமெடுத்ததில் எதிரே இருந்த ஷாப்பிங் காம்ளக்ஸ்சுக்குள் நுழைந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் காப்பிகள் கண்ணில் பட்டன. ‘லக்ஷ்மணானந்த படுகொலை - யார் கொலையாளி?’ தலைப்பில் எஸ்.குருமூர்த்தி துக்ளத் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் நகல்கள் அவை. அந்தக்கடைக்காரர் காவித்தொண்டர் போலும் இலவச விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

ஆகஸ்ட் 2008ல் லக்ஷ்மணானந்தா என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குருசாமி. கட்டுரையின் சாரம் லக்ஷ்மணானந்தா, ஒரிசாவில் ஆற்றிய தொண்டுகள், அப்பாவியான அவரை கிறித்துவ தீவிரவாத அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து தீர்த்துக்கட்டினர் என்பதே. அவர் துணைக்கு அழைத்திருந்தது ஒரிசா முன்னாள் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவரை.

” ‘இந்த(கந்தமால்) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள்என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர் தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டு..

“மலைவாழ் மக்களிடையே நடக்கும் மத மாற்றங்கள் நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கிறித்துவ தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் மாறி பிரிவினை சக்திகளை தூண்டி விட்டிருக்கிறது என்கிறார் அசோக் சாகுஎன்று தன்னுடைய துப்பு துலக்கலுக்கு ஆதாரம் காட்டுகிறார் குருசாமி. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் தழைக்க நிதர்சனமான காரணங்களான அரசாங்க புறக்கணிப்பும் தொடரும் வறுமையும் வேலையின்மையும் வசதியாக மூடி மறைக்கப்பட்டு, கிறித்துவர்களாக மாறியதே காரணமென கண்டுபிடித்துச் சொல்கிறது காவிப்படை. அந்த காரணத்தை ஒரிசாவுக்கும் பொறுத்தப்பார்க்கிறது. இந்த காரணத்தை கண்டுபிடித்தமைக்காக குருசாமி சிபாரிசு செய்தாரோ என்னவோ.. அதே அசோக் சாகுதான், கந்தமால் தொகுதி பா... வேட்பாளர்.

 

sadhu violence

வேட்பாளரைக் காணவில்லை!

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பா..கவில் தனித்த இடம் உண்டு. நான்கு சிறுபான்மையினரை வெட்டிக்கொன்றால் அல்லது 40 சிறுபான்மையினர் வீடுகள் நாசமா போகக்காரணமாக இருந்தால் இந்தா புடி எம்.பி சீட்டு என்று வெளியே சொல்லப்படாத சட்டம் இருக்கும்போல. போன மாதம்தான் குஜராத் கலவரத்தில் தேடப்பட்டு வந்த மோடி அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் போலீசில் சரணடைந்தார். இப்போது கந்தமால் தொகுதி வேட்பாளர் அசோக் சாகுவைத் தேடுகிறது மாநில போலீஸ். எம்.பி ஆகி அமைச்சர் ஆவதற்குள் விதி விளையாடிவிட்டது. முன்னாள் விஷ்வ ஹிந்து தொண்டரும் ஐபிஎஸ் படித்தவருமான அசோக் சாகு, ஒரிசாவின் குருசாமி! தேடித்தேடி கிறித்துவபயங்கரவாதம், ‘முஸ்லிம்தீவிரவாதம் என்றெல்லாம் கட்டுரை எழுதுவார். (சங்க் பரிவார் இணைய தளத்தில் இவருடைய கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும்) எழுதுவதோடு, காவித்தொண்டாற்றுவதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எம்.பி.சீட்டுக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். போதாத காலம்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசிய எழுச்சியூட்டும் பேச்சு‘(‘லக்ஷ்மணானந்தா சாமிகளை கொன்றது யார்? கொலை செய்தவனுக்குத் தெரியுமா இதற்கு பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று?’) தேர்தல் ஆணைய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பேச்சாகிவிட்டது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறை காத்திருக்க அப்ஸ்கான்ட் ஆகிவிட்டார் அசோக் சாகு!

இப்படிப்பட்ட மதிப்பிற்குரியவர் எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!

மறுமொழிகள்»

1. seidhigal - ஏப்ரல் 13, 2009

//அசோக் சாகு! எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!//

Sairyaaga Soneergal!

2. lightink - ஏப்ரல் 14, 2009

அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்

3. ajayanbala - ஏப்ரல் 15, 2009

ungkal katturaikal etho….paravayillai.nantraakaththaan ezuthukiRiirkaL.konjcham sonthamakavum ezuthukira pothu katturaikal innum nantraka irukkum .santhekam varukiRapothu ennitam kettu therinthu kollavum.athrkaaka atikkati thontharavu pannakkoodathu.

4. மு.வி.நந்தினி - ஏப்ரல் 15, 2009

நண்பர்களின் வருகைக்கு நன்றி.

அஜயன் பாலா,
என்னுடைய கட்டுரைகளை நீங்கள் முழுமையாக படிப்பதி்ல்லை என்று தெரிகிறது. தயவு செய்து இனிமேலாவது முழுமையாக படிக்கவும். உங்கள் அளவுக்கு படிப்பவரை உருக்கிப் பிழியும் எழுத்தாக இல்லாவிட்டாலும், என் எழுத்து ஏதோ படிக்கும்படியான நடையில் இருக்கும் என நம்பிக்கொண்டிருக்கிறேன். :)

5. முருக சிவகுமார் - ஏப்ரல் 18, 2009

தோழி வணக்கம்.
லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி! என்ற கட்டுரையை படித்தேன். நல்ல கட்டுரை. ஆனால், தலைப்பில் இருந்த ஆர்வம் படிக்க படிக்க கட்டுரையில் இல்லை. வெறும் செய்தியாகவே இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் இந்து வெறி – அதிகாரத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும். வாழ்த்துக்கள்.

6. பைத்தியக்காரன் - ஏப்ரல் 27, 2009

நட்சத்திர வாழ்த்துகள் நந்தினி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

7. பைத்தியக்காரன் - ஏப்ரல் 27, 2009

நட்சத்திர வாழ்த்துகள் நந்தினி. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

தோமையுடன்
பைத்தியக்காரன்

8. மு.வி.நந்தினி - ஏப்ரல் 27, 2009

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!