அனுபவம்

பெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…

இதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன்.  இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை  உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது.  சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த … Continue reading

சும்மாதான் இருக்கிறேன்

வீட்டிலிருக்கும் பெண்களுக்கான வேலைப் பளுவை தற்சமயம் உணர்கிறேன். வீட்டிலிருக்கும் பெண்களை சும்மாதான் இருக்கிறார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது. பணிக்குச் சென்ற நாட்களில் இத்தனை வேலைப் பளுவை அனுபவித்ததில்லை. அது ஒருவகையான வாழ்க்கையாக இருந்தது, இது வேறுவகையானதாக இருக்கிறது. இதுபற்றி விரிவாக எழுத வேண்டும். இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறேன். நாளின் முடிவில் சாத்தியப்படாமல் போய்விடுகிறது. கிடைக்கும் நேரத்தில் நிறையதை படிப்பதற்கு செலவிடுகிறேன். அது … Continue reading

அரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்?

பிரபா கர்ப்பமானபோது அவருடைய வயது 24. கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, அவருடைய உயரம்-எடையை(பாடி மாஸ் இன்டெக்ஸ்) கணக்கிட்டபோது, அவர் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட குறைவான எடையைக் கொண்டிருந்தார். உயர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரபா, சத்து குறைபாடுடன் இருந்தார். அவரை பரிசோதித்து அவருக்கும் அவர் கருவில் வளரும் குழந்தைக்குமாக சத்து மாத்திரைகள், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அவருக்கு எடுத்துச்சொன்னார். கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்ட பரிசோதனையிலும் பிரபா சத்துள்ள உணவுகளை … Continue reading

காகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன!

நான் சென்னைவாசியாகி பனிரெண்டு ஆண்டுகளாகிறது. இதுநாள்வரை சென்னையின் அடர்த்தியான கான்கிரீட் காடுகள் வெளியிடும் வெப்ப பெருமூச்சை மட்டுமே உணர்ந்துக்கொண்டிருந்தேன். அதுவும் கோடைகால வெக்கை தாங்க முடியாத அவஸ்தையாக இருந்தது. ஆனால் இத்தனை வருடங்களில் இல்லாத கோடையின் அற்புதத்தை இந்த ஆண்டு அனுபவிக்க நேர்ந்தது. என்னுடைய புகைப்படக்கருவியும் நான் வேலைப்பார்த்த அலுவலகம் அமைந்திருந்த கோட்டூர்புரமும் என்னை இந்த அற்புத அனுபவத்துக்கு தள்ளின. புகைப்படக்கருவியின் மேல் இருந்த ஆவலில் அலுவலக இடைவேளைகளில் கோட்டூர்புரத்தின் தெருக்களெங்கும் அடர்ந்திருக்கும் கொன்றை, புங்கன், பீநாரீ, … Continue reading

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s