கடந்துபோன ஆண்டு குறித்து சில நினைவுகள்…

உற்சாகத்தோடு ஆரம்பமாகி அமைதியாக முடிந்துபோனது 2008! குங்குமம் இதழில் எழுதிய தொடர் கட்டுரைகள் புத்தகமானது முதல் மகிழ்ச்சி; அடுத்து ஆனந்தவிகடன் இதழில் சேர அழைப்பு வந்தது,அரசியலிலிருந்து சமூக பிரச்னைகளை எல்லாம் எழுதி கிழித்து விடலாம் என நினைத்தது இரண்டாவது மகிழ்ச்சி(அது முடியாமல் போனது முதல் துயரம் 🙂 ! )இப்படி ஒவ்வொரு மகிழ்ச்சியாக தேடி வந்துகொண்டிருந்த வேளையில், எப்படியோ என்னை எல்லோரும் ‘தோற்றுப்போனவள்’ என்று ஒப்புக்கொண்டதுதான் பெரும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்! ஆனபோதும் தோற்றுப்போனவளாக இதே திமிர்தனத்தோடு அடுத்த ஆண்டையும் எதிர்கொள்ளப்போவதை நண்பர்கள் பொறுத்தாள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்…

(மன்னிக்கவும் இதுபோன்ற மொக்கை பதிவை இனி இடமாட்டேன் 🙂 )

4 thoughts on “கடந்துபோன ஆண்டு குறித்து சில நினைவுகள்…

 1. //குங்குமம் இதழில் எழுதிய தொடர் கட்டுரைகள் புத்தகமானது முதல் மகிழ்ச்சி//
  தயவு செய்து புத்தகத்தின் பெயர், பதிப்பகத்தின் பெயர், புத்தகம் கிடைக்கும் இடம் குறித்து எழுதுங்கள்.
  வாழ்த்துகள்.

  • நன்றி நண்பரே,
   ‘நான்’ என்ற தலைப்பில் 29 படைப்பாளிகளின் தன்அறிமுகமாக குங்குமம் இதழில் வெளியான கட்டுரைத் தொடர்தான் இந்த புத்தகம். ‘நான்’ என்ற பெயரிலேயே காவ்யா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.

 2. “அடுத்து ஆனந்தவிகடன் இதழில் சேர அழைப்பு

  வந்தது,அரசியலிலிருந்து சமூக பிரச்னைகளை எல்லாம் எழுதி

  கிழித்து விடலாம் என நினைத்தது இரண்டாவது மகிழ்ச்சி(அது

  முடியாமல் போனது முதல் துயரம்”…..

  இந்த துயரத்தைப் பற்றி எழுதினால் ஆனந்த விகடனைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளலாம். எங்களுக்குத் தெரிந்த வரை எந்த வணிகப் பத்திரிகையிலிம் உண்மையான அரசியல் சமூகப் பிரச்சினைகளை எழுத முடியாது. ஏதோ வாழ்க்கையை ஓட்டுவதற்காக இந்தப் பத்திரிகைகளில் வேலை செய்து கொண்டு உருப்படியாக எழுதுவதை வெளியே சமூக அக்கறை உள்ள சக்திகளின் உதவியுடன்தான் எழுத முடியும் என நினைக்கிறோம். அந்த சக்திகளில் நாங்களும் உண்டு

  நட்புடன்
  வினவு

 3. நிச்சயமாக எழுதுவேன். சற்றே பொருத்திருந்து எழுதவேண்டும் என்பதற்காகவே இத்தனை காலமும் காத்திருந்தேன். ஏனெனில் கோபத்தோடு வெளிப்படும் எதுவும் வெற்று புலம்பலாக போய்விடக்கூடும். மற்ற பெண்களுக்காக எழுதும் நான் எனக்காகவும்(ஊடக பெண்களுக்காக) எழுத வேண்டிய சூழலில் இருக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.