
அரசியல்வாதிகளுடன் பேசுவதே ஒருவகையில் காமெடியான அனுபவம்தான். நிசர்சனத்தை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தபோதும்,அதை மறைத்து வெளி அலங்காரம் பூசிக்கொண்டு நடிப்பில் கைத்தேர்ந்தவர்கள். சில சமயம் அவர்களை அறியாமலே உண்மையான முகத்தைக் காட்டிவிடுவார்கள். பிரேமலதாவும் நடித்தார். வெகுஜன இதழ்களில் எழுதும் அந்த நடிப்பையும் உண்மையென சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனாலும் மற்ற அரசியல்வாதிகள் செய்யும் அரசியலைவிட, தேமுதிக-வின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன் பிரேமலதாவுடன் நடந்த சந்திப்பு. நிறைய பேசினார். நிறைய எழுதியதை உதவி ஆசிரியர் எடிட் செய்யப்பட்டு வெளியானது இந்த பேட்டி. அவர் பேசிய ஒரு முக்கியமான விஷயம் பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் பற்றியது. பெண்களின் சுய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டது என்று சொல்லிக்கொண்டு அரசியல்வாதிகள் பெண்களை வட்டித்தொழிலுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதுகுறித்து நிறையவே பேச வேண்டியிருக்கிறது… தேர்தல் அரசியல் சூடு பிடித்திருக்கும் வேளையில் தேமுதிக-வின் அரசியல் நிலைப்பாட்டை கணிக்கும் ஆர்வத்தோடு பிரேமலதா விஜயகாந்தின் பேட்டியை மறுபிரசுரம் செய்கிறேன். நண்பர்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.
பிரேமலதாவிஜயகாந்த்… சமீபத்தில், திருச்சியில்நடந்ததே.மு.தி.க. மகளிர்மாநாட்டைமுன்னின்றுநடத்தியதிலிருந்து, அரசியல்வட்டாரத்தில் ‘ஹாட்டாப்பிக்‘ ஆகியிருக்கிறார். கடைசிகேள்விவரைஎந்தவிதப்பதற்றமோமுகச்சுளிப்போஇல்லாமல், பக்குவப்பட்டஓர்அரசியல்வாதிபோன்றுமிகத்தெளிவாகவும்நிதானமாகவும்பதில்சொல்கிறார்.
”எப்படி இருந்தது மகளிர் மாநாடு?”
”சூப்பர் ஹிட்! மாநாடு அறிவித்து இருபதே நாட்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு வரலாறுபடைத்து இருக்கிறார்கள். இதற்கு முன் வேறு எந்தக் கட்சியிலும் இவ்வளவு பெண்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை. பணம் தரவில்லை; பிரியாணி போடவில்லை. ‘குடும்பத்தோடு கலந்துக்கணும்’ என்று கேப்டன் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, கூட்டத்துக்கு வந்து கலந்துகொண்டு தங்களுடைய உண்மையான பாசத்தை நிரூபித்துவிட்டார்கள் எங்கள் பெண்கள்!”
”உங்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் இந்த மகளிர் மாநாடு நடத்தப்பட்டதா?”
”எந்தக் கட்சியிலும் இல்லாத பல பாஸிட்டிவான விஷயங்கள் எங்கள் கட்சியில் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கமறுக்கிறவர்கள்தான் ‘மனைவி, மச்சினன்’ என்று தேவை இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்த லில் கேப்டன் நின்ற தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே என் சகோதரர் நின்றார். மற்ற அனைத்துத் தொகுதிகளும் கேப்டனுக்கு ரசிகர்களாக இருந்து கட்சியில் இணைந்தவர்களுக்கும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. அவர்கள் யாரும் ரத்த உறவு உள்ளவர்கள் இல்லை.
மாநாடுஅறிவிப்புசெய்தபோது, ‘பிரேமலதாவுக்குக்கட்சியில்முக்கியமானபதவிதரப்போகிறார்கள். அதைஅறிவிக்கத்தான்இந்தமாநாடு‘ என்றார்கள். இதோ, மாநாடுநடந்துஒருவாரம்ஆகிவிட்டது. இதுவரைஎனக்குஎந்தப்பதவியும்கொடுக்கப்படவில்லை. நான்தே.மு.தி.கவின்அடிப்படைஉறுப்பினர் மட்டுமே! தலைவரின்மனைவிஎன்றவகையில்என்னை மகளிர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்கவைத்தார்கள். அவ்வளவுதான்!
கட்சிப்பதவிகளுக்கு வரும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் ஆர்வமோ எனக்கு இல்லை. இனிமேலும் வரப்போவது இல்லை. புரட்சிக்கலைஞரின் மனைவி என்பதே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. தொண்டர்கள் என்னை அன்போடு ‘அண்ணி‘ என்றுஅழைப்பதேஎனக்குக்கிடைத்தமிகப்பெரியபட்டம்!”
”சமீபகாலமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சுய உதவிக் குழு பெண்களுக்கு நிறைய நலத் திட்டங்கள் வழங்குவதைப் பார்த்துதான், பெண்களை ஈர்க்கும் வகையில் உங்கள் மகளிர் மாநாட்டிலும் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?”
”எங்கள் தலைவர் பிறரைப் பார்த்து உதவி செய்யக்கூடியவர் அல்ல; உதவி செய்வது என்பது அவருடைய பிறவிக் குணம். நடிக்க வந்து, இந்த 30 வருடங்களாக ஏழை, எளியவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் மூலமாக நிறைய உதவிகள் செய்துகொண்டு இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் கொடுத்து வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக, ஜானகி அம்மாள் உயிருடன் இருந்தபோதிலிருந்தே இதைச் செய்து வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு இப்போதுதான் உதவி செய்ய மனசு வந்திருக்கிறது! அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஏதோ தாங்கள்தான் பெண்கள் சுய உதவிக் குழுக்களை எல்லாம் வளர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள். உண்மையில், சுய உதவிக் குழுக்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. பல கிராமங்களில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு, கிடைக்கும் பணத்தை வைத்து என்ன பொருளைத் தயாரிப்பது, அதை எப்படி விற்பது என்று எதுவுமே தெரிய வில்லை. கிடைத்த பணத்தை வட்டிக்கு விடுவதுதான் நடக்கிறது. சுய உதவிக் குழுக்களில் உள்ள பல பெண்கள் இதை என்னிடமே தெரிவித்தார்கள். இந்த விஷயங்கள் எங்கள் காதுக்கு வந்த பிறகுதான், இவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன் முதல் கட்டம்தான், தலைவர் தன் சொந்தப் பணத்திலிருந்து 50 லட்ச ரூபாயை சுய உதவிக் குழுப் பெண்களுக்கு வழங்கியது. விருத்தாசலம் தொகுதியில் எம்.எல்.ஏ. நிதி முழுவதையும் பயன்படுத்தியது போக, தன் சொந்தப் பணத்தில் இலவச கம்ப்யூட்டர் மையங்களையும், தண்ணீர் டேங்க்குகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர். அரசுப் பணத்தை எடுத்து யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், தன் சொந்தப் பணத்தை எடுத்துக்கொடுக்கும் மனசு எத்தனை பேருக்கு இருக்கிறது? மக்களுக்கு யார் நல்லது செய்தாலும், அதை எங்கள் தலைவரும் எங்கள் கட்சியும் நிச்சயம் பாராட்டுவோம். ஆனால், அரசு திட்டங்கள் எல்லாம் இங்கே அடிக்கல் நாட்டு விழாவோடு முடிந்துவிடுகின்றனவே?”
”பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடே இன்னும் எட்டாக் கனியாக இருக்கும்போது, உங்கள் தலைவரோ ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 50 சதவிகித இடஒதுக்கீடு தருவோம்’ என்கி றார். இது சாத்தியமா?”
”கட்சி ஆரம்பித்து நடந்த முதல் தேர்தலிலேயே 33 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெண்களுக்குக் கொடுத்து, வேட்பாளர்களாக நிறுத்தியது எங்கள் கட்சி மட்டும்தான்! பெண்களுக்குத் திறமை போதவில்லை என்று சொல்லப்படுவதால்தானே 33 சதவிகித இடஒதுக்கீடு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் முதல் பணியே எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதுதான். கல்வி கிடைத்தால் திறமை தானாக வந்துவிடும். அப்போது 33 சதவிகிதம் மட்டுமல்ல, 50 சதவிகிதமும் சாத்தியம்தான்!”
”உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வேறு என்னவெல்லாம் நலத் திட்டங்கள் கொண்டுவருவீர்கள்?”
”மக்கள் தொகையில் பெண்கள், ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள். தேர்தலில் ஆண்களைவிட அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள்கூடத் தரப்படுவது இல்லை. வீடு, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் பெண்கள். தேர்தலில் மட்டுமல்லாது, மற்ற எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம். தங்கள் காலில் நிற்க ஆரம்பித்தாலே, தடைகளை எதிர்கொள்ளும் பலம் பெண்களுக்கு வந்துவிடும். அடுத்து, மிக முக்கியமாகத் தீர்க்க வேண்டிய பிரச்னை வரதட்சணைக் கொடுமை! வரதட்சணை வரவாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டால்தான், எந்த ஆணும் எங்கள் கட்சியில் சேர முடியும். எங்கள் தலைவரும் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, வரதட்சணை என்பதே இல்லாதபடிக்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவோம். இதுவரைகண்டுகொள்ளப்படாதபழங்குடி, நரிக்குறவர்இனப்பெண்கள், திருநங்கைகள்எனஎல்லோரையும்உயர்த்தும்திட்டங்களைச்செயல்படுத்துவோம்!”
”பொறியியல் கல்லூரியை நிர்வகிக்கிறீர்கள்; தவறாமல் கட்சிக் கூட்டங்க ளுக்குச் செல்கிறீர்கள்; குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும்இருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”
”ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாளக்கூடிய திறமை என்னைப் போல எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பிரித்து வேலை செய்தால், இன்னும்கூட நிறையச் செய்ய முடியும்!”
26/03/08