நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை!

nepal-maoist-postersற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவுஇலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்புஇலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்

நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.

மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு

”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”

”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”

”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”

”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”

”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”

”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”

”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”

”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”

14-5-08

50 thoughts on “நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை!

 1. “ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ”

  இந்த பதில் நியாயமானது.

  இந்தியா ஏன் மாவோயிஸ்ட்டுகளைக் கண்டு பட படக்க வேண்டும்? எல்லைப் பிரச்சினைகள் தூண்டப் படும் என்றா? எல்லைகளுக்குள் அடைபட்டுப் போன பின் அவற்றைக் காத்து துண்டு நிலம் கூட அண்டை நாட்டுக் காரர்களால் ஆக்ரமிக்கப் பட்டு விடக் கூடாதே என்ற பயம் சற்று அதீதமாகி விட்டது எல்லா நாடுகளுக்குமே.ஒட்டகம் நுழைந்த கூடாரம் கதையாகி விடும் கேலிக்கூத்துகள் .

  • வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மிஸஸ் தேவ்!

 2. தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரப்பதிவரே

  வணக்கம். வாழ்த்துகள்.

  உங்கள் நட்சத்திர ஆக்கங்களை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறோம்.

  நன்றியுடன்

  நானே.

 3. நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது?//

  இந்தக் கேள்விக்கான பதிலை நோக்கி பயணிப்பதற்கு முன் நாம் புலிகளையும் , மாவோயிஸ்டுகளையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க இயலுமா என்ற கேள்விக்கான பதிலையே தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.

  ஒரே வரியில் இரண்டு போராட்டங்களும் வேறுவேறானவை என்று சொல்லிட முடியும். காரணங்கள். ?

  புலிகள் என்பவர்கள் ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தி அவ்வினத்தின் விடுதலைக்காகப் போராடுபவர்கள்.

  தாங்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த நிலம் இப்போது சிங்களவர்களின் ஆளுமைக்கு உட்பட்டு இருக்கிறது. அம்மண்ணின் மைந்தர்களை அடிமை மனோபாவத்துடன் பார்க்கிற பேரினவாதத்தின் அடிப்படையை எதிர்த்துப் போராடுகிறவர்கள் புலிகள்.

  ஆனால் நேபாள மாவோயிஸ்டுகளோ , தங்கள் நாட்டின் அரசியலமைப்பை தாம் கொண்ட கொள்கைகளுக்காக மாற்றப் போராடிய இயக்கம். அதற்கான வாய்ப்பு சனநாயக ரீதியாகக் கிடைத்ததும் போராட்டத்திற்கான தேவை இல்லாது போகிறது.

  ஆக , இரு வேறு களங்களுக்கு ஒரேவிதமான அணுகுமுறையைக் கையாளுங்கள் என்பது முற்றிலும் மூகாந்திரமற்றதொரு கருத்து.

  தவிர்த்து, இன்றைய சூழலில் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியது சிங்களப் பேரினவாதத்திற்கு அடிமைப்பட்டு வாழ்வது ஒன்றே.

  அதற்காகவா இன்றுவரை ஒரு லட்சம் தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்தார்களா ?

  அந்த அடிமை நிலையைத்தான் இன்றுள்ள தமிழ் மக்கள் விரும்புகிறார்களா ?

  ஒருவேளை அதைத்தான் விரும்புகிறார்கள் எனில் இந்தப் போராட்டம் எதற்கு ?

 4. வாழ்த்தியதற்கு நன்றி.

  //உங்கள் நட்சத்திர ஆக்கங்களை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறோம்//

  கொஞ்சம் நடுக்கமாதான் இருக்கு 🙂

 5. ஈழப்பிரச்சினையின் யதார்த்தத்தை புரியாத ஒருவரின் கருத்தாகவே உங்களின் பார்வை இருக்கிறது.
  73 க்கு முதல் 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் போராட்டம் நடத்தியே அதன்பினபே ஆயுதம் தூக்கினார்கள். 2001 பேச்சுவார்த்தைக்கு அத்திவாரம் போட்டதே புலிகள் தான் புலிகளால் அடிமேல் மேல் அடிக்கப்பட்டு இனியும் இயலாது என்ற நிலமையில் தான் அரசு பேச்சுக்கு வந்தது. அதுவும் புலிகள் தான் முதலில் யுத்தநிறுத்ததை அறிவித்தார்கள். ஆனால் அரசு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எந்த விடயத்தையும் நடைமுறைப்படுத்தாது, தன்னை பலப்படுத்துவதிலேயே காலத்தை கடத்தி வந்நது. இப்படி இழுத்தடிப்பதை விரும்பாத புலிகள் இடைக்கால தன்னாட்சி முறையொன்றை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால் அவ்வரசை கவிழ்த்தார் சந்திரிகா. இதுகாலம் காலம் காலமாக நடைபெறுவதுதான் ஆட்சியிலுள்ளவர் குடுப்பது போல் நாடகமாட எதிர்க்கட்சி தடுக்கும்

  நேபாளத்தில் மன்னர் பரம்பரை என்பது ஒரு சிறு குழுதான் ஆனால் இலங்கையில் ஒரு இனமே வெறிபிடித்து திரிகிறது. அண்மையில் மகாணசபைத்தேர்தலில் ஆளும்கட்சி பெற்ற அமோக வெற்றி அதற்கு சான்று.
  வாழ்கைச்செலவு பலமடங்கு உயர்ந்துள்ள போதிலும் யுத்தவெற்றிகளே அதன் வெற்றிக்கு காரணம்.
  அண்மையில் ஒரு அமைச்சர் கூறினார் இலங்கை மக்கள் மண்தின்ன வேண்டி வந்தாலும் யுத்தம் நிறுத்தப்பட மாட்டாது என்றார்.
  நேற்று இன்னுமொன்று.—
  http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dFj0C0ecQG7h3b499EE4d3g2h2cc2DpY3d436QV2b02ZLu2e

  (இந்த நிமல் சிறிபால டி சில்வா பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஒருவர்.)

  இத்தகையோரிடமிருந்நு ஜனநாயகரீதியில் உரிமையைப் பெறுங்கள் என்றால் எப்படி

  இதில் ஆகவும் மோசமான விடயம் எந்த வெளிநாடுகளை நம்பி புலிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தார்களோ அவர்களே இன்று பாராதிருக்கிறர்கள்.

 6. முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்.

  முன்பு எனக்கும் விடுதலைப் புலிகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தது.ஆனால் இது விமர்சனத்துக்கான தருணம் அல்ல.யார் போராளி,யார் சந்தர்ப்ப வாதி என்பது நிகழ்காலம் நிரூபணம் செய்வதால் ஈழம் சார்ந்த பாதைக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்.

  மேலும் இன உணர்வு என்ற வரையறையல்லாது அடக்குமுறைகள் எங்கு நிகழ்ந்தாலும் அதற்கு எதிரான குரலாகவே மனம் யோசிக்கிறது.அது ஜார்ஜ் புஷ்சின் ஈராக் யுத்தம் உட்பட.

 7. நட்சத்திர வாழ்த்துகள்.

  நேபாளத்தில் சாத்தியப்பட்டது ஈழத்தில் சாத்தியப்பட வாய்ப்பே இல்லை என்பதுதான் எதார்த்தம். மொத்த இலங்கை மக்கள்ள் தொகையில் ஏறத்தாழ 24 சதவீத மக்கள் தொகை கொண்ட தமிழர்களால் அவர்கள் விரும்பும் முழு மாற்றத்தை என்றுமே ஏற்படுத்திவிட முடியாது. இலங்கை அரசியலமைப்பிற்குட்பட்ட தமிழர் சுயாட்சி உரிமை என்பது ஏட்டுச் சுரக்காயாகவே இருக்கும். மேலும் அவ்விரு இன மக்களும் உள்ளப்பூர்வமாக இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பும் மிகக்குறைவே. இது போன்ற சிக்கல்கள் நேபாள மக்களுக்கு இல்லை. ஒரே மாதிரியான தீர்வை எல்லா பிரச்சனைகளுக்கும் முன் வைக்க இயலாது. அரசியல் போராட்டத்திலிருந்த்துதான் ஆயுதப்போராட்டமாக உருமாறியது. நடைமுறை சார்ந்த பார்வை இல்லை என்பது சரியான அடையாளப்படுத்தலாக இருக்க முடியாது. ஆயுதத்தை கைவிட்ட அரசியல் போராட்டம் என்பது ஈழத்தில் இனி என்றுமே சாத்தியமற்றது.

 8. நட்சத்திர வாழ்த்துக்கள்.

  // இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். //

  மிக சரியாக சொன்னீர்கள்.

  சுபன் said

  // நேபாளத்தில் மன்னர் பரம்பரை என்பது ஒரு சிறு குழுதான் ஆனால் இலங்கையில் ஒரு இனமே வெறிபிடித்து திரிகிறது. //

  ஒரு இனமே வெறிபிடித்து திரிகிறது என்பதை விட ஆட்சியாளர்கள் வெறிபிடித்து திரிகிறார்கள் என்பதே சரியாக இருக்கும். ஒரு கூட்டம் தவறு செய்கிறது என்பதற்க்காக அந்த கூட்டத்தை சார்ந்த இனமே தவறு செய்கிறது என்பது தவறான முடிவு.

  • பெரும்பாலான சிங்களவரின் மனோநிலையே அதுதான்.
   கடல்கடந்ந சிறிலங்காவின் வன்முறைகளுக்கு இது ஒரு சாட்சி

 9. இந்தக் கிழமையின் தமிழ் மணம் நட்சத்திரமாக நீங்கள் சிறப்பிக்கப் படுவது அறிந்து மகிழ்ச்சி! வாழ்த்துகிறேன். ஈழப் பிரச்சினையில் உங்கள் நடுநிலைப் பார்வை வரவேற்கத்த் தக்கது. தமிழ் நாட்டில் ஞாநி, அ. மார்க்ஸ் போன்ற மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் இத்தகையப் பார்வையில் எழுதியும், பேசியும் இருக்கிறார்கள். தற்போது உணர்ச்சிமயமான சூழல் நிலவுவதால், இத்தகைய சிந்தனையைப் பெரும்பாலோர் புரிந்து கொள்வதில்லை. எனினும், ஈழத் தமிழர்களுக்கு விடிவு இந்த வழியிலேயே கிடைக்கும் என்று எனக்குப் படுகிறது.

 10. தமிழ் நாட்டில் இருந்து இப்படி ஒரு யதார்த்தமான பதிவா!! வாழ்த்துகள்.

 11. Can someone say before 1973 how many tamils were killed?
  and between 1988 – 2009 how many tamils were killed?

  so did ltte’s arms struggle bring any solution to Tamils problem?
  can ltte win SLGov forces at this time?

  today what these ltte supporters cannot digest is that SLGov forces became as much if not more terrorists than Ltte..that is why now Ltte doesn’t have an answer to current SLForces.

  as Praba said “enemy determins the arms”..SLArmy took the same arms that Praba was bragging.

  • As you do not seems to beleive our words, I think it would be best for you to listen from a Sinhala academic about the Sri Lankan conflict. Hope it will brighten up your world.

   Dr.Brian Senewiratne is a Consultant Physician in Brisbane, Australia. His degrees include – MA (Cantab), MBBChir (Cantab), MBBS (Lond), MD (Lond), FRCP( Lond), FRACP. He is a Sinhalese. For many decades, Brian Senewiratne has stood up for the Tamil cause and has given expression to his own anguish at the suffering of the Tamil people. He has done so, despite death threats, physical attacks on his medical office in Australia, and vulgar abuse by Sinhala thugs. He has had the courage to openly stand up for that which he knows to be the truth and he has been willing to suffer for that which he believes to be right.

   click on the link below to watch 5 parts of video.
   VIDEO: Sri Lankan conflict

   Thanks.

 12. தமிழக அரசியல் கலாச்சாரம் : யமுனா ராஜேந்திரன்

  அழிக்கப்படும் அரசியல் : பிரபாத் பட்நாயக்

  புலிகளின் பின்னர்? : சபா நாவலன்

 13. ஈழப் பிரச்சனையையும், நேபாளத்தில் இருக்கும் பிரச்சனையையும் பொருத்தி பார்க்க முடியாது. இரண்டும் வெவ்வேறானவை.

  புலிகள் 2002ல் இலங்கை தீவில் 3ல் 1பங்கு இடத்தையும், மொத்த தமிழீழ நிலப்பரப்பில் சுமார் 80% இடத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். எனவே இதனைச் சார்ந்து ஒரு கூட்டாட்சியை முன்வைத்தனர். புலிகள் கேட்ட கூட்டாட்சிக்கும், சிறீலங்கா அரசு தர சம்மதம் தெரிவித்து இருந்த கூட்டாட்சிக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அது தான் இங்கே பிரச்சனை. அதுவும் தவிர அங்கே இருந்த சிங்கள கட்சிகளில் ஆளும்கட்சியாக இருக்கும் கட்சி எதை செய்தாலும், எதிர்க்கட்சி எதிர்க்கும். கூட்டாட்சியே கொடுக்க கூடாது என குரல் கொடுக்கும் சிங்கள பொளத்த இனவாத ஜேவிபி, ஜதிக ஹல உறுமிய போன்ற அமைப்புகள் மற்றொரு புறம்.

  இது தான் இங்கே சிக்கலை ஏற்படுத்தியது.

  என்னுடைய ஒரே ஆதங்கம் – 80% இடத்தை தங்கள் வசம் வைத்திருந்த புலிகள் அதனை அடிப்படையாக கொண்டு மீதம் உள்ள 20% இடத்தை அரசியல் ரீதியாக பெற முயற்சித்திருக்கலாம். எப்படி என்று என்னால் சொல்ல முடியவில்லை.

  மீதம் இருந்த 20% இடத்திற்காக இராணுவ பாதையில் சென்று மொத்த இடத்தையும் இன்று இழந்து விட்டோம் என வேதனைப்படவே முடிகிறது.

  ஒரு போராட்டம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் இராணுவ பாதையில் செல்ல முடியும். இராணுவப்பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு மாற்றி விட வேண்டும். புலிகள் அதனை செய்யவில்லை.

  இறுதிப் போர் என புலிகளே முழக்கமிட்டு இன்று ஈழப் போராட்டத்தினை முடித்து வைத்து விட்டனர்.

 14. நேபாளத்தோடு ஈழப்போராட்டத்தை ஒப்பிடவெளிக்கிடும் ஒவ்வொரு பொழுதிலும் இரண்டும் வேறு வேறான போராட்டங்கள், அதைப்போல இது இருக்க முடியாது ஈழத்தில் புலிகளின் போராட்ட முறை சரியானதே எனும் வாதம் முன்வைக்கப்படுவது வழக்கம்.

  இப்போக்கு முன்னர் புலிகள் இருந்த காலத்திலும் இப்போது தோற்ற பின்னரும் வைக்கப்படுகிறது.

  ஈழப்பிரச்சினை இனரீதியான ஒடுக்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் முழுக்க முழுக்க இனரீதியான பிரச்சினைதான் ஈழப்பிரச்சினை என்று பார்ப்பவர்கள் வரலாற்றையும் அரசியலையும் மிக மேலோட்டமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.

  சிங்களவர்-தமிழர் என்ற எதிரெதிர் நிலைகளூடாக மட்டும் ஈழப்பிரச்சினையை பார்க்க வெளிக்கிட்டால் ஈழப்பிரச்சினையை எப்போதும் புரிந்துகொள்ள முடியாது.

  ஈழத்தில் அதிகாரவர்க்கங்கள் பெரும்பான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கான முனைப்பிலிருந்தே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அதிகாரங்களுக்கு பிரித்தாள்வதற்கு ஏற்கனவே இங்கிருந்த இனரீதியான பகைமையும் மேலாதிக்கப்போக்கும் பேருதவி புரிந்தன.

  இந்த உள்நாட்டு அதிகார வர்க்கங்களின் நலனோடு பன்னாட்டு அதிகாரங்களின் நலன்கள் கூட்டுச்சேர்ந்துகொண்டதோடு ஈழப்பிரச்சினை ஒரு பன்னாட்டுப்பிரச்சினையாக மாறிப்போனது.

  நேபாளத்தை இப்போது நாம் ஒப்பிடலாம். அங்கே மாதேசிப்பிரச்சினை பிரதேசவாதத்தை அடிப்படையக்க்கொண்டது. அப்படியானால் அங்கே பிரதேசப்பிரச்சினை தான் இருக்கிறதென்ற முடிவுக்கு வரலாமா?

  தேசிய முரண்பாடுகளை ஊதி வளர்ப்பதும் அவற்றுக்கு எண்ணெய் சொரிவதும் அதிகார நலன்களுக்கு சாதகமானது.

  இலங்கையின் அதிகார வர்க்கங்கள் தொடக்கம், இன்றைய INGO க்கள் வரை இலங்கைப்பிரச்சினையை தேசிய முரண்பாடாக மட்டும் காட்டி கட்டமைக்க பெரு முயற்சி எடுக்கின்றன.

  சிங்கள மக்களையும் தமிழரையும் முஸ்லிம்களையும் மலையக மக்களையும் பிரித்து, முரண்பட வைத்து, பகைமையை ஏற்படுத்தி அடக்கியாள நினைக்கும் பன்னாட்டோடு கைகோர்த்த உள்நாட்டு அதிகார வர்க்கத்தை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதே இலங்கையில் பிரச்சினை தீர்க்கும் அழுத்தமான முதற்கட்டமாக இருக்கும்.

  இங்கே நேபாளப்படிப்பினை எமக்கு மிகவும் உதவி புரியும்.

  ஆனால் போராட்டம் அத்தோடு முடிந்துவிடாது. காலகாலமகா வளர்க்கப்பட்ட இன மேலாதிக்க மனநிலைகள் களையப்படவேண்டும். அதற்கான போராட்டமாக அது தொடரும்.

 15. நந்தினி ஈழப் போராட்டத்தையும். நேபாள போராட்டமும் வேறு வேறு, நேபாளம் இடது சாரிகளின் வர்க்க போராட்டம். புலிகள் வலதுசாரிகள் இனவிடுதலை முன்னெடுப்பார்கள். ஆகவே நேபாள அணுகல் ஈழத்துக்கு ஒத்துவராது. அத்தோடு 70% சிங்கள மக்கள் வாழும் இலங்கையில் அதுவும் போர் வெற்றி பெரும்பான்மைவாதமாக சிங்களர்களிடம் பரப்பி விடப்பட்டிருக்கும் சுழுலில் அரசியல் தீர்வு குரித்து பேசுவதற்கான சூழல் சிங்களத் தலைமையிடம் இல்லை. அத்தோடு புலிகள் செய்த பிழைகளை திருத்திக் கொண்டு . சுதந்திர தமிழிழீழமே இனி அதற்கு தீர்வு/

  • //அத்தோடு புலிகள் செய்த பிழைகளை திருத்திக் கொண்டு . சுதந்திர தமிழிழீழமே இனி அதற்கு தீர்வு//

   சரியாகச் சொன்னீர்கள்.
   வெளிநாட்டு மற்றும் தமிழ் நாட்டு தமிழர்களின் அரசியல் அழுத்தங்களின் ஊடாகவே இதை சாதிக்க முடியும்.

 16. உங்களிடம் ஈழபோராட்டம் தொடர்பான சரியான விளக்கம் இல்லை என்று தெரிகிறது

  நேபாள மாவோயிஸ்ட் போராளிகளின் கோரிக்கை வேறு விடுதலை படிகளின் கோரிக்கை வேறு.
  இரண்டுமே வேறுபட்ட ஆனால் நியாயமான போட்டங்கள்.
  இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீகள்

  ஒரு அடக்கபட்ட இனத்தின் விடுதலை போராட்டம் இது. அகிம்சைவழியில் ௨௦ வருடங்கள் போராடி பின் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது இது

  தனி தமிழ் ஈழமே சரியான முடிவென்ற போதிலும் சாதகமான தீர்வுகளை பரிசீலிப்பதாக சொன்னவர்கள் விடுதலை புலிகள்.

  எதை சொல்கிறீர்கள் நடைமுறை சார்ந்த அணுகுமுறை என்று?

 17. உங்களிடம் ஈழபோராட்டம் தொடர்பான சரியான விளக்கம் இல்லை என்று தெரிகிறது

  சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன? அல்லது இனப்பற்று என்றால் என்ன? என்று தெரியாத மனிதர்களுக்கு இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது……

  .ஆனால் ஒருவருக்கு புரிந்தது…..ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்-கின் தம்பி ரன்பீர் சிங்-கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன் யோணன் சிங்குக்கு ‘வீர சர்க்கார்’ விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன் விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

  ஆனால் ரன்பீர் சிங்கோ ‘இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால் நமக்குள் எந்த உறவும் இருக்காது’என்று சொல்ல யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!’

  ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே….. பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் அகிம்சையை போதிக்கும் காங்கிரஸ்-காரனுக்கும் வட இந்திய ஊடகங்களுக்கும் புரியவில்லை. புரியாததுபோல் நடிக்கிறார்கள்…

  அகிம்சையை பற்றி பேசும் எல்லோரும் காந்தி-யைவிட அகிம்சையில் உயர்ந்தவர்களா?…அப்படிபட்ட காந்தியே என்ன சொல்லியருக்கிறார்…

  ‘ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை கொல்லலாம்’ மற்றும் என் சகோதிரியின் கற்பு பறிபோகும்போது நிச்சயமாக என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது’

  இதனால்தான் பல கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளான தமிழர்கள் இன்று ஆயுதபோராட்டத்திற்கு தள்ளப்பட்டு போராடிகொண்டிருக்கிறார்கள்.

  எதை சொல்கிறீர்கள் நடைமுறை சார்ந்த அணுகுமுறை என்று?

  பத்திரிகையில் வேலை பார்த்தால் எல்லாம் தெரியுமென்ற நினைப்புடன் விடுதலைப்போராட்டத்தை கருப்பொருளாக எடுத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

  அது சரி மெத்தையில் படுத்திருந்து ஆய்வு செய்பவர்களுக்கு எம் வலி எங்கே தெரியும்!!!!

 18. மைக் கிடைத்துவிட்டால் தலைதெறிக்கப் பேசும் சிலர் இருக்கிறார்கள். ஈழப்பிரச்சினை என்று வந்துவிட்டால் எழுத இடம் கிடைத்துவிட்டதே என்பதற்காக ஏதாவது எழுதிக்கொண்டிருப்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

  புலிகள் மீதான ‘மோட்டு’ விமர்சனம் செய்பவர்கள் எவருமே ஒரு தீர்வை முன்வைப்பதில்லை. தமக்குக் கேள்வி மட்டுமே கேட்கத் தெரியும் என்று தருமி பாணியிற்கூட கதைவிட்டுக்கொண்டிருப்பார்கள்.

  புலிகள் எப்போது, என்ன செய்திருக்க வேண்டுமென்று நீங்களாவது சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அல்லது சுகுமாரன் ஐயாவிடமாவது கேட்டுச் சொல்லுங்கள்.

  புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?
  2002 இல் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கக் கூடாதா?
  சமஸ்டி அமைப்பைப் பரிசீலிக்க நாங்கள் தயார் என்று அறிவிக்காமல் தனிநாடு தான் ஒரே தீர்வு என்று விடாப்பிடியாக ஒற்றைக்காலில் நின்றிருக்க வேண்டுமா?
  தம்மைப் பயங்கரவாத இயக்கமாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தபோது, யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களாக ஒன்றிய நாடுகள் தொடரும் அருகதையை இழந்துவிட்டன எனச் சொல்லி அவர்களை வெளியேற்றியிருக்கக் கூடாது என்கிறீர்களா?
  ரணிலை ஜனாதிபதியாக வெல்ல வைத்திருக்க வேண்டுமா?
  கருணாவை வெளியேற்றாமல் இயக்கத்தை இரண்டாக உடைத்திருக்க வேண்டுமா?

  என்னதான் செய்திருக்க வேண்டும் புலிகள்?
  ‘நடைமுறை சார்ந்த அணுகுமுறை’ தொடர்பில் புலிகள் எப்போது என்ன செய்திருக்க வேண்டுமென்று நீங்களோ சுகுமாரனோ விளக்கமளிப்பீர்களென நம்புகிறேன்.

  நானறிய சோபாசக்தி மட்டுமே தீர்வொன்றை முன்வைத்திருந்தார். அது ‘புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டுச் சரணடைவது’. அவர் சொன்ன பிறகுதான் இணைத்தலைமை நாடுகளே அந்தக் கோரிக்கையை வெளியிட்ட என்பது இன்னொரு முக்கிய விசயம்.

  சரி, நீங்கள் சொல்லுங்கள், நாங்கள் கேட்கிறோம்.
  ==========================
  ஐயா மயூரன்,
  ‘பிடல் காஸ்ரோவை’ப்போல எதரிப்படையாட்களையும் தமது பக்கம் திரட்டிக்கொண்டு புலிகள் போரிட்டிருக்க வேண்டும் என்று விளாசிய ‘மார்க்சிய – லெனினிய – இடதுசாரி'(இன்னும் வேற என்ன பேருகள் இருக்கோ தெரியேல; இதெல்லாம் அவரே சொல்லிக் கொண்டதுதான்) ‘டோளரை’க் கூடப் பார்த்திருக்கிறோம். நான் விளங்கிக் கொண்ட ஒரேவிசயம் அந்த டோளருக்கு ஈழப்பிரச்சினையும் தெரியாது; கியூபப் போராட்டமும் தெரியாது எண்டதுதான்.

  நேபாள மாவோவாதிகளிடமிருந்து நாங்கள் எந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இன்னமும் நீங்களோ உங்கள் தரப்போ தெளிவாகச் சொல்லவேயில்லை. சிலராவது ‘அவர்களைப் போல் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு வருதல்’ என்றளவிலாவது சொல்லியிருக்கிறார்கள்.
  மாவோ வாதிகளுக்கு அங்கிருந்த மக்கள் ஆதரவின் சதவீதமென்ன? இலங்கையில் இருக்கும் நிலைமை என்ன? சரி, இலங்கையில் ‘ஒழுங்கான’ இடதுசாரிகளுக்கு இருக்கும் வாக்கு சதவீதமென்ன?
  அட! நாங்கள் ‘நடைமுறை சார்ந்த அணுகுமுறை’ பற்றியெல்லோ பேசிக்கொண்டிருக்கிறம், இதுக்குள்ள இந்தக் கேள்வியளைக் கேட்டுக்கொண்டிருக்கிற என்னை என்ன சொல்ல?

  ===================
  தமிழ்சசியின் பின்னூட்டம் மயூரனுக்குச் சிரிப்பை வரவழைத்த காரணம் தெரியவில்லை, ஆனால் எனக்கும் வந்தது. அவருக்கும் புலிகள் என்ன செய்திருக்க வேண்டுமென்று சொல்லத் தெரியவில்லை. (ஆனால்,சொல்லத் தெரியவில்லை என்பதை நேர்மையாக ஒத்துக்கொள்கிறார் பாருங்கள்; அங்கேயிருக்கிறது எழுத்தாணிப் போராளிகளுக்கும் இவர்களைப் போன்ற சாதாரணப் பதிவர்களுக்குமுள்ள வித்தியாசம்).

  பார்ப்போம், நடைமுறை சார்ந்த அரசியல் அணுமுறையில் புலிகள் எங்கே பிழைவிட்டார்களென்று ஆய்வாளர்கள் சொல்லும் பதிலை.

  – கொண்டோடி –

 19. இன்னொரு விசயம்!’

  போர் புரியும் தரப்புக்களில் புலிகள் மட்டுமே தெளிவான, சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தவர்கள். ஏற்கனவே பலவிடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டம் அது. அது தொடர்பாகப் பேசக்கூட சிங்களத் தரப்பு முன்வரவில்லை.

  அதைவிட இன்றுவரை இனப்பிரச்சினைக்கான தீர்வாக சிங்களத் தரப்பிடமிருந்து எந்தவொரு தீர்வுத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை. இரண்டு மாவீரர்நாள் உரைகளிற்கூட தீர்வுத்திட்டம் ஏதாவது உங்களிடமிருந்தால் அதை வெளியிடுங்கள் என்று ராஜபக்சவிடம் கேட்கப்ப்பட்டது. ஆனால் எந்த எதிர்வினையுமே இல்லை. அட! எங்கட சோபாசக்தி கேட்டுக்கூட ராஜபக்ச எந்தத் தீர்வையும் இதுவரை முன்வைக்கவில்லை.

  புலிகளின் ‘இடைக்கால நிர்வாக சபை அமைத்தலும் ஐந்து வருடங்களின் பின்னான பொதுத் தேர்தலும்’ என்ற அணுகுமுறை நடைமுறை சாராததா?

  நடைமுறை சார்ந்த அரசியற் பாதையைத் தெரிவு செய்யப் புறப்பட்டதாலேயே இன்று போராட்டம் அழிவை நோக்கிச் செல்ல வேண்டி வந்ததென்று அங்கலாய்க்கும் களத்து மக்களுக்கு உங்கள் பதிலென்ன?

  • “போர் புரியும் தரப்புக்களில் புலிகள் மட்டுமே தெளிவான, சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தவர்கள்”
   if they genuinely did then the problem should have been solved..
   what they asked is always “unacceptable” for any party and in the end they lost the war hence all Tamils lost our land..livly hood..everything…
   we became Palestinians….atleast Palestinans will get money from Arab countries.. now we will be refugees all over the world..refugees in Srilanka..Canada..Europe…everywhere..
   Thanks to LTTE and their blind belief in their military strength…

   • பிரபா, நீஙகள் சொன்னது சரியே . அவர்கள் அகதிகளிடம் இருந்தே நன்றாக பணமும் பெற்று கொண்டார்கள்.

 20. தோழர்.மு.வி.நந்தினி நட்சத்திர எழுத்தாராக தேர்வுபெற்றமைக்கு வாழ்த்துகள்.

  தங்களின் படைப்புகள் இந்த ஆணாதிக்க சமூகத்தின் முகத்தில் அரைகின்றன. தங்களைப்போன்ற பெரியார் கண்ட பெண்கள் இக்காலகட்டதில் பெண் இருத்தலை ஆணிஅடிக்க முடியும் என நினைக்கிறேன் தொடருங்கள்.

  தங்களின் தளத்தை என் தளத்துடன் இணைத்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு பெண்படைப்பாளிகளை ஊக்குவிப்பதுதான்.

 21. ஈழ பிரச்சனையை பற்றி எழுதி பிரபலமடைய வாழ்த்துக்கள்,தயவு செய்து உங்களுடைய
  மண்டபம் அகதி முகாமுக்கு போய் அங்கே இருக்கிற மக்களைப்பற்றி ஒரு கட்டுரை தருவீர்களா? சோபாசக்தி,புஷ்பராஜா ஆகியோர் மிக சிறந்த கற்பனாவாதிகள் ஏற்றுக்கொள்கின்றோம்.மற்றும் காட்டுயிர் பற்றி நிறைய எழுதுங்கள்

 22. மாயூரன் சொன்ன கருத்துகள் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவை. ஆனால் இவை எத்தனை பேருக்கு புரியும்? இன்றைக்கும் தமிழ் தேசியவாத கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பவர்களால் பிரச்சினையை பார்க்க முடியாது. ஐயா… கனவான்களே…நேபாள பிரச்சினை வேறு, ஈழ பிரச்சினை வேறு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு அரசியல் தீர்வு எப்படி எட்டப்பட்டது? அது தான் கேள்வி. இதனை இந்தப் பதிவர் சரியாக விளக்கத் தவறி இருக்கலாம். ஆனால் அதற்காக பதிவரையே குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் தமது தவறுகளில் இருந்து இன்னும் பாடம் படிக்கவில்லை. முதலில் அவர்கள் தாங்கள் தவறு செய்ததை ஒத்துக் கொள்கிறார்களா? அதுவும் இல்லை. தமிழர்களை இனிமேல் கடவுள் தான் காப்பற்ற வேண்டும்.

 23. ஐயா பிரபு,

  சும்மா உளறிக் கொண்டிருக்காமல் தெளிவாகச் சொல்லுங்கள், புலிகள் முன்வைத்த தீர்வுத் திட்டத்தில் எவ்விடயம் சாத்தியமற்றது? எவ்விடயம் ஏற்றுக்கொள்ள முடியாதது? யாருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது? அதென்ன ஒருத்தராலயும் ஏற்றுக்கொள்ள முடியாதது எண்டு எண்டு ஒரு வண்டில்? இதுக்குள்ள இன்னொரு பூனையின்ர ஒத்தூதல் வேற.

  மீளவும் எனது முதலாவது பின்னூட்டத்தை வாசிக்கவும். உங்களைப் போன்றவர்களைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். யாரும் விபரங்களோடு கதைப்பதில்லை. சும்மா புலிப்பாசிசம் எண்டு அலம்புவதைத்தாண்டி உருப்படியாக ஒரு விசயத்தைப் பற்றிப் பேசத் தெரியாது. அது உங்களது அரசியல் வங்குரோத்துத்தனம்.

  இவ்வளவுக்கும் புலிகள் தாம் வைத்த தீர்வுத்திட்டம் தான் முற்றிலும் இறுதியானது என்று சொல்லவேயில்லை. அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம், இதுவோர் அடிப்படைத் திட்டம், முதலில் அதைப்பற்றிப் பேசவேண்டும் என்று மிகத் தெளிவாகவே சொல்லியிருந்தார்கள்.

  இன்னும் நான் முன்வைத்த விமர்சனங்களுக்கு யாரிடமிருந்தும் விளக்கங்கள் வரவேயில்லை. பிரபு, நீங்களாவது சொல்லுங்களேன் எனது முதலாவது பினூட்டத்துக்கான எதிர்வினையை?

  • Kondodi
   then why is this war going on if LTTE didn’t want to fight?
   please don’t vomit what LTTE feeds you..
   the bottom line is LTTE was not ready to “NEGOTIATE”
   SL GOV used ltte’s stupidness and built their support base and now destroyed ltte and as a bonus made all tamils stateless…
   we are talking about ltte’s GENIUSNESS …
   beside did ltte ever asked Tamils what WE really wanted? do we really want the war to go on?
   Prabharan was in dream land..and now India and Srilanka made sure that Tamils will always be in Dreamland.
   OUR POINT IS LTTE WAS STUPID TO START THE WAR..
   LTTE WAS STUPID ENOUGH NOT TO REALISE WORLD ORDER..
   LTTE WAS STUPID ENOUGH TO RETURN FROM NEGOTIATIONS WITH EMPTY HANDS..
   WE TAMILS ARE STUPIDS FOR SUPPORTING LTTE

 24. அவர்கள் அரசர்களுக்கு எதிராக போராடினார்கள். ஈழத்தமிழினம் அரக்கர்களுக்கு எதிராக போராடுகிறார்கள். பிரபாகரன் பிறக்க முதலே ஈழத்தில் தமிழரின் போராட்டம் தொடங்கி விட்டது. அறவழிப் போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்ட போதே ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது. புலிகளின் சில அணுகுமுறைகள் அவர்களை உலக அரங்கில் பயங்கரவாதிகளாக்கியது உண்மைதான். ஆனால் சிங்களதேசம் என்றுமே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.

  Sri Lankan Conflict by a Sinhalese acadamic
  CLICK HERE

  • ஈழத்தில் தமிழரின் போராட்டம் தொடங்கி விட்டது. அறவழிப் போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்ட போதே ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.

   then shouldn’t tamils accept the RESULT OF MILITARY SOLUTIONS???? why crying now?
   Tamils(LTTE) took military path..so the solution will be a military solution

   • Praba, I am NOT worried about military solution. But the geoncide of Tamils. Do you justify that Tamils should be wiped out Eelam?!

 25. அன்புள்ள நந்தினி. உங்கள் பதிவு படித்தேன். ஏனைய பதிவுகள் சிறப்பாக இருக்கும் அதே நேரம் புலிகள் குறித்தும் ஈழம் குறித்தும் நீங்கள் எழுதியிருக்கும் பதிவுகளின் அடிப்படைகளே தவ்றாக இருக்கிறது. புலிகள் மீது எனக்கும் விமர்சனம் இருக்கிறது. அதை வெளிப்படுத்தியும் வந்திருக்கிறேன். ஆனால் இப்போது புலிகளை விமர்சிப்பது விட்டு முழுமையாக அவர்களை நான் ஆதரிக்கிறேன். இதில் யாரைப்பற்றியும் எதற்காகவும் கவலை கொள்ளப் போவதில்லை. ஆனால் நாம் உத்தபுரம் பற்றிப் பேசுவோம்,. காசா ,ஆப்கான், ஈராக் எல்லாம் பேசுவோம் ஆனால் ஈழம் என்றூ வந்தால் அதை இனவாதமாகப் பார்ப்போம். இப்படியான சி,பி,.எம் மனோபாவத்தை என்னவென்று சொல்ல. பல நேரங்களில் அரசியல் ரீதியாக் நம் கருத்துக்க்களை முன் வைக்க நமது இருத்தல்களே காரணமாக அமைந்து விடுகிறது. யாரோ ஒரு தரப்பை குஷிப்படுத்தும் என்றால் நமது கொள்கைகளை வெளிப்படுத்துகிறோம்..இது தவறு நந்தினி. கொடூரமான இந்தப் போரில் மக்களை புலிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர்களின் பார்பரீயப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற மக்களின் நிலை குரீத்து நீங்கள் ஏன் பேச மறூக்குறீர்கள்? போருக்குப் பிந்தைய சூழலில் இனி தமிழ் மக்கள் அங்கு சிவில் உரிமைகளோடு வாழ முடியும் என நினைக்கிறீர்களா? புலிகளுக்கு மாறாக யாரையாவது உங்களால் ஈழத்தில் கைக்காட்ட முடியுமா?

  இங்குள்ள இடதுசாரி அறிவு ஜீவிகளின் ஈழம் குறித்த அணுகுமுறை மிகக் கேவலனது. இந்து ராம்தான் இவர்கள். இவர்கள்தான் இந்து ராம்கள் இரண்டிலும் ஒரு வேறுபாட்டையும் காண முடியவில்லை. என்னைப் பொறுத்த வரை நான் ஒரு தேசீயவாதி அல்ல ஆனால் இலங்கையில் சிங்களர்களும் தமிழர்காளும் சேர்ந்து வாழும் சாத்தியங்களே இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு., இதைச் சொல்ல தமிழனாகவோ, தெலுங்கனாகவோ, கன்னடனாகவோ இருக்க வேண்டிய அவ்சியம் இல்லை. மனித குலத்தின் பால் அன்புள்ளவர்களாக இருந்தால் போதுமானது.

  • இலங்கையில் சிங்களர்களும் தமிழர்காளும் சேர்ந்து வாழும் சாத்தியங்களே இல்லை.

   That is why SIngalese are saying Tamils should go back to Tamil Nadu 🙂

 26. பார்பரீயப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற மக்களின் நிலை குரீத்து நீங்கள் ஏன் பேச மறூக்குறீர்கள்?

  THIS IS LTTE’S FAULT THEY SHOWED PHOTOS OF CIVIL PEOPLE BEING TRAINED BY LTTE.. HAVING SEEN THAT WOULD ANY ARMY LET THESE PEOPLE GO FREE?? SO THEY CAN DIG GUN AND SHOOT AT ARMY..WHAT’S FOOL PARADISE YOU ARE FROM???
  DO YOUK KNOW WHY IPKF WAS LIFTING SCHOOL GIRLS’ FROCKS? BECAUSE ONE GENIUS LTTE CAME IN SCHOOL GIRL UNIFORM, BROUGHT THE GUN UNDER THE SKIRT AND SHOT AT ARMY … THEN ARMY TOOK IT AS A CHANCE TO “SEARCH” FOR GUNS…

  போருக்குப் பிந்தைய சூழலில் இனி தமிழ் மக்கள் அங்கு சிவில் உரிமைகளோடு வாழ முடியும் என நினைக்கிறீர்களா?

  DID PEOPLE LIVE WITH ALL CIVIL RIGHTS UNDER LTTE?
  WAS THERE ANY DEMONSTRATIONS AGAINST LTTE OR LTTE’s ACTIONS?

  புலிகளுக்கு மாறாக யாரையாவது உங்களால் ஈழத்தில் கைக்காட்ட முடியுமா?
  WEREN’T THERE POLITICAL PARTIES BEFORE LTTE?
  WHO ELIMINATED POLITICAL PARTIES? SL GOVT OR LTTE?
  TODAY THOSE WHO ARE AGAINST LTTE MUST ALIGN WITH SL GOVT FOR PROTECTION OTHERWISE LTTE WILL KILL THEM..
  LTTE IS NOT NEEDED FOR TAMILS

  • Girls as young as 14 year olds gang raped ‘n left to die by Mahitler Rajapakse’s Forces. There are reports from Nazi style Vanni concentration camps that girls are kidnapped ‘n sent to secret locations where they are sexually abused by members of top level defence establishment.

   watch this video secretly filmed by UK’s CHANNEL 4 NEWS @ VIDEO: CHANNEL 4 NEWS

 27. தமிழ்மணம் போன்ற ஒரு தளத்துக்கு நட்சத்திரம் ஆவது என்பது வாழ்நாளில் நீங்கள் செய்த ஒரு மாபெரும் பாக்கியம்! அதேசமயம் போராட்டங்கள் பற்றிய உங்கள் வாதங்கள், ஒப்புமைகள், வரிகள் எல்லாம் என்னை மிகவும் புளகாங்கிதப்படுத்திவிட்டன! நேபாளத்தில் யார் யாரை எவ்வாறெல்லாம் எரித்துக்கொம்றார்கள்? உயிர்வாழ்க்கையே எப்போது இனங்கள் ரீதியாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது? மொழி ரீதியான பிரச்சினைகள் நேபாளத்தில் என்ன என்ன? என்றெல்லாம் கொஞ்சம் விளக்கினால் மேலும் புளகாங்கிதப்பட வசதியாக இருக்கும் என்பதால் இந்தப்பின்னூட்டம். நன்றி!

 28. //தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவு-இலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்பு-இலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். //

  யார் சிந்திக்க மறுக்கிறார்கள்? உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், விடுதலைப்புலிகளை நடுநிலையோடு விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது விமர்சிப்பதற்கான நேரமா என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அரசாங்கத்தின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை உலக நாடுகளனைத்தும் கண்டித்துவரும் வேளையில் உங்களிடமிருந்து வரும் இத்தகைய விமர்சனம், நடுநிலைமையானது என்பதை நீங்கள்தான் சொல்லிக்கொள்ள வேண்டும். முடிந்தால் இலங்கையில் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வை, நீங்கள் விரும்பும் தீர்வை சற்று தெளிவாக்குங்கள். விடுதலைப்புலிகள் என்ற இயக்கமே இல்லாமல்போகும்பட்சத்தில் (அப்படி நிகழுமென்றால்) எப்படிப்பட்ட தீர்வு தமிழர்களுக்கு இலங்கை இனவெறி அரசிடமிருந்து கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

 29. இப்போதைக்கு விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனத்தை தள்ளி வைக்கிறேன்.
  உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் புதுவிசை இதழில் வெளிவந்த ந.சுசீந்திரனின் நேர்காணல் விளக்கம் தரும் என நம்புகிறேன்.
  http://www.keetru.com/visai/apr09/suseendran.php

 30. ஈழ விடுதலைப் போருக்கு எதிரான இந்திய ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ள இந்நிலையில் தமிழர்கள் சிலருடைய கருத்துக்கள் அடிமை மோகத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி எட்டப்பர்கள் எந்தக் காலத்திலும் உள்ளனர் என்பதற்குச் சான்றுகளும் ஆகும்.

 31. இப்போதும் யோசிக்க வைக்கும் பதிவு…
  வீழச்சியடைந்த பின்பும் நாம் மாற்றங்களைப் பற்றி சிந்திக்கா விட்டால்..விளைவு இன்னும் மொசமாகும்.

 32. ஈழப்போராட்டம் ஒரு இயக்கத்தின் குரலாக பதியப்படுவது தான்…இத்தனைக்கும் காரணம்…ஈழப்பிரச்சினை பல போராளிக் குழுக்களால் தொடங்கப்பட்டு அதை இறுதியில் புலிகள் கைளில் வந்து சேர்ந்தது…ஆனால் அது முழுமை பெற்வில்லை…அதன் காரணம் இயக்க கண்ணாடி கொண்டு அனைவரையும் பார்த்தது தான். அனைவரையும் ராணுவத்தினராக பார்க்கமுடியாது…மக்கள் இல்லையென்றால் ராணுவம் எதற்கு….?….சில நேரங்களில் ஆதரவு தெரிவிக்கலாம்…அது இயக்கத்துடன் ழுழுதும் இணைத்து கொண்ட ஆதரவாக எல்லாவற்றையும் துறந்து விட்ட ஆதரவாக மாறாது. இது தான் இலங்கையிலேயும் காணப்படுகிறது…அப்படி முழு ஆதரவு என்றிருந்தால் தேர்தலையை மக்கள் புறக்கணித்திருப்பார்கள்…எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை இலங்கைத் தமிழ் மக்கள் வித்திட்டிருப்பார்கள்….எந்தளவுக்கு புலிகள் தீவிரவாத இயக்க (தீவிர போக்கு) வளர்ச்சிகளில் பெரும்பங்கு வகித்தனவோ அதே அளவில் மக்களின் வெறுப்புக்கும் அதன் போக்கே காரணமாயின…இது தான் உண்மை…இது தான் இயக்கப்பார்வை….மக்களை சாத்வீகப்பார்வை கொண்டு பார்க்க இந்த இயக்கங்கள் தவறிவிட்டன…ஒரு இலங்கை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை….புலிகள் ஹிட் அன்ட் ரன் என்ற முறையிலேயே தாக்குதல் நடத்தினர் என்பது எதனால்? என்பதற்கு…. அப்போதுதான் ராணுவம் அவர்களை துன்புறுத்தும்…அப்படி துன்புறுத்தினால் ஆயுத போராட்டத்தை வலியுறுத்துவார்கள் என்று குறிப்பிட்ப்பட்டிருந்தது…அப்படியென்றால் இது முற்றிலும் இயக்கப்பார்வை தான். மக்களின் தியாகப் பிணங்களை வைத்து தான் புலிகளின் ஆயுத போராட்டம் இதை ஜீரணிப்பதற்கு கட்டமாயிருக்கிறது. இங்கே எதிர்பாராதது (விபத்து) என்பது எதர்பாத்தது போலாகிவிட்டது. இதை அந்த இயக்கத்தலைவர் பல இடங்களிலும் பல முரண்பட்ட வகையில் வெளிப்படுத்தியிருப்பது….மக்கள் விரோதப் போக்கை தான் வெளிப்படுத்துகிறது. இது 1995 ஆம் ஆண்டுகளிலேயே இம்மாதிரி கட்டுரைகள் அங்கே வந்து விட்டன. அதை எழுதிய பத்திரிகையாளரும் கொல்லப்பட்டுவிட்டார். தமிழர்களுக்கு எதிரானவர்களை அவர்கள் தமிழர்களானாலும் எதிர்ப்பது என்பது எதிர் கருத்து கொண்டவர்களையும் கொல்வது என்ற நிலைக்கு தள்ளியது. அது தான் சகோதர யுத்தமாக மாறியது. இயக்கத்திற்கு இது சரி…சாத்வீகத்திற்கு மக்கள் பார்வைக்கு இது சரியல்ல.போராடுவது எதற்காக மக்களிடம் சாத்வீகத்தை நிலைநாட்டுவதற்காக…நம் மக்களை காப்பதற்காகத்தானே…இவ்விஷயத்தில் எல்லா இயக்கங்களும் தவறு செயதிருக்கின்றன…ஆனால் இதில் அதிகம் இவர்கள் தான். இது தான் வீழ்ச்சிக்கான காரணம். இப்போது இலங்கையில் மக்கள் புறக்கணிப்பதற்கும் காரணமாக இந்த விஷயம் தான் இருக்கின்றது. போதாக்குறைக்கு அண்டை நாட்டின் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவில்லை. இந்தியா பயிற்சியிளிக்கும்பொழுதே அதன் மீது திரும்ப வேண்டியிருக்கும் அப்போது பயிற்சி அளித்தவரையே சுடவேண்டியிருக்கும் என்று ஆரம்பத்திலேயே நினைத்தது…விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தான் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புலிகளை தவிர பிற ஏனைய இயக்கங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணக்கமாகவே இருக்கின்றன என்றும் குறிப்பிட பட்டிருக்கிறது, இன்றுவரை அதன் அரசியலிலும் தலையிடுவது…விமர்சிப்பது என்பது புலிகள் மேல் மக்களுக்கு எதிரான பார்வையைத்தான் காட்டுமே தவிர…ஆதரவுப்பார்வையை காட்டாது…எந்த அரசியலிலும் நுழையாமல் விலகி நிற்பது தான் சாலச்சிறந்தது. எல்லோரைம் தன்பக்கத்தில் வைத்து கொண்டிருந்தால் ஆதரவு பலமடங்கு கிட்டியிருக்கும்.
  இனியாவது ஒற்றுமையுடன் செயல்பட்டு அங்குள்ள மக்களை ஒன்றிணைக்கும் வேலைகளில் முமுறமாக எல்லா இழக்கங்கவ்களுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும். இங்கே இருக்கும் (இந்தியா , தமிழகம்) அரசியலையும் மக்களையும் விமர்சித்து கொண்டிருப்பது வீண்.
  .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.