இறுதியாக… நன்றி!

நான் வலைத்தளத்தில் எழுத  ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு  ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர  பதிவராக  தேர்ந்தெடுத்தமைக்கு  நான்  நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 thoughts on “இறுதியாக… நன்றி!

 1. தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம்.

  *************

  எதற்கெடுத்தாலும் தமிழ்மணத்தின் மேல் தான் பழி போட வேண்டுமா ??

  தமிழ்மணம் நீக்கியிருந்தால் உங்கள் பதிவுகள் சூடான இடுகைகளில் எப்படி வந்தது ? இன்னும் நட்சத்திர பக்கத்தில் எப்படி உங்கள் பதிவு உள்ளது ?

  பத்திரிக்கையாளரான உங்களால் என்ன பிரச்சனை என ஆராயக்கூட முடியவில்லை பாருங்களேன்…

  உங்கள் இடுகைய URLல் பிழை உள்ளது. கீழே உள்ளது உங்களது இடுகை URL. சொடுக்கி பாருங்கள். அப்படி ஒரு இடுகை இல்லை என வருகிறது.

  தலைப்புகளை நீண்டதாக கொண்டிருந்தால் wordpress இவ்வாறு செய்யும்

  https://mvnandhini.wordpress.com/2009/05/01/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae-2/

  Error 404 – File not Found

  Sorry, but the page you were looking for could not be found.

 2. https://mvnandhini.wordpress.com/ சென்றால் உங்களது ”இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை” என்ற பதிவு தெரிகிறது. நான் அப்படி தான் படித்தேன். கருத்து சொல்ல ஒன்றுமில்லை. சுகுணா திவாகருக்கு அடுத்து உங்களுக்கு தான் இணைய உலகின் அ.மார்க்ஸ் சீடர் என்ற பட்டம் கிடைக்க போகிறது. கூடவே அறிவுஜீவி என்ற பட்டமும் கிடைக்கும். வாழ்த்துக்கள்

  ஆனால் அந்த இடுகையை அதன் தனிப்பக்கத்தில் வாசிக்க முடியவில்லை. பக்கம் இல்லை என்று வருகிறது…

  உங்களது Dashboard சென்று இதனை சரி செய்யலாம்…

 3. /சுகுணா திவாகருக்கு அடுத்து உங்களுக்கு தான் இணைய உலகின் அ.மார்க்ஸ் சீடர் என்ற பட்டம் கிடைக்க போகிறது/

  மிஸ்டர் சசி என்ன கிண்டலா? showபா, சுgun இத்தனை பேரு ஸாமி தரிசனத்துக்கு நிக்கற லைன்ல எடைல நெழைஞ்சா அழாப்பி ஆட்டமா தெரியல?

 4. ஷோபா சக்தி தான் தனி இணையதளம் வைத்திருக்கிறாரே.. பின் நீங்கள் எதற்கு?…

  ஈழப்பிரச்சனையில் ஆ.மார்க்ஸ், ஆதவன் தீச்சன்யா, ஷோபா சக்தி வரிசையில் ஒரு கோமாளி…

 5. நந்தினியைப் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன் இணையத்திலும் பார்ப்பதில் மகிழ்ச்சி வாழ்த்துகள்.

 6. பிரச்சினைகள் இருப்பினும் உங்களைப்பற்றி அறியத்தந்த தமிழ்மணத்திற்கு நன்றி!!

 7. ஒவ்வொருவரும் கொள்கை அடிப்படையில் வேறுபடுவது இயற்கை!!
  இதனால் தளர்வடையாமல் தொடர்ந்து எழுதவும்!!
  வாழ்த்துக்கள்!!

 8. நட்சத்திரப் பதிவராகி.பல பத்வுகளை எழுதியமைக்கு நன்றி. உங்களை பலரும் இலங்கை சிக்கல் தொடர்பான பதிவு கூரித்து விமர்சித்ததையும் உங்கள் பதிவையும் பார்த்தேன். அந்தப் பதிவில் உங்கள் ஆர்வம் தெரிந்தது. ஆனால் நீங்கள் வாசித்த அல்லது அறிந்த ஒரு சில முன் முடிவாளர்களின் கருத்துக்களைக் கொண்டு விள்க்கம் கருத்தும் சொல்ல முன் படும் உங்களின் நிலை குறித்து எனக்கும் விமர்சனம் இருகிறது.

  விரிவாக நீங்கள் அறிந்து கொள்வதற்க்கு தயாராக இருப்பீர்கல் என நம்புகிறன். அதன் பின்னரும் இதுதான் உங்கள் நிலை என்றால் அது உங்களின் அரசியல் கருத்து நிலையாகும் சோபா மற்றும் மார்க்ஸ் ஆகியோருக்கு இருபதைப் போல அப்போது உங்களால் எதிர் அரசியல் கருத்து நிலையாளர்களை எதிர் கொள்ல முடியும்

 9. தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகம்தான் உங்களைத் தொடர்பு கொண்டு நட்சத்திரமாக இருக்க அழைப்பு விடுத்தது. “தொழிற்நுட்ப விவரங்கள் தான் சரியாகப் புரியவில்லை” என்று உங்கள் அஞ்சலில் தெரிவித்திருந்தீர்கள். எனவே குறைந்தபட்சம் உங்கள் இடுகையிலுள்ள சிக்கலைப் பற்றி (அது தமிழ் மணத்தால் விளைந்தது என்றே வைத்துக் கொள்வோம்) தமிழ்மணம் நிர்வாகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம். அதைவிடுத்து உங்கள் பதிவிலுள்ள தொழில் நுட்பச் சிக்கலுக்கும் தமிழ்மணத்தின் மீது உள்நோக்கம் கற்பித்துக் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள்.

  உங்களுடைய அரசியல் கொள்கைகளையெல்லாம் முன்னரே அறிந்தும், உங்கள் நோக்கங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பாரபட்சமின்றி வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல் படும் தமிழமணத்துக்கு இது போன்ற வசைகள் புதிதில்லை. இதுதான் தமிழ்மணம் மேலும் செயல் படுவதற்கான தேவை.

  ஏனெனில் வணிக நோக்கத்துடன் செயல்படும் செய்தி நிறுவனங்களிலும், கருத்துரிமைக்காகவே குரல் கொடுக்கும் நிறுவனச் சிற்றிதழ்களிலும், வலைப்பதிவுகளிலும் கூட இதெல்லாம் சாத்தியமில்லை என்பதை பத்திரிகையாளரான நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களோ இல்லையோ, தமிழ்மணத்தைப் பயன்படுத்தும் பதிவர்கள் பெரும்பாலோர் (மேற்படி நிறுவனங்களின் பிரதிநிதிகளைத்விர) உணர்ந்திருக்கின்றனர்.

  உங்களுடைய உள்நோக்க வசைகளை மீறியும் தமிழ்மணம் செயல்படும் என்று உறுதியளிக்கிறோம்.

 10. //குறைந்தபட்சம் உங்கள் இடுகையிலுள்ள சிக்கலைப் பற்றி (அது தமிழ் மணத்தால் விளைந்தது என்றே வைத்துக் கொள்வோம்) தமிழ்மணம் நிர்வாகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம். அதைவிடுத்து உங்கள் பதிவிலுள்ள தொழில் நுட்பச் சிக்கலுக்கும் தமிழ்மணத்தின் மீது உள்நோக்கம் கற்பித்துக் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள்.
  உங்களுடைய அரசியல் கொள்கைகளையெல்லாம் முன்னரே அறிந்தும், உங்கள் நோக்கங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பாரபட்சமின்றி வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல் படும் தமிழமணத்துக்கு இது போன்ற வசைகள் புதிதில்லை. இதுதான் தமிழ்மணம் மேலும் செயல் படுவதற்கான தேவை.
  ஏனெனில் வணிக நோக்கத்துடன் செயல்படும் செய்தி நிறுவனங்களிலும், கருத்துரிமைக்காகவே குரல் கொடுக்கும் நிறுவனச் சிற்றிதழ்களிலும், வலைப்பதிவுகளிலும் கூட இதெல்லாம் சாத்தியமில்லை என்பதை பத்திரிகையாளரான நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களோ இல்லையோ, தமிழ்மணத்தைப் பயன்படுத்தும் பதிவர்கள் பெரும்பாலோர் (மேற்படி நிறுவனங்களின் பிரதிநிதிகளைத்விர) உணர்ந்திருக்கின்றனர்.
  உங்களுடைய உள்நோக்க வசைகளை மீறியும் தமிழ்மணம் செயல்படும் என்று உறுதியளிக்கிறோம்.//
  மின்னஞ்சல் அனுப்பாதது என் தவறுதான். இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியில் இருந்து பயன்படுத்த வேண்டிய நிலைமை. எனக்கு வந்த பின்னூட்டம் ஒன்றின் வாயிலாகத்தான் தமிழ்மணத்திலிருந்து என்னுடைய பதிவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிந்து கொண்டேன். இது நிர்வாக முடிவாக இருக்கும் என நினைத்தே மேற்கொண்டு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவில்லை. தமிழ்மணத்திலிருந்து நீக்குவது உங்கள் உரிமை. அதை சொல்லிவிட்டு செய்திருக்கலாமே என்பதற்காகவே பதிவில் எழுதினேன். தமிழ்மணத்தின் உள்நோக்கம் கற்பித்து குற்றம்சாட்டும் எண்ணம் எனக்கில்லை. என்னுடைய தொனி அப்படியிருந்தால் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.