நண்பர் ஜூலியனுக்கும் தமிழ்மணத்திற்கும்

நண்பர் ஜூலியன், உங்களுக்கு என்மேல் அப்படியன்ன பகையோ தெரியவில்லை…தொடர்ந்து நான் செய்ததற்கு, செய்யாததற்கு நீங்களாக அர்த்தம்  கற்பித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நேற்று  உங்களுடைய பதிவிற்கு ஒரு  பின்னூட்டம்  இட்டேன்.

“நண்பரே, என்னுடைய பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. பின்னூட்டம் போடவும் முடியவில்லை. இதற்கும் எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. நடுவில் இரண்டு  நாட்களாக இணைய இணைப்பு வேறு  இல்லை. பின்னூட்டத்தை  அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒரு பின்னூட்டத்தை தவிர எனக்கு  வந்த  எல்லா பின்னூட்டங்களையும் தான் அனுமதித்திருக்கிறேன். உங்களுடைய கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்பதற்காக என்னை தனிப்பட்ட முறையில் ஏன்  தாக்குகிறீர்கள்?”

இந்த  பின்னூட்டத்தை  நீங்கள் அனுமதிக்கவில்லையா? அல்லது நான்  பின்னூட்டமிட்ட முறை சரியில்லையா? (பிளாக்கரில்  பின்னூட்டமிடுவது சற்றே புரியாமல்  இருக்கிறது) இன்னொன்றும் தெளிவுபடுத்துகிறேன் என் பெயரில்தான்  பின்னூட்டம் இட்டேன்.  அனானி,  புனைபெயரில் எழுதுவது எனக்கு உவப்பாகாத விஷயம்.  அதனாலேயே என் பெயரில் எழுதுகிறேன். யாரோ ஒருவர் பின்னூட்டமிட்டதற்கு நான் பொறுப்பாக முடியாது. என்னுடைய புறச்சூழல் காரணமாகவே என்னால் எல்லா பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை. எனக்கும் ஆனந்த விகடனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களுடைய பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். என்னைத்தான் தாக்குகிறீர்கள் என்றால் தொடர்புள்ளதாகக் கூறிக்கொண்டு அவர்களை ஏன் தாக்குகிறீர்கள்? என்னுடைய பதிவுக்கான எதிர்வினை என்பது போய் முழுக்க முழுக்க என்னைப்பற்றிய தனிப்பட்ட தாக்குதலில் நீங்களும் உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிடும் சிலரும் இறங்கியிருக்கிறீர்கள். நண்பர்களே நீங்கள் நினைப்பதுபோல் எவ்வித பக்கபலமும் எனக்கில்லை. தயவு செய்து உங்களுடைய அர்த்தமற்ற தாக்குதல்களை நிறுத்துங்கள். மாற்றுக்கருத்துக்களை நான் விரும்புகிறேன், வரவேற்கிறேன்.

தமிழ்மணத்திற்கு,உங்களுடைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே என்னுடைய பதிவை நீக்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் அப்படி எழுதினேன். கோபத்துடனோ வருத்தத்துடனோ எழுதவில்லை. உங்களுடைய முடிவுகளுக்கு கட்டுப்படுகிறேன் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. நீங்கள் நீக்கவில்லை எனில் தமிழ்மணம் நீக்கியதுஎன்று எழுதியதற்காக மன்னிப்புக்கேட்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நட்சத்திர அழைப்பை ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் நானேதான் பொறுப்பாக முடியும். உங்கள் மீது எந்த அவதூறையும் எழுதும் எண்ணம் இல்லை. ஏனெனில் தமிழ்மணத்தின் மூலம் அடைந்த அறிதல் ரீதியாக பலன்கள் நிறைய. பின்னூட்டமிடும் அனானி நண்பர்களுக்கு,

நீ எனக்கு இதை செய்துவிட்டாயா.. உன்னை எழுதிக்கிழிக்கிறேன் பார்!’ என்று மிரட்டிப் பிழைக்கும் பத்திரிகையாளர் அல்ல நான். அது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். குற்றம் சொல்வதனாலும் பொருத்தமாக சொல்லுங்கள்.

9 thoughts on “நண்பர் ஜூலியனுக்கும் தமிழ்மணத்திற்கும்

 1. நீங்கள் உங்களுக்கு வேண்டிய இரக்கத்தினை இங்கே பின்னூட்டப்பெட்டியிலே பூனைகளிடமிருந்து சம்பாதித்துக்கொள்வீர்கள். அஃது உங்களுக்குப் போதுமென்று யாம் நம்புகிறோம்.

 2. எனக்கு வேண்டியது உங்கள் இரக்கம் அல்ல நண்பரே…உங்களுடைய தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்திவையுங்கள் என்பதே.

 3. //‘தமிழ்மணம் நீக்கியது‘ என்று எழுதியதற்காக மன்னிப்புக்கேட்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.//

  இது போல் பெருந்தன்மை பலருக்கு இருப்பதில்லை. தாங்கள் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை பூசி மெழுகவே பார்ப்பார்கள்

  உங்கள் நேர்மைக்கும், தைரியத்திற்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்

 4. நந்தினி,

  பதிவுகள் படித்தேன். வாழ்த்துகள்

  வலைப்பதிவு என்பது ஒரு தனிநபர் தன் கருத்துக்களைப் பதியும் ஊடகம், அங்கு எழுதுபவரும், எடிட் செய்பவரும் ஒருவரே, இன்னும் சொல்லப் போனால், அது ஆசிரியத் தணிக்கை இல்லாத ஊடகம் என்பதெல்லாம் தெரிந்தவர்கள் கூட, பதிவர் பத்திரிகையாளர் என்றால் அவர் வேலை செய்யும் பத்திரிகையைத் தொடர்பு படுத்தி தாக்குகிறார்கள். ஒரு அரசு ஊழியனுக்கும், அரசின் முடிவுகளுக்க்கும் என்ன தொடர்போ, ஒரு MNC ஊழியனுக்கும் அந்த நிறுவனத்தின் வணிகக் கொள்கைகளுக்கும் என்ன தொடர்போ அந்த அளவுதான் ஒரு உழைக்கும் பத்திரிகையாளனுக்கும் பத்திரிகைக்கும் தொடர்பு என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் பத்திரிகையாளர்களைத் தாக்குவது என்றால் ஒரு சந்தோஷம்.
  விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள்
  மாலன்

 5. நேர்மையான பதிவு.

  இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களிலும் ஜூலியன் என்ற பெயரிலான பதிவு தனிமனித தாக்குதல்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 6. இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களிலும் ஜூலியன் என்ற பெயரிலான பதிவு தனிமனித தாக்குதல்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

  did julian say somehing bad about kalinjar gentleman. She did not talk about kalinjar. people should not stone from glass house.

  Ms. Nandhini. Though you apologized for your remarks on Tamilmanam you flatly blame julian for many things here. Did you read her posts? Did she or does she really personally attack you as you claim? The problem is on your side too. You complained about others. However none posting comment to you in this post want to critique your errors and chores. They have their own agenda. Hvae you read the blogs of the people who posted comments to see why on earth they want to support you or oppose you? If you have done, you would have already found that this is not much about how you got treated, but how they try to push and move their own agenda through you.

  In addition, only quoting Shoba Sakthi, A. Marx, S. Pushparajah and N. Sussenthiran from what you read on the web won’t be good for a journalist unless you want to be a crappy one with own agendas like some of the commentators in your blog. I do not have to tell you a professonal journalist on why you have look both sides of the stories. Go and google a little about N. Sussenthiran and his wife to see what their stands on eelam. Just linking a post that would give you a tall stand among some people like the previous commentators won’t be a fair justice for eelam tamils.

  Rathet than falsly accusing Tamilmanam only because someone told you as a journalist you should have investigated the matter a little furether before posting an accusation. Again you have made few sweeping statements about Julian. Did she say anything about Anadavikatan? Did she attack you personally as you have claimed? She had said it clearly that she had nothing against you in person as she does not know you. You emotionally repeats and laments that she personally attacks you. Yes, it will gather support for you in some quarters of which samples we have seen above, but are you true to your own profession when you made such baseless shallow statements?

  Instead of eelam tamils, if you had made a strong statement about anti-eelam Indian junta and media or about daakdar kalinjar karunanithi, you would have seen the venemous responses from the same commentators we have seen here. Politics and local and bloggers are not an exception either.

 7. I salute your forthrightness and courage. Long live your quest for freedom. Down with media barons like tamilmanam.

  Where is the support from our New Jersey friend, He is the only one missing here. (Faceless creatures excluded)

 8. மாலன் இதே போல் தொடக்கத்தில் எனக்கு ஒரு விமர்சனம் தந்து இருந்தார். அப்போது தான் நான் முழுமையாக ஒரு விமர்சனம் என்பதும் எந்த அளவிற்கு உள்வாங்கி இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டேன். அதுவே என்னுடைய பாதையை நோக்கத்தை விரிவு படுத்தியது. ஒவ்வொன்றாக படித்துக்கொண்டே வந்த நான் என்னடா இன்னும் வம்பு வராமல் இருக்கிறதே என்று பார்த்துக் கொண்டே வந்த போது இங்கு நிறுத்தம் உருவாகி விட்டது.

  மாலன் கடைசி வரிகள் தான் என்னுடைய கருத்தும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.