சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..?

visai_wrapper_3604வெகுஜன பத்திரிகைகள் மூலமாகத்தான் எனக்கு சிற்றிதழ்கள் அறிமுகமானது. கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் பெயர்களை மட்டுமே அறிந்து  வைத்திருந்தேன்.  தினமணி இதழில் சில நாள் பயிற்சியின் நண்பனாகிப்போன தனபால் சிங், புக்லேண்ட்டுக்கு அழைத்துப்போய் சிற்றிதழ் உலகத்தை காண்பித்தவன். தொடக்க காலங்களில் சிற்றிதழ்கள் படிக்கும்போது என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றியதுண்டு. (ஆரம்பகால சிற்றிதழ் வாசகர் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்) பிறகு படிக்கப்படிக்க எண்ணத்தில் தெளிவு வந்தது. நான் பத்திரிகை பணியை ஆரம்பித்தது பெண்கள் பத்திரிகை நிருபராகத்தான். அப்போது என்னுடைய சிற்றிதழ் படிக்கும் பழக்கம் சக ஊழியர்களிடையே கேலிக்குரிய விஷயமாக இருந்தது.  சமையல் குறிப்பு எழுதுவதற்கு எதற்கு இலக்கியம் படிக்க வேண்டும்?  மற்றவர்கள் குறித்து எனக்குத் தெரியாது… என்னுடைய எழுத்தும் சிந்தனையும் மேம்பட்டதற்கு சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது.

சில வருடங்களுக்கு  முன்பு பல நல்ல படைப்புகளைத் தாங்கி வந்த சிறுபத்திரிகைகள், இன்று இடைநிலை பத்திரிகைகளாக வளர்ந்துள்ளன. வரவேற்கத் தகுந்த மாற்றம்தான் எனினும் இந்த பத்திரிகைகள் சில சமயம், ஆங்கில பதிப்பகங்கள் மாதந்தோறும் வெளியிடும் புக்லெட்டுகளைப் போல இருக்கின்றன். இந்த பத்திரிகையில் இன்னின்னார்தான் எழுதுவார் என ஆரம்ப கட்ட வாசகனுக்கும் புரிந்துவிடும் அளவுக்கு, திரும்பதிரும்ப ஒருசிலரே எழுதுகிறார்.  பத்திரிகைகளே பதிப்பகம் நடத்துவது காரணமாக இருந்தாலும் ஒரே வகையான எழுத்துகளைப் படிக்க அலுப்புத் தட்டுகிறது. சில இதழ்களை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.

இடைநிலை விட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதுவிசை, உன்னதம் போன்ற  இதழ்கள் காத்திரமான  பொருட்செறிவுடன் வருகின்றன. தலித்தியம், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என எதிர்பார்ப்புகள் வீண்போகாத அளவுக்கு  விஷயங்களைத் தாங்கி வருகின்றன. இதுபோன்ற இதழ்களுக்கு பொருளாதார பின்புலம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக  ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.  உன்னதம் இதழைக் கொண்டுவர கெளதமசித்தார்த்தன் நிலங்களை விற்றுவிட்டதாக கேள்வி.  ஆதவன்தீட்சண்யாவும் தன் கைகாசிலேயே செய்கிறார், சில சமயம் நண்பர்கள் உதவக்கூடும். புதுவிசை காலாண்டு இதழாக வந்து கொண்டிருக்கிறது.  உன்னதம் பண இருப்பைப் பொறுத்து…

ந்த இதழ் உன்னதம் (ஏப்ரல் 09)  சாதியும் அரசியலும் சிறப்பு  இதழாக வந்திருக்கிறது. சாதி குறித்த தற்கால இருப்பை அறிந்து   கொள்ள படித்தாகவேண்டிய இதழ்.

unnatham_logo_100உன்னதம்

ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி-638455

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

புதுவிசை (ஏப்ரல் – ஜூன் 09) நடராசா சுசீந்திரனின் விரிவான நேர்காணலும் கோ.ரகுபதி எழுதிய தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம் என்ற கட்டுரையும் முக்கியமானவை.

புதுவிசை

பி-2 டெலிகாம் குடியிருப்பு

ஓசூர்-635109

தொலைபேசி: 04344 244933

11 thoughts on “சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..?

 1. முழு இடுகையையும் முதலில் பார்க்காமல் போட்ட பின்னூட்டம் முன்னது. பிறகுதான் முழு இடுகையும் தெரிந்தது. இருந்தாலும் நான் கேட்டிருப்பது இன்னமும் பொருந்துகிறது, அல்லவா?

  • ஏதோ அவசரகதியில் பாதியில் படித்திருக்கிறீர்கள் போல.. 🙂

   //எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? என்ன தெளீவு வந்தது? அடுத்து எழுதுங்கள்//

   சிற்றிதழ்களில் என்ன எழுதுகிறார்கள் என்று சொல்ல முடியும் அதைப் படித்து இதிலெல்லாம் இப்படி இப்படி தெளிவு வந்தது என்பதை எப்படி சொல்வது?

 2. மீ த மூணாவது 🙂

  (இப்படித்தான் பதிவு படிக்காம கமெண்ட் போடணும் முத்து)

  • சென்ஷி…
   பதிவை வச்சி காமெடி கீமெடி பண்லையே?!
   🙂

 3. யாதும் ஊரே

  என்ற நல்ல தகவல் களஞ்சியம் மாதமொருமுறை

  வருகிறது.ஒரு தமிழ் அறிஞர்,தலைவருடைய,மற்ற பேரறிஞர்கள் பற்றி கிடைக்காத தகவல்களுடன் வரும் இந்த இதழைப் படிக்க வேண்டுகிறேன்.

  • //யாதும் ஊரே

   என்ற நல்ல தகவல் களஞ்சியம் மாதமொருமுறை//

   எங்கே கிடைக்கும் அல்லது இதழ் முகவரியை சொல்லுங்கள்…தேவையானவர்களுக்கு பயன்படும்.

 4. //சிற்றிதழ்களில் என்ன எழுதுகிறார்கள் என்று சொல்ல முடியும் //

  இதுவே போதுமே !

  பரீட்சார்த்த முயற்சியாக நாமும் வாங்கி படிப்போம்ன்னு சில சிற்றிதழ்களினை வாங்கி படித்ததில் மொத்தமாக கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக வேண்டியிருந்தது. ஒரு வேளை இது பொதுவான புத்தகங்கள் வாசிக்கும் வாசகனுக்கான தளமில்லை போலும் என்று தான் நினைக்கவைத்தது 🙂

 5. சிற்றிதழ்களின் அவசியம் குறித்த இப்பதிவு முக்கியமானது. ஆனாலும் சிற்றிதழ்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை என்று யாரேனும் சிந்திக்கிறீர்களா? காலச்சுவடு, உயிர்மை போன்றவை சிற்றிதழ் இலக்கியம் எனும் நாக்கினை சுளுக்கு கொள்ளச் செய்யும் நடையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்ததால் வணிக சமரசம் செய்துகொள்ளும் இடைநிலை இதழ்கள் என்று தூற்றப்படுகிறது.

  புதுவிசையையோ, உன்னதத்தையோ என்னைப் போன்ற பாமரர்கள் சுவாரஸ்யமாக வாசிக்கக்கூடிய மொழிநடையில் வருகிறதா? 🙂

 6. எனக்குத் தெரிந்து சிற்றிதழ் குறித்து மிகத் தெளிவாக வந்த பதிவில் இதுவும் ஒன்று. காரணம் சிற்றிதழ்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு எழுதியதை கோர்வையாக்க முடிந்தது.

  புரிந்ததும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் அவரவர் வாழ்க்கை அனுபவத்தை பொறுத்து.

  எப்போது போல அதுவும் வெறும் எழுத்து தான்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.