ஆழ்கடலில் திசைமாறிய படகு…

பார்டான்ஸர்களின் மறுபக்கம்

 கோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும்! நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது! இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி

என் பேரு ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்தது, வளர்ந்தது சென்னையிலதான். தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம். அப்பாவுக்கு சரியான சம்பாத்யம் கிடையாது. இதுலதான் அம்மா, நான், தம்பி, தங்கச்சிங்க வாழ்ந்தாவணும். ஏழாவதுக்கு மேல படிக்க இஷ்டமில்லாம போயிடுச்சி. அப்புறம் அக்கம் பக்கத்துல சின்ன சின்ன வேலைகளுக்கு போயிட்டு இருந்தேன். அப்படி வேலைக்குப் போன இடத்துலதான் அவரைப் பார்த்தது. அந்த வயசு நல்லது கெட்டதை யோசிக்கத் தெரியாது. நல்லா வச்சி காப்பாத்துவாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் சரி கிடையாது. பிறந்த வீட்டிலேயாவது ரெண்டு வேலை சாப்பாட்டுக்கு வழி இருந்துச்சி. இங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம, தினம் பட்டினியா கிடக்க வேண்டிய நிலை. அப்பதான் ஏரியாவுல தெரிஞ்ச ஒருத்தர்நீ ஏன் இப்படி கிடந்து கஷ்டப்படற? வெளிநாட்டுல டான்ஸ் ஆடப்போனா கைநிறைய பணம் கிடைக்கும். உன் செலவுக்குப் போக, தம்பி, தங்கச்சிங்களுக்கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கலாம்னு. முதல்ல துபாய்க்கு அழைச்சுட்டு போனாங்க. ‘லட்சக்கணக்குல பணம் கிடைக்கும். சேட்டுங்க நகையெல்லாம் போடுவாங்கன்னு நிறைய சொன்னாங்க. ஆனா அங்க நிலைமையே வேற. மூணு நாளைக்குள்ள டான்ஸ் ஆடி நூறு டோக்கன் எடுக்கணும். ஒரு டோக்கனுக்கு இவ்வளவு ரூபாய்னு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிச்சுடுவாங்க. டான்ஸ் பார்க்க வர்றங்க. நம்ம டான்ஸ் புடிச்சிருந்தா காசு கொடுத்து டோக்கன் வாங்குவாங்க. எந்த அளவுக்கு டோக்கன் அதிகமா வாங்கறமோ அந்த அளவுக்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடவே பணமும் கிடைக்கும். மூணு நாளைக்கு நூறு டோக்கன் எடுக்கணுங்கிறது முடியாத காரியம். அப்போதான் எங்களை அழைச்சிட்டு போன ஏஜெண்ட்டுகளோட நிஜ முகம் தெரிய ஆரம்பிக்கும். ‘டான்ஸ் ஆடி டோக்கன் எடுக்கலைன்னா என்ன? அதே காசை நாலு பேருக்கிட்ட படுத்து சம்பாதின்னு கட்டாயப்படுத்த ஆரம்பிப்பாங்க. எனக்கும் இதுதான் நடந்தது. நான் அதுக்கு சம்மதிக்கவே இல்லை. அடிஉதை, சூடுன்னு தினம் தினம் சித்திரவதை. ஒரு கட்டத்துக்கு மேல வந்தது வந்துட்டோம், நாம நிறைய சம்பாதிச்சு கொடுக்கப்போறதா நினைச்சுட்டு இருக்கிற குடும்பத்துக்கு நாம எதை செய்யப்போறோம்னு நினைச்சு நான் என் முடிவை மாத்திக்கிட்டேன் ஜோதியின் வார்த்தைகளில் வாழ்க்கையின் மீதான சலிப்பு தெரிக்கிறது.

” 12 மணி வரைக்கும் டான்ஸ் ஆடணும். அதுக்கு மேல 10, 20 பேருகிட்ட படுக்கச்சொல்வாங்க. துபாய்க்கு போறோம்னு தான் பேரு. ஏதோ ஒரு அபார்ட்மெண்ட்ல எங்களை தங்க வைப்பாங்க. 3 மாசம் இருந்தாலும் 3 வருஷம் இருந்தாலும் அந்த நாலு சுவத்தைதான் பார்த்துட்டு இருக்கணும். மெஷினைவிட கேவலமான வாழ்க்கை. இப்படியே தொடர்ந்தா பைத்தியம் பிடிச்சுடுமேங்கிற பயத்துல அங்கிருந்து வெளியேறணும்னு முடிவு செய்தேன். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எங்களை அழைச்சுட்டு போன ஏஜெண்ட் விடலை. சென்னையில இருந்த நண்பர்கள் போலீசுக்குப் போயிடுவோம்னு மிரட்டியதால் என்னை பிளைட் ஏத்தி அனுப்பிவைச்சாங்க. இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு எனக்கு கிடைச்சது என்னவோ வெறும் ஐயாயிரம் ரூபாய்தான்!” என்கிற ஜோதி தற்சமயம் சென்னையில் உள்ள சில கிளப்புகளில் ஆடி வருகிறார். வெளிநாடுகளுக்கு போவதைவிட சென்னையிலேயே ஓரளவு பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறைவு என்பது ஜோதியின் கருத்து.

வெளிநாடுகள்ல டான்சுக்குன்னு கூப்பிட்டு போறதே மெயினா தொழில் செய்யறதுக்குதான். வடபழனி ஏரியாவுல இப்படி பெண்களை அனுப்பி வைக்கறதுக்கே ஏகப்பட்ட ஏஜெண்டுகள் இருக்காங்க. சினிமா ஆசையில ஜெயிக்கவும் முடியாம, வாழவும் வழியில்லாம தவிக்கிற பெண்கள்தான் இவங்களோட டார்கெட்!” என்கிற ஜோதியின் கூற்றுக்கு உதாரணம் காட்டுவதாக இருக்கிறது கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் அனுபவம்.

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட கவிதாவுக்கு படிப்பு ஒன்பதாம் வகுப்பு. வாழ்வு தேடி குடும்பத்தோடு சென்னை வந்தவர். சினிமாவில் மேக்கப் அசிசிஸ்டெண்டாக வேலை. “இந்த வேலைக்கு காலம் முழுக்க நூறு ரூபாய்தான் கிடைக்கும். கேபரே டான்ஸ் ஆடினா மூணு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிக்கலாம்என்ற ஆசை வார்த்தைகள் கவிதாவின் குடும்ப கஷ்டத்துக்கு வடிகாலாக இருக்க, கேபரே டான்ஸ் ஆடப்போனார்.

முதல்ல உள்ளூர்ல ஆடிட்டு இருந்தேன். வெளியூர் போன அதிகமா சம்பாதிக்கலாம்னு பாண்டிச்சேரிக்கு அனுப்பினாங்க. மூணு மாசம் அக்ரிமெண்ட். முன்னாடியே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்க. நம்ம குடும்ப கஷ்டத்துக்கு விடிவு கிடைச்சுடுன்னு போனா.. கேபரே டான்சுக்கு இன்னொரு பக்கமும் இருக்குன்னு அப்புறம் தெரிய ஆரம்பிச்சது. வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடினா ஆயிரம் ஆயிரமா பணம் கொட்டிடாதுன்னு தொழில் செய்ய வற்புறுத்தினாங்க. வழக்கம்போல சித்ரவதை. வேற என்ன செய்ய முடியும்? அவங்க சொல்றமாதிரி கேட்க ஆரம்பிச்சேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அங்கேயிருந்து வெளியேறினேன்என்கிற கவிதா, தான் இப்படி பாலியல் தொழிலாளியாக மாறியது தன் வீட்டுக்கு தெரியாது என்கிறார்.

வெளியூருக்கு போகும்போது ஷூட்டிங் போறன்னு சொல்லிட்டு போவேன். இப்ப லோக்கல்லதான் ஆடிகிட்டு இருக்கேன். டான்ஸ் மட்டும் ஆடினா ரெண்டாயிரம், மூவாயிரம்தான் கிடைக்கும். தொழிலும் சேர்த்து செய்தா ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் எடுத்துட்டு வரலாம். திருவிழாவுலயும் ஆடப்போறேன். அங்கேயும் சில பேர் கேப்பாங்க. எனக்கு விருப்பம் இருந்தா போவேன். வேற வழியில்லாம இந்த வாழ்க்கைக்கு வந்துட்டோம்னு ஒவ்வொரு நாளும் வருத்தப்படறோம். இதுல இருந்து விடுபடணும்னு விரும்பறோம். ஆனா எங்களை மனுஷியாகூட சிலபேர் மதிக்கிறதில்லை. குடும்பத்தோடு கோயில், குளம்னு எங்காவது போயிருப்போம். புரோக்கருங்க அங்க வந்து வர்றீயான்னு கூப்பிடுவாங்க. புரோக்கருங்க மட்டும் இல்லை, வெளியூருக்கு போன இடத்துல யாருக்காவது நம்ம போன்நம்பர் கிடைச்சுட்டா போதும் சொல்ல முடியாத சித்ரவதைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அவங்க கூட போக விருப்பமில்லைனு சொல்லும்போது அவங்களால தாங்கிக்க முடியாது, அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுடுவாங்கஎன்கிறார் கவிதா.

பதினாறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் புஷ்பா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலத்தை சேர்ந்த இவர், காதலின் பேரால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதனாலேயே சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர். வழி தேடி சென்னைக்கு வந்தவர், புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளால் படுகுழியில் விழுந்திருக்கிறார். திருவிழாவுக்கு நடனம் ஆடப்போன இடத்தில் பாலியல் தொழில் செய்ய வந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க, கொடுமையின் உச்சகட்டமாக நான்கு பேர் கொண்ட கும்பல் புஷ்பாவை கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. அதன் பாதிப்புகள் புஷ்பாவின் கண்களில் இன்னமும் உணரமுடிகிறது. இப்போது கேபரே டான்ஸர் என்பதோடு பாலியல் தொழிலாளியாகவும் உருமாறியிருக்கிறார் புஷ்பா.குடும்பத்தில் பணப்பிரச்னை, கணவன் அல்லது காதலனால் ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் கேபரே ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும். “மற்ற பெண்களைப் போல எங்கள் வாழ்க்கையும் மாறணும்என்கிற இந்தப் பெண்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிப்பதே குற்றவுணர்ச்சியிலிருந்து நம்மை காப்பாற்றும்!

நன்றி : சூரியகதிர்

இலங்கை இப்போது…

தமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி என இரு கவிதை நூல்களும் எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள், இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். சூரியகதிர் மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்

 
# இலங்கைபயணத்தின்நோக்கம்என்ன?  
நமதுநேரடிச்சொந்தங்களானமலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத்தமிழர்களின்வடபகுதிக்குச்செல்வதுவிடுதலைப்புலிகளைஒடுக்குவதாகச்சொல்லிக்கொண்டுஅந்தஅப்பாவித்தமிழர்கள்மீதுஇலங்கைராணுவம்நிகழ்த்திமுடித்திருக்கும்அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாகஅறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன்ஆகியமலையகநகரங்கள்மற்றும்அவற்றைச்சுற்றியதோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலைநாடுதிரும்பினேன். குழுவிவாதங்கள். அந்தனிஜீவா, ஜோதிகுமார், ரங்கன்போன்றதோழர்கள்ஏற்பாட்டில்சிறியதும்பெரியதுமாகநடந்த 11 நிகழ்வுகளில்பங்கெடுத்தேன். 
# போருக்குப்பின்இலங்கைஎப்படிஇருக்கிறது? பாதுகாப்புகெடுபிடிகள், மக்களின்அன்றாடவாழ்க்கைநிலை, அரசியல், ராணுவரீதியானபோக்குகள்?
 நாட்டின் எந்த மூலையிலும் துண்டுத்துக்காணி இடத்திலும் மணல்மூட்டைகளுக்குப் பின்னால் தயார்நிலையில் குமிந்திருக்கிறது ராணுவம். போர்உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதான பீதியே நிலவுகிறது. குண்டுதுளைத்து பாழடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்டவீடுகள், அடர்ந்தபுதர்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒருதுப்பாக்கிக்குழல் துருத்திக்கொண்டுள்ளது. எந்நேரமும் நம்மை கண்காணிக்கிறது ஒருராணுவக்கண். தினசரி ஒருமுறையாவது ராணுவச்சோதனைக்கு உட்படாமல் பொதுஇடங்களில் நடமாடும் சுதந்திரம் அங்கு ஒருவருக்கும் வாய்க்கவில்லை. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 40 நிமிட விமானப்பயணம். ஆனால் பறப்பதற் குமுன்னும்பின்னுமாக ஒருவர் 6 மணிநேரம்ஆர்மிக்காரர் முன்கைகளை பக்கவாட்டில் விரித்துக்கொண்டு சோதனைக்கு நின்றாகவேண்டும். -9 பாதை வழியே கொழும்பு திரும்புவதற்கும் இதேபாடுதான். பயணிகளை மூட்டைமுடிச்சுகளோடு இறக்கி சோதனையிடுவதும், அரசாங்க கட்டிடங்களுக்குள் நுழைகிறவர்களை அங்குலம் அங்குலமாக சோதிப்பதுடன் அவர்களின் செல்போன்காமிரா போன்றவை பறித்துவைத்துக் கொள்ளப்படுவதும், உயர்பாதுகாப்புவலயம் என்றபெயரால் முள்வேலிகளால் தடுத்துவைக்கப்பட்ட பிரதேசங்களும் ஆட்சியாளர்களின் அச்சத்தையும் சந்தேகப்புத்தியையும் அம்பலப்படுத்துகின்றன. பிடிபடாமல் தப்பித்துவிட்ட புலிகள் என்ற சந்தேகத்துடனேயே பொதுமக்களை அரசாங்கமும் ராணுவமும் அணுகுகின்றன.
 முன்பேனும் ராணுவத்திற்கு புலிகள் என்ற திட்டவட்டமான கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் இருந்தார்கள். இப்போதுஎதிரியாரென்றேதெரியாதநிலை. ஆனால் எவரொருவராலும் எந்தநேரத்திலும் தன்நாட்டுக்கு ஆபத்துவரக்கூடும் என்கிற தன்முனைப்பை விரைத்து நிற்கிற ஒவ்வொரு ராணுவச் சிப்பாயிடமும் பார்க்கமுடிகிறது. இந்த தன்முனைப்பு, வெறுமனே ஒரு ராணுவத்தானுக்கு உரியதல்ல. அது, நீ சிங்களவன், இதுஉன்னுடையஉனக்கே உனக்கான நாடுஅதை பத்திரமாக பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு என்று இனவெறியேற்றப்பட்டவனின் மனநிலையிலிருந்து பிறக்கிறது. எனவே தன்னை கடந்துபோகிற ஒருவரை உயிரோடு அனுப்புவதோ தன்நாட்டுக்கு ஆபத்தானவர் என்று சுட்டுத்தள்ளுவதோ அந்தகணத்திலான அந்த சிப்பாயின் கருணையின் பாற்பட்டதாக இருக்கிறது. அவ்வாறு சுட்டுத்தள்ளினாலும் அதற்காக அவர் யாரிடமும் பதில் சொல்லவேண்டிய கடப்பாடு ஒன்றுமில்லை. அத்துமீறல்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மக்களோ அமைப்புகளோ அங்கு இல்லை. மனித சமூகத்தின்மேன்மைக்குமகத்தானபங்களிப்புசெய்யவேண்டியஇளைஞர்சக்திசீருடையணிந்தஒருஇனவெறிப்பட்டாளமாகதிசைமாற்றப்பட்டுள்ளது. எதிரியைவேட்டையாடும்வன்மத்தையும்கனத்தஆயுதங்களையும்சுமந்துகொண்டுதினமும்விரைப்பாகதயாராகிகுறுக்கும்நெடுக்கும்உலாத்திக்கொண்டிருக்கிறஅந்தசிப்பாய்களின்மனநிலையில்ஏற்படும்சிதைவுகள்அந்தசமூகத்தைஎன்னவாக்கப்போகிறதுஎன்பதுவெறுமனேஉளவியல்பிரச்னைஅல்ல. நம்மூரில் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊதாரித்தனமாக வைக்கப்படுவதை விடவும் பலமடங்குப் பெரியதான கட்அவுட்களில் ராணுவத்தினரின் மூர்க்கமான முகங்கள் அச்சமூட்டுகின்றன. ராஜபக்ஷேகட்அவுட்களில்கூடதனியாய்நிற்பதில்லை, ராணுவத்தினர்புடைசூழவேகாட்சிதருகிறார். அரசாங்கவிளம்பரங்களில்கூடராணுவச்சிப்பாய்களின்படங்களேபெருமிதத்தோடுஇடம்பெறுகின்றன. ராணுவத்தினரை கதாநாயகர்களாகக் கொண்டாடுவது அவர்களது வீரதீரச் செயல்களுக்காக அல்ல. அவர்கள் வெளிப்படுத்திய சிங்கள இனவாதத்திற்காகத்தான் என்பதை புரிந்து கொள்வது கடினமானவிசயமல்ல. போரின் வெற்றியைக் கொண்டாடுவது என்ற பெயரால் ராணுவத்தை முன்னிறுத்தி சிங்களப்பெருமிதம் தொடர்ந்து விசிறிவிடப்படுகிறது. ராணுவத்தின் மீதான மக்களின் இந்த ஈர்ப்பை யார் அறுவடை செய்வது என்கிற போட்டியின் வெளிப்பாடுதான் இப்போது ராஜபக்ஷேவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையேமுட்டித் தெறிக்கிறது. அந்தநாட்டில்இன்றுவரைநாடாளுமன்றஜனநாயகம்நீடித்திருப்பதாகஅலட்டிக்கொண்டாலும்உண்மையில்அங்குராணுவம்தான்சமூகத்தைகட்டியாள்கிறது.
 யாழ்ப்பாணத்திற்குள்ஒருவர்நுழைவதோஅல்லதுஅங்கிருந்துவெளியேறுவதோபாதுகாப்புஅமைச்சகத்தின்அனுமதியைப்பெற்றால்மட்டுமேசாத்தியம். ( இந்தநிபந்தனைகடந்தவாரம்தளர்த்தப்பட்டிருப்பதாகஒருஅறிவிப்புவெளியாகியுள்ளது) யாழ்ப்பாணத்திலிருந்துவவுனியாவுக்குசெல்கிறபேருந்துகளில்உங்களதுஇருக்கைஎண்ணைஒதுக்குவதும்கூடஒருசிப்பாய்தான்என்பதேநிலைமையைவிளங்கிக்கொள்ளப்போதுமானது. வவுனியாசெல்லும்பேருந்துகள்புறப்படும்இடம்கூடராணுவத்திடம்தான்உள்ளது. 8.30க்குபுறப்படும்பேருந்தில்செல்கிறவர், அங்குஅதிகாலை 5.30 மணிக்கேசோதனைக்காகவரிசையில்நின்றாகவேண்டும். அங்குள்ளகழிப்பறைகளில்கூடதண்ணீர்கிடையாது. தமிழருக்குதண்ணீர்ஒருகேடாஎன்றநினைப்பாயிருக்கும். ராணுவச்செலவுக்கானநிதிஒதுக்கீட்டைஅதிகரிப்பது, ராணுவத்தினரின்எண்ணிக்கையைஇப்போதுள்ளதுபோல்இரட்டிப்பாக்குவதுஎன்றஆட்சியாளர்களின்முடிவுகள்தமிழர்களுக்குமட்டுமல்ல, வாழ்வியல்நெருக்கடிதாளாமல்ஒருவேளைசிங்களவர்கள்போராடத்தொடங்கினால்அவர்களுக்கும்எதிரானதுதான். மக்களைப்பொறுத்தவரை, கின்னஸ்புத்தகத்தில்இடம்பிடிக்கசிலர்கொடியவிஷப்பாம்புகளுடன்கண்ணாடிகூண்டுக்குள்வாழ்கிறசாகசத்தைப்போலஇந்தராணுவகெடுபிடிக்குள்வாழப்பழகிவிட்டார்கள். முதல்ராணுவத்தின்கட்டுப்பாட்டில்தான்யாழ்ப்பாணம்இருக்கிறது. இப்போதுதமிழர்களின்முழுப்பகுதியையும்ராணுவம்கைப்பற்றியிருக்கிறது. 9 பாதையில்பயணிக்கிறபோதுஆனையிறவுதொடங்கிஓமந்தைவரைக்கும்ஒரேயொருசிவிலியனைக்கூடகாணமுடியவில்லை. அந்தநெடுஞ்சாலையின்இருமருங்கிலும்இருந்தஎல்லாசிற்றூர்களும்கிளிநொச்சிபோன்றநகரங்களும்இடித்துதரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள், அரசுஅலுவலகங்கள், நீதிமன்றங்கள், தண்ணீர்தொட்டிஎதுவும்மிஞ்சவில்லை. எத்தனையோதலைமுறைதாண்டிபலன்கொடுக்கும்பனைமரங்கள்தலைவெட்டப்பட்டுமொட்டைமொட்டையாகஆயிரக்கணக்கில்நிற்பதும்மனிதநடமாட்டமற்றபகுதிகளில்மாடுகள்கேட்பாரற்றுஅநாதைகளாகசுற்றியலைவதும்நெஞ்சையறுக்கும்காட்சிகள். ஆளரவமற்றஅந்தபாதைநெடுகிலும்நிறுத்தப்பட்டிருக்கும்சிப்பாய்களுக்குஇன்னும்எதிரிகள்தேவைப்படுகிறார்கள். அதேவேளையில்மக்களின்நண்பர்கள்என்றுகாட்டிக்கொள்கிறபகட்டுக்கும்குறைவில்லை. இழவுவீட்டாருக்குநெருங்கியஉறவினர்கள்சாப்பாடுசெய்துபகிர்வதுபோல, பொன்னாலைக்கட்டியான்என்றதமிழர்கிராமத்தில்ஒருஇழவுவீட்டிற்குராணுவமுகாமிலிருந்துசாப்பாடுசெய்துஅனுப்பட்டதாம். முகாமிலிருந்துவிடுவிக்கப்படுபவர்களுக்காககட்டப்படவிருக்கிறஅடுக்குமாடிகுடியிருப்புகளில்சிங்களவர்களும்குடியமர்த்தப்படலாம்என்கிறஅச்சம்இப்போதேஉலவுகிறது. -9 பாதையின்இருமருங்கும்காட்டைஅழித்துஉருவாக்கப்பட்டுள்ளவெற்றிடங்களில்ராணுவமுகாம்கள்அல்லதுசிறப்புபொருளாதாரமண்டலங்கள்என்றபெயரில்தமிழரல்லாதாரைகுடியேற்றும்திட்டமும்அரசிடம்இருப்பதாகசந்தேகம்வலுத்துள்ளது. குண்டுசத்தமும்ஷெல்லடியும்ஓய்ந்திருக்கும்இன்றையநிலைஅமைதிக்குபதிலாகஒருஉறைந்ததிகிலூட்டும்மௌனத்தையேகொண்டுவந்திருக்கிறது. மக்கள்இறுகியமௌனத்தின்வழியாகஎல்லாத்துயரங்களையும்கடக்கஎத்தனிக்கிறார்கள். ஒவ்வொருவீட்டிலும்எஞ்சியிருக்கும்விதவைகளையும்அங்கவீனர்களையும்மனநிலைப்பிறழ்ந்தவர்களையும்பார்த்துப்பார்த்துமருகிப்போய்உறைந்துநிற்கும்அவர்கள்மனம்திறந்துபேசஇன்னும்கனகாலம்செல்லும். இந்தப்போரைஉசுப்பேற்றிகொன்றதில்நமக்கும்பங்கிருக்கிறதுஎன்றகுற்றவுணர்வில்நாம்காத்திருக்கவேண்டியதுதான். அங்கிருந்துதமிழர்கள்வெளியிடும்சஞ்சிகைகள்எதிலும்ஈழப்போராட்டம், அல்லதுராணுவத்தின்அட்டூழியங்கள், முகாம்களில்வதைபடும்மக்களின்துயரம்என்றுஎதையும்பேரளவில்காணமுடியவில்லை. தணிக்கையும்சுயதணிக்கையும்அவர்களின்எழுத்துச்சுதந்திரத்தைஅந்தளவுக்குகட்டுப்படுத்தியிருக்கிறது. நாளிதழ்களில்ஓரளவுக்குஇதுகுறித்தசெய்திகளைப்பார்க்கமுடிந்தது.

# முகாம்களுக்குச்செல்லும்வாய்ப்புகிடைத்ததா?

 யாழ்ப்பாணம்செல்வதேஎனக்குபெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்குமுதல்முறையாகசெல்பவர்விமானத்தில்தான்சென்றாகவேண்டும். விமானடிக்கெட்பெறவேண்டுமானால்பாதுகாப்புத்துறைஅமைச்சகத்தின்அனுமதிக்கடிதம்இருந்தால்மட்டுமேசாத்தியம். இந்தஏற்பாடுகளைதோழர்கள்ரங்கனும்அந்தனிஜீவாவும்செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம்தேதிதான்டிக்கெட்கிடைத்தது. 22ம்தேதிநாடுதிரும்பவேண்டியநிலையிலிருந்ததால்முகாம்எதற்கும்செல்லமுடியவில்லை. ஆனால்முகாம்களில்இருந்துசமீபத்தில்விடுவிக்கப்பட்டவர்கள்சிலரைசந்தித்துஅவர்களதுதுயரங்களைகேட்டறியமுடிந்தது. நான்தங்கியிருந்தவிடுதியின்சமையல்காரரின்குடும்பம் 1996ல்யாழ்ப்பாணத்திலிருந்துவன்னிக்குகுடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில்அவர்களுக்கு. போர்உக்கிரமடைந்தநிலையில்காடுகளுக்குப்போகிறார்கள்புலிகளோடு. நிலவறைகளில்பதுக்கம். ராணுவம்அழித்துநொறுக்கிவரவரஇவர்கள்மூட்டைமுடிச்சுகளோடுபத்துக்கும்மேற்பட்டஇடங்களுக்குஓடியோடிப்போய்பதுங்கவேண்டியிருந்திருக்கிறது. நடந்துவரமுடியாதநோயாளிகள்வயோதிகர்கள்அங்கவீனர்களைஅப்படியப்படியேபங்கருக்குள்கைவிட்டுவிட்டுஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்டஅந்தபங்கர்களுக்குள்ஒருவேளையாராவதுஉயிர்பிழைத்திருந்தாலும்கூடஒருவருக்கும்தெரியப்போவதில்லை. இனிபுலிகளைநம்பிஉயிரையும்போக்கிக்கொள்வதில்அர்த்தமில்லை. எனவேபடகேறித்தப்பித்துநேவியிடம்சரண். பின்முகாமில்வதிந்துஆகஸ்டில்விடுவிப்பு. இப்போதுஅவர்களின்பிரச்னை, வீடு. வன்னிக்குப்போனஅவர்களின்ஒருகுடும்பம்இப்போதுஐந்தாகபெருகியாழ்ப்பாணம்திரும்பிநடுத்தெருவில்நிற்கிறது. தொழிலுக்குச்செல்லபடகோவலையோஇல்லை. பணம்நகைஎதுவும்மிஞ்சவில்லை. அவற்றைவிற்றுத்தான்கடைசிநாட்களில்சீவித்திருக்கிறார்கள். எல்லாமும்தோற்றாகிவிட்டது. தெரிந்ததொழிலுக்குஅவர்களால்திரும்பமுடியவில்லை. நீர்மேலிருந்தவர்நெருப்புக்குள்கரிபடுகிறார். முகாம்களிலிருந்துவிடுவிக்கப்படுகிறவர்களுக்குஎந்தவாழ்வாதாரமும்இல்லை. முப்பதுரூபாய்குஒருடீவிற்கிறநாட்டில், அரசுகொடுக்கிறசிறுதொகையைவைத்துக்கொண்டுஅந்தமக்கள்எப்படிமீண்டெழமுடியும்?

 # இலங்கைதமிழர்களின்நிச்சயமானவாழ்வாதாரம்குறித்துபேசாதநிலைதமிழகத்தில்நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின்வாழ்வாதாரம்குறித்துஏதேனும்முன்னெடுப்புகள்இலங்கையில் (அரசுஅல்லாத) புலம்பெயர்ந்தஇடங்களில்நடக்கிறதா?

 .) ஐரோப்பாஅல்லதுபிறநாடுகளில்அடைக்கலம்புகுந்தஇலங்கைத்தமிழர்களில்பெரும்பாலோர்ஐந்தாறுஆண்டுகளில்அங்குபொதுசமூகத்தோடுஇணைந்துவாழவும்குடியுரிமைபெறவும்முடிகிறது. ஆனால்கால்நூற்றாண்டுகாலமாய்தமிழ்நாட்டின்அகதிகள்முகாமில்வதியும்இலங்கைத்தமிழர்கள்இன்றளவும்அகதிகள்தான்என்பதைஎமதுபுதுவிசையில்தொடர்ந்துஎழுப்பிவந்தோம். வவுனியாமுகாமைப்பார்க்கப்போனநாடாளுமன்றஉறுப்பினர்களில்எத்தனைபேர்தமிழ்நாட்டிலுள்ளமுகாம்களுக்குசென்றிருப்பார்கள்என்பதுதெரியவில்லை. அண்டிவந்தவர்களையேஆதரிக்காதஇந்ததமிழ்நாட்டுசமூகம்இலங்கைக்குப்போய்என்னத்தகிழிக்கப்போகிறது? கழுத்துநரம்புபுடைக்கராஜபக்சேவையும்சிங்களவர்களையும்இங்குவசைபாடித்திரிவதால்அங்குள்ளதமிழர்களுக்குநன்மையேதும்விளையப்போவதில்லை.

) புலம்பெயர்நாடுகளின்புலிஆதரவாளர்களைப்பொறுத்தவரைமாற்றுக்கருத்தாளர்கள்எல்லோரையும்சிறுமைப்படுத்துவதன்மூலம்இலங்கையில்அமைக்கமுடியாததனிஈழத்தைஇணையத்திலாவதுஅமைத்தேதீர்வோம்என்றுமும்முரமாய்பாடுபட்டுக்கொண்டுள்ளனர். ஒருஇருபதாண்டுகள்கழித்துதனிஈழப்போராட்டம்பற்றிஅறிந்துகொள்ளும்தரவுகளைஇணையத்தில்தேடும்ஒருவருக்குஅங்குஏற்பட்டுள்ளஇழப்புகள், தோல்விகள்எதற்கும்புலிகள்அமைப்போதலைமையோபொறுப்பல்லஎன்றமாயத்தோற்றத்தைஉருவாக்கும்அதிரடியானஅறிக்கைகளையும்இட்டுக்கட்டப்பட்டஆவணங்களையும்இணையத்தில்உலவவிடுவதோடுஇவர்கள்பணிநிறைவுபெறுகிறது. எனவேஇவங்கையில்தமிழர்கள்படும்துயரங்கள்அவர்களுக்குஒருபொருட்டல்ல. ஏனெனில்அவர்கள்ஒருபாதுகாப்பானவாழ்க்கையைஎட்டிவிட்டவர்களாகஇருக்கிறார்கள்.

.) யாழ்ப்பாணத்தில்பெரியபெரியபதாகைகளையும்கொடிகளையும்கட்டிக்கொண்டுதொண்டுநிறுவனங்கள்என்கிறஃபண்டுநிறுவனங்களின்குளிரூட்டப்பட்டவாகனங்கள்பறக்கின்றன. மாளிகைபோன்றபெரியவீடுகள்தான்அவற்றின்அலுவலகங்கள். அரசியல்ரீதியானபிரச்னைகளைஇந்தஅமைப்புகள்கொடுக்கும்சோற்றுருண்டைகள்தீர்த்துவைக்கமுடியாது. ஒருசிலஅமைப்புகளைத்தவிரமற்றவற்றுக்குசுனாமிகொள்ளைபோலஇதுவும்ஈழமக்களின்பெயரால்கொள்ளையடிக்கும்வாய்ப்புதான்.

) புலம்பெயர்ந்துவெளிநாடுகளிலும்கொழும்பிலும்வாழக்கூடியபொன்னாலைக்கட்டியான்என்றகிராமத்தைச்சேர்ந்தவர்கள்தங்களுக்குள்ஒருகுழுவைஅமைத்துநிதிதிரட்டிபோரினால்முற்றிலும்அழிந்துபோனதங்கள்ஊரைமீளகட்டியெழுப்புவதாகஅந்தகுழுவின்நிர்வாகிமருத்துவர்.ஞானகுமரன்தெரிவித்தார். இம்மாதிரியானமுயற்சிகளும்அங்கொன்றும்இங்கொன்றுமாகநடக்கின்றன.

) புலம்பெயர்ந்தவர்களில்ஒருசிறுகுழுஇப்போதையசூழலைப்புரிந்துகொண்டுசெயலாற்றவேண்டியதளங்களைகண்டறியமுயற்சிக்கிறது. ராணுவரீதியில்பலவீனமாகஇருந்தபல்வேறுநேரங்களில்அரசியல்தீர்வு, சமஸ்டிமுறைஎன்றெல்லாம்புலிகள்பேசியதைதான்இவர்களும்முன்வைக்கிறார்கள். அதற்காகதுரோகிகள், அரசாங்கத்தின்கைக்கூலிகள்என்றுதூற்றப்படுகிறார்கள். எனினும்அரசியல்உரிமைகளைஅடையும்சக்திகள்இலங்கைதமிழ்ச்சமூகத்தின்மத்தியிலிருந்துதான்உருவாகமுடியும்என்பதைஉணர்ந்துஅதற்கானதொடர்புகளைமேற்கொண்டுள்ளஇந்தசிறுபகுதியினர்நம்பிக்கையளிக்கின்றனர்.

 # விடுதலைப்புலிகள்இனிவிடுதலைப்புலிகள்குறித்துஇலங்கையில்வாழும்தமிழர்களின்நிலைஎன்ன-? அடுத்தக்கட்டபோருக்குதயாராவோம்என்றுஇங்கிருந்துகிளம்பும்கோஷங்களுக்குஇலங்கைவாழ்தமிழர்களின்ரியாக்ஷன்எப்படிஇருக்கு

 பிரபாகரன்மீண்டும்வருவாராமேஎன்றுஅங்குள்ளவர்களிடம்கேட்டால், வரட்டுமே.. வந்துஎன்னசெய்யப்போகிறார்இத்தனைஆயிரம்போராளிகளையும்இவ்வளவுஆயுதங்களையும்பெருந்தொகையானபணத்தையும்வைத்துக்கொண்டேஒன்றும்செய்யஏலாதவர்இனிவந்துஎன்னசெய்யப்போகிறார்என்றுஎதிர்கேள்விகேட்கிறார்கள். ஒருவேளைவந்தால்அவரும்ஒருஇணையதளத்தையோபிளாக்கையோஅமைத்துக்கொண்டுஅட்டைக்கத்திதான்வீசமுடியமேயன்றிஆயுதத்தைதூக்கமுடியாதுஎன்கிறார்கள்.யாழ்ப்பாணம்நாவலர்அரங்கில்நடைபெற்றசந்திப்பின்போதுஒருஅன்பர்சொன்னார்தமிழர்கள்மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள்தனித்துவமானவர்கள், பிறஇனத்தோடுசேர்ந்துவாழமுடியாதவர்கள், தனிநாட்டுக்குகுறைவானஎதிலும்அவர்கள்திருப்திகொள்ளமுடியாதுஎன்றெல்லாம்உங்கள்தமிழ்நாட்டுத்தலைவர்கள்பேசுவதுஉண்மையென்றால், தனிதமிழ்நாட்டுக்காகபோராடவேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டுஇவர்களதுவீராப்புக்கும்வெத்துச்சவடாலுக்கும்ஏன்எங்கள்உயிரையும்வாழ்வையும்பணயம்வைக்கிறார்கள்? என்று.வவுனியாமுகாமிலிருந்துவிடுவிக்கப்பட்டுவந்துகொண்டிருக்கும் 1280 பேரைஅழைத்துப்போகயாழ்ப்பாணநூலகத்தினருகில்உள்ளதுரையப்பாஸ்டேடியத்தின்வாயிலில்காத்திருந்தஒருகூட்டத்திடம்உரையாடிக்கொண்டிருந்தோம். ஒருமீனவப்பெண்சொன்னார்எத்தனைஇம்சைஇன்னொருதடவைஆயுதம்போராட்டம்னுஎவனாச்சும்சொன்னாதும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சுசாத்திப்புடுவேன். போரைஎதிர்கொண்டஎளியமக்களின்மனநிலைஇதுதான்.

 # இலங்கைதமிழர்கள்வாழ்வுரிமைக்காகநம்மைப்போன்றவெளியில்இருக்கும்தமிழர்கள்என்னசெய்யவேண்டும்? (அல்லது) இலங்கைதமிழர்கள்நம்மிடம்எதைஎதிர்பார்க்கிறார்கள்?

வாயைமூடிக்கொண்டிருந்தால்போதும், அதுவேநீங்கள்செய்யும்பேருதவிஎன்பதுதான்அவர்கள்நமக்குவிடுக்கும்வேண்டுகோள். காடுஅதிர்கிறதுமீண்டும்எழுகிறதுஎன்றெல்லாம்வீராவேசமாகஇங்குள்ளபத்திரிகைகள்வெளியிடும்பரபரப்புசெய்திகள்கண்டுஅவர்கள்பதறுகின்றனர். இப்படியானசெய்திகள், தனதுராணுவகெடுபிடிகளைநீட்டித்துக்கொள்ளஅரசாங்கத்துக்குஉதவும்என்றுகண்டிக்கின்றனர். ஒருவேளைஅரசாங்கத்துக்குஇப்படிமறைமுகமாகஉதவுவதுதான்இவர்களதுஉள்நோக்கமோஎன்றும்சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவேஇணையதளங்களிலும்யூடியூப்களிலும்வெளியிடப்பட்டவீரதீரபுகைப்படங்களையும்வீடியோக்காட்சிகளையும்வைத்துக்கொண்டுஒவ்வொருதமிழனையும்உற்றுஉற்றுபார்த்துசந்தேகிக்கும்ராணுவத்தாருக்குஉதவும்பொறுப்பற்றபேச்சுகளையும்அறிக்கைகளையும்நிறுத்தச்சொல்லுங்கள்என்றஅவர்களதுவேண்டுகோள்நம்தமிழ்த்தேசதலைவர்களின்இதயங்களைதைக்கவேயில்லை. இந்தியஅரசாங்கம்ஏன்தமிழர்களைஆதரிக்கவில்லை? இலங்கையின்ஒடும்வாகனங்கள்டாடாவும்லேலண்டும். இருசக்கரவாகனமென்றால்பஜாஜ், ஹீரோஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில்ரிலையன்சும்ஏர்டெல்லும். நாடுமுழுதும்இந்தியன்ஆயில்கார்ப்பரேசனின்பெட்ரோல்நிலையங்கள். அங்கிருந்தபெரியசிமெண்ட்ஆலைஇப்போதுபிர்லாவிடம். நாட்டின்பொருளாதாரத்தில்பிரதானபங்குவகிக்கும்தேயிலைத்தோட்டங்கள்இந்தியருக்குசொந்தம். இவையன்றிஇலங்கையின்அன்றாடப்பயன்பாட்டில்புழங்கும்பொருட்களில் 90 சதமானவைஇந்தியதயாரிப்புகள். தமிழர்கள்என்றசிறுபான்மையினரைஆதரித்துஇலங்கைஎன்கிறஇவ்வளவுபெரியசந்தையைஇழக்கஇந்தியமுதலாளிகளும்வர்த்தகநிறுவனங்களும்தயாரில்லை. இவர்களதுசந்தைநலனுக்குபாதிப்பில்லாதஒருஅணுகுமுறையைதான்சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதாஎன்றுயார்ஆண்டாலும்கடைபிடிப்பார்கள்.

# மலையகத்தமிழர்கள்வாழ்நிலைஎன்னவாகஉள்ளது?

இலங்கைக்குப்போய்திரும்பியிருக்கிறேன்என்றதும்எல்லோரும்யாழ்ப்பாணதமிழர்களைப்பற்றிதான்விசாரிக்கிறார்கள். ஆனால்இலங்கையில்ரயில்பாதைஅமைக்கவும்பாலங்கள்கட்டவும்துறைமுகம்தோண்டவும்காப்பிதேயிலைப்போன்றபெருந்தோட்டங்களில்வேலைசெய்யவும் 19 ம்நூற்றாண்டின்தொடக்கம்முதல்தமிழ்நாட்டிலிருந்துபிரிட்டிஷ்காரர்களால்பிடித்துச்செல்லப்பட்டுஇன்றுமலையகத்தமிழர்என்றழைக்கப்படும்நமதுமுன்னோர்களைப்பற்றிஒருவரும்விசாரிப்பதேயில்லை. அவர்களும்தமிழர்கள். அவர்களதுபூர்வீகம்என்றஇந்ததமிழ்நாட்டில்அவர்களுக்காகஒருகைப்பிடிமண்ணும்இல்லை. இருநூறாண்டுகளாகஎஸ்டேட்டுகள்என்றதிறந்தவெளிசிறைச்சாலைக்குள்ளும்அனேகஇடங்களில்முள்வேலிக்குள்ளும்அடைக்கப்பட்டவாழ்க்கைதான்அவர்களுடையது. கடும்உழைப்புச்சுரண்டலுக்குஇன்றளவுக்கும்ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போதுசிங்களவர்களாலும்ராணுவத்தாலும்கடும்ஒடுக்குமுறைக்குஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கானஅடிஉயரத்திலுள்ளமலைகளுக்குதாங்களேபாதையமைத்துமேலேறிப்போனவர்களில்பலர்இன்னும்சமதளத்திற்குஇறங்கவேயில்லை. உயரங்களிலும்சிகரங்களிலும்வசித்தாலும்அவர்களதுவாழ்க்கைஅதலபாதாளத்தில்தான். ஒருவேளைமலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள்தலித்துகள்என்பதோ, டாலரும்பவுண்ட்சும்இல்லாதகூலித்தமிழர்கள்என்பதோஅல்லதுபரபரப்பாககவனிக்கப்படாதுஎன்பதாலோஅவர்களைப்பற்றிதமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக்காவலர்களோ, ஊடகங்களோபேசுவதேயில்லை. இலங்கையின்மலையகத்தமிழர்பற்றிமட்டுமல்ல, உலகம்முழுவதும்தமதுகாலனிகளாயிருந்த 40 நாடுகளுக்குபிரிட்டிஷ், பிரான்ஸ்ஆட்சியாளர்கள்தமிழ்நாட்டுமக்களைபிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்குஇந்தியர்அழைத்துச்செல்லப்பட்டதன் (?) 150வதுஆண்டுவிழாவைவெட்கங்கெட்டுகொண்டாடிக்கொண்டிருக்கிறஇந்தநேரத்திலாவது 40 நாடுகளுக்கும்புலம்பெயர்த்துகொண்டுபோகப்பட்டதமிழர்நலன்குறித்தவிவாதம்தொடங்கப்படவேண்டும். இல்லையானால்ஈழத்தமிழருக்காகவடிக்கப்படும்கண்ணீரைகபடம்நிறைந்ததென்றேவரலாறுகுறித்துக்கொள்ளும்.

நன்றி : சூரியகதிர்