இது வீடியோ கேம்ஸ் காலம். குழந்தைகளை மட்டுமல்லாது, முப்பதுகளைத் தொட்ட இளைஞர்களையும் கவர்ந்த பிளே ஸ்டேஷன் என்னும் வீடியோ கேம்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டதே ‘தி எனிமி ஆஃப் மை எனிமி'(The Enemy of my enemy)-யின் கதைக்களம். அதாவது கதையின் அடுத்த அடுத்த கட்டங்களை வாசகர்களே முடிவு செய்வார்கள். முடிவும் வாசகரின் விருப்பத்தைப் பொறுத்தது. தி எனிமி ஆஃப் மை எனிமி முதல் பாகத்தின் கதை இதுதான்…சூரிய தேவதை பூமியில் ஓர் அழகிய இளம் பெண்ணாக அவதரிக்கிறாள். அவள் எடுக்கும் அசாதாரண முடிவால் ஜப்பான் நகரம் சிற்பமாக உறைந்துபோய்விடுகிறது. அதோடு அந்நகரம் மட்டும் எப்போதும் பகலாகவும் உலகின் மற்ற இடங்கள் எப்போதும் இரவாகவும் இருக்கும்படி சபிக்கப்படுகிறது. இதை கதையின் நாயகனான ஜப்வாலா நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும். சாகச நாயகனான ஜப்வாலாவின் அடுத்தடுத்த நகர்வுகளை தீர்மானித்து, உலகுக்கு ஒளியேற்றி வைக்கவேண்டிய பொறுப்பு வாசகரிடமே.
முதல் பாகத்தில் உலகத்துக்கு ஒளியேற்றி வைக்க பாடுபடும் ஜப்வாலா, இரண்டாம் பாகத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு என்ற பெயர் கொண்ட பப்பூன்களை தேடிப் பயணிக்கிறார். அன்டார்டிகாவில் இருக்கும் உலகத்தையே கைக்குள் வரவழைக்கும் சக்தி படைத்த மந்திர மையைத் தேடிப்போகும் பப்பூன்களை கண்டுபிடித்து ஜப்வாலாவிடம் ஒப்படைக்கும் பணி வாசகருடையது.
புதுமையான கதை சொல்லும் யுத்தியின் மூலம் முடிவில்லா கற்பனை உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது தி எனிமி ஆஃப் மை எனிமி – பாகம் 1 மற்றும் 2. எளிய ஆங்கில நடையில் எழுதியிருக்கிறார் புத்தக ஆசிரியர் அன்சுமணி ருத்ரா. இந்தியாவில் வெளியாகும் முதல் மல்டிபிளேயர் கேம்புக் என்னும் அறிமுகத்தோடு வந்திருக்கும் இந்த புத்தகம், குழந்தைகளுக்கான கதையும் புதிர் விளையாட்டும் கொண்ட டபுள் ட்ரீட்.
The Enemy of my enemy
Banana Republic – The Enemy of my enemy 2
விலை : ரூ. 90
ஆசிரியர் : Anshumani Ruddra
வெளியீடு : Scholastic India
interesting….
Game book’a ?? puriyalaiye….!