“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன்

அப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா? அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா? எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை! நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும் அதே மனநிலையில் தான் எதிர்கொண்டேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் தவிர அசோகமித்திரனை அதிகம் படித்ததில்லை. கட்டாயம் படிக்கவேண்டும் என்று வாங்கி வைத்திருக்கும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் புரட்டப்படாமல் கிடக்கின்றன. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் பிறந்த கிராமத்தில் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்காத லிங்காயத்து ‘சாமி’களை, அசோகமித்திரன் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது எடுத்த பேட்டி இது. சுவாரஸ்ய குறைவு காரணமாக பேட்டி பிரசுரமாகவில்லை. பேட்டியில் சுவாரஸ்யத்தைக் கூட்டச் சொல்லி ஆசிரியர் குழு பலமுறை சொல்லியும் அதை செயல்படுத்த முடியாமைக்கான காரணங்களில் என் ஜாதி குறித்த அசோகமித்திரனின் கேள்விக்கு நிச்சயம் இடம் உண்டு. பழைய காகிதங்களுக்கு நடுவே இருந்த இந்த பேட்டியை கீழித்துப் போட மனம் வரவில்லை. பிரசுரிக்கிறேன்…

”முதுமையை என்னால் கொண்டாட முடியவில்லை. இறக்கி வைக்க முடியாத மாபெரும் சுமையாக இருக்கிறது. அதை இறக்கி வைக்கும் காலத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் அசோகமித்திரன். அறிமுகம் தேவையில்லாத தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமை.

”என்னுடைய இளமை பருவத்தில் செகந்திராபாத்திலிருந்து சென்னை வந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை. அப்போதிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘நாடகத்தின் முடிவு’ நான் எழுதிய முதல் சிறுகதை. அந்த வேலையிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளனாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையே இருபத்தி மூன்று ஆண்டுகள் கணையாழி ஆசிரியராக இருந்தேன். எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அனுபவங்களே படைப்புகளாகின்றன”

”தமிழ் இலக்கிய சூழல் தற்போது எப்படியுள்ளது?”

”தமிழ் ஜொலிக்கிற காலம் இது. நிறைய படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. என்னால் முடிந்தவரை எல்லா படைப்பாளிகளையும் படைப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு காலத்தில் தீவிர எழுத்தை சிற்றிதழ்களில்தான் பார்க்க முடியும். இன்று வெகுஜன பத்திரிகைளே தீவிர எழுத்துக்களை தேடிப்பிடித்து பிரசுரிக்கின்றன. சிற்றிதழ்களின் தேவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நிறைய படைப்புகள் வெளிவந்தாலும் சமகாலத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படி கொண்டாடப்பட்ட எத்தனையோ படைப்புகள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. கல்கி எழுதிய போது இதெல்லாம் எழுத்தா என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருடைய எழுத்து கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரு படைப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை பத்து, இருபது வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்”

”சமீப காலங்களில் நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் அது சர்ச்சைக்குரியதாகிறதே?”

”நிஜத்தை பதிவு செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். எழுத்தைப் போலவே தான் நானும் நிஜமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இறை நம்பிக்கை உண்டு. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனக்கஷ்டங்களை கடவுளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன். இதில் எந்தவித போலித்தனத்தையும் காட்டவில்லை. அதுபோலவே சில சமயம் எதார்த்தமாக சொல்லிப்போகிற வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. ஒரு கலைஞன் மீது சொல்லப்படுகிற இப்படிப்பட்ட அவதூறுகள் எவ்வளவு தூரம் அந்த கலைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையான வாசகனையோ, படைப்பையோ ஒருபோதும் பாதிப்பதில்லை.”

”ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். அதை விட்டுவிட்டு தமிழிலேயே தொடர்ந்து இயங்குவது பற்றி வருத்தம் உண்டா?”

”தமிழின் வசீகரம் என்னை ஆட்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன். ஒரு முறை வி.எஸ்.நைபால் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றார். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவதில் வருத்தம் ஒன்றும் இல்லை. எழுத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை என்கிற மனக்குறை இப்போது அழுத்துகிறது. சில தீர்க்கமான முடிவுகளை நான் எந்தவித பலாபலன்களையும் எதிர்பார்க்காமல்தான் எடுக்கிறேன்.”

படங்கள் நன்றி : அவுட்லுக்

“நாங்கள் (பார்ப்பனர்கள்) யூதர்களைப் போல் வாழ்கிறோம்” என்கிற அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரைக்காக போடப்பட்ட சித்திரங்கள் இவை.

26 thoughts on ““ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன்

  • வரு​கைக்கு நன்றி சிரவணன்

 1. இதைப் படித்ததும் ஒரு மனசு கேட்டது: “அசோகா மித்திரன் ஜாதி பற்றி கேட்டாரா? அப்படியானால் மதிக்கத் தக்கவர் பட்டியலிலிருந்து எடுத்துவிடு”

  கொஞ்ச நேரம் மனசும் அறிவும் தீரமாக விவாதித்தன.. பின்னர், மனசு திரும்பி வந்தது, சொன்னது: “பரவாயில்லை, ஜாதியைப் பற்றி நேரடியாகத்தானே கேட்டார். மற்றவர்களைப் போல் பேடித்தனமாக, பின்னால் இருந்துகொண்டு கீழ்த்தரமாக விவாதிக்கவில்லையே “,
  அமாம் தமிழகத்தில் இரட்டை நாக்குடன் செயல்பட்ட, செயல்பட்டுக்க் கொண்டிருக்கும் படைப்பாளர்கள் பலர் இருக்கின்றனர்.
  பாகி

  • கருத்து பகிர்தலுக்கு நன்றி பா.கி சார்…

 2. Why are you putting Naipal’s words in to A.Mitran’s mouth.What sort of journalisitic ethics is this.Did A.Mitran write an article in Outlook or was his views were quoted by S.Anand the then Correspondent of Outlook.
  Cant you even check such facts.Or is it part of some ‘politically correct’ dirty tricks.

  • I’ave no intention to do dirty tricks Mr. Tamil. What i’m published was truth. Just face the truth.

 3. உங்கள் சாதி குறித்து கேட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அசோகமித்திரன்கள் மட்டுமல்ல இன்னும் பல் பிற்படுத்தப்பட்ட பித்தன்களும் இபடித்தான் இருக்கிறார்கள். முதலில் ஊரைக் கேட்பார்கள். ஊரைக் கேட்டதும் அவர்களே ஒரு முடிவுக்கு வருவான்கள். கூமுட்டை…….நாம் இன்னா சாதிதான் என்று பளீர் எனச் சொன்னால் அப்படியே ஜெர்க் ஆனாங்க..ஆனால் அந்த வகையில் உண்மையிலேயே அசோகமித்திரனை பாராட்டலாம் ஒழி மறைவில்லாமல் உங்கள் சாதியைக் கெட்டதற்காக, மற்றபடி மனசுக்குள்ளெயே சுவரை எழுப்பி வாழ்கிறவர்களை என்ன சொல்வது? மற்றபடி பார்ப்பனர்கள் யூதர்களைப் பொல நடத்தப்படுகிறார்கள் என்பதெல்ல்லாம் சும்மா. அங்கீகரிப்படாமல் போன ஆதங்கத்தில் பெரியவர் இப்படிப் பேசுகிறார். யூதர்களைப் போல பார்ப்பனர்கள் நடத்தப்பட்டால் ஜெயேந்திரன் இந்நேரம் தண்டிக்கபப்ட்டிருக்க வேண்டும். ஆக இங்கே யூதர்கள் தலித்துக்கள் தான்……… பார்ப்பன சிந்தனையில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளால் யூதர்களைப் போல நடத்தப்படுகிறவர்கள் தலித்துக்களே.

  • உங்கள் ​கோபத்​தை உணர முடிகிறது. கருத்து பகிர்தலுக்கு நன்றி!

 4. அசோகமித்திரன் கூற்றுகளுக்கு ஒன்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.செயற்கையாக இலக்கியவாதி ஆனவர்.அப்பொழுதைய ஆலை இல்லா ஊரின் இல்லுப்ப சக்கரை.

  சுப்ரஜா

  • செயற்​கையான இலக்கியவாதி ஆனவர் ஆனாலும் அவ​ர் தமிழிலக்கியத்தின் கிரீடத்தில் அல்லவா இருக்கிறார்?

  • அவுட்லுக்கில் வந்த படங்கள்தான். படங்க​​ளை வ​ரைந்த க​லைஞரின் ​பெய​ரைத்தான் ​தெரிந்து​கொள்ள முடியவில்​லை.

 5. நீங்க நல்லா எழுதணும் ப்ளாக் முன்னேற…

  (குறிப்பு: இந்தப்பாட்டை நான் எழுதுவதால் “ஒரு எம்ஜிஆர் கட்சிக்காரன் பகிரங்கமாக என்னை மிரட்டுகிறான்” என தயவு செய்து பரப்பி விடாதீர்கள்…)

  ஒரு பிரபலமான நபரை திட்டியோ, வாழ்த்தியோ அதன் மூலம் பிரபலம் தேடிக்கொள்கிற ஒரு கூட்டம் உண்டு. இதில் திட்டி பிரபலமாக தொடர்ந்து முயற்சித்து வருகிறீர்கள் நந்தினி. உங்கள் கட்டுரை உங்களை பெரிய நபராகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. இப்படி எழுதி நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக கொஞ்சம் சிந்தியுங்கள்… எழுதுங்கள். வீண் வார்த்தைகள் மூலம் வீணாகி விடாதீர்கள். (நீங்க நல்லா எழுதணும் ப்ளாக் முன்னேற…)

 6. நீங்க நல்லா எழுதணும் ப்ளாக் முன்னேற…

  (குறிப்பு: இந்தப்பாட்டை நான் எழுதுவதால் “ஒரு எம்ஜிஆர் கட்சிக்காரன் பகிரங்கமாக என்னை மிரட்டுகிறான்” என தயவு செய்து பரப்பி விடாதீர்கள்…)

  ஒரு பிரபலமான நபரை திட்டியோ, வாழ்த்தியோ அதன் மூலம் பிரபலம் தேடிக்கொள்கிற ஒரு கூட்டம் உண்டு. இதில் திட்டி பிரபலமாக தொடர்ந்து முயற்சித்து வருகிறீர்கள் நந்தினி. உங்கள் கட்டுரை உங்களை பெரிய நபராகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. இப்படி எழுதி நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக கொஞ்சம் சிந்தியுங்கள்… எழுதுங்கள். வீண் வார்த்தைகள் மூலம் வீணாகி விடாதீர்கள். (நீங்க நல்லா எழுதணும் ப்ளாக் முன்னேற…)

  • ஐயா திரவியராஜ்,
   திட்டி பிரபலம் ஆக ​வேண்டிய அவசியம் எனக்கு இல்​ல​வே இல்​லை.
   ஜாதி​யைப் பற்றி எப்​போது எழுதினாலும் பின்னூட்டம் ​போட்டுவிடுகிறீர்கள். ஜாதிப்பற்று உங்க​ளை ​​ரொம்ப​வே ஆட்டுகிறது ​போல…

   //இப்படி எழுதி நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக கொஞ்சம் சிந்தியுங்கள்… எழுதுங்கள். வீண் வார்த்தைகள் மூலம் வீணாகி விடாதீர்கள்.//

   ஆக்கப்பூர்வமான்னா ​​சோறு ஆக்கற​தைப்பத்தியா? ​​

   //ஒரு எம்ஜிஆர் கட்சிக்காரன் பகிரங்கமாக என்னை மிரட்டுகிறான்” என தயவு செய்து பரப்பி விடாதீர்கள்…//

   ஐ​யோ ஒ​ரே கா​​மெடியா இருக்கு.. நீங்க அவ்வளவு பிரபலமானவரா?! ​​தெரிய​வே இல்​லை எனக்கு…

 7. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை!
  …….

  இதிலே உங்கள் அபிமான எழுத்தாளர்கள் இருவரும் அடங்குவார்களா?

  • நிச்சயமாக அவர்கள் அப்படியில்​லை. நிஜத்திலும் எழுத்திலும் அவர்க​ளை ஒன்றாக​வே பார்க்க முடிகிறது.

 8. பார்ப்பணர்களின் கொண்டையை நீங்கள் தேடிப்பார்க்க தேவை இல்ல.. அது எப்போதும் நியாயத்திற்கு எதிராக ஆடிக்கொண்டுதான் இருக்கும்..

  உங்களை படைப்புகளை எங்களுடன் பகிர

  http://www.narumugai.com

  • மலத்​தை வாயில் திணிப்பதும், உயி​​​ரோடு எரித்துக்​கொல்வதும்தான் ஜாதி​வெறி என நி​னைக்கறீ​ர்கள் ​போல…
   அது எரிகிற ​நெருப்பு என்றால் இது சாம்பலுக்கும் கு​மைந்து​கொண்டிருக்கும் ​​நெருப்பு. எண்​ணெ​யை விட்டா எப்​போது ​வேணும்னாலும் பத்திக்கும்!

 9. ஒருவர் ஜாதி பற்றி கேட்டதாலேயே ஜாதி வெறியர் என்ற முடிவுக்கு வருவது சரியான அணுகுமுறைதானா?
  திருச்சி கார்த்தி

 10. உங்கள் பத்திக்கைப் பணிச்சூழலுக்கும் இந்த சாதி வெறி தான் காரணமோ… இந்த இரண்டு வருடங்களுக்குள் 5 நிறுவனங்கள் மாறியிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்த, உங்களையும் அறிந்த நண்பர்கள் சிலரிடம் உங்களைப்பற்றி விசாரித்தேன். அவர்கள் சொன்ன விஷ‌யம் உங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை புட்டு வைத்தது. எல்லா இடத்திலும் ‘சாதி ரீதியாக உங்களை புண்படுத்துவதாகச்’ சொல்லித் தான் பணியை உதறி வெளியேறியிருக்கிறீர்கள்… இப்போது பணிபுரிந்து வரும் நிறுவனத்திலும் உங்களுக்கு பிரச்சினை…”பார்ப்பன இஸம் தலை தூக்கி ஆடுவதாகக் காரணம் சொல்லிக் கொண்டிருக்கும் நீங்கள் வேறு நிறுவனத்திற்கு தாவ இருப்பதாகவும் கேள்வி..! உண்மையா நந்தினி?

  • ஹ…ஹ..:) திருச்சி கார்த்தி உங்கள் ஆராய்ச்சி​யை நி​னைத்து சிரிப்பு சிரிப்பா வருது.
   //இந்த இரண்டு வருடங்களுக்குள் 5 நிறுவனங்கள் மாறியிருக்கிறீர்கள்.//
   எனக்​கே இது புது தகவலாதான் இருக்கு…
   //உங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை புட்டு வைத்தது//
   🙂 உங்களுக்கு ஒண்ணு ​தெரியுமா என்​னை எல்​லோரும் திமிர் பிடிச்சவ என்று முன்அறிமுகம் தருவாங்க. இப்பவும் சிரிப்பு சிரிப்பா வருது…
   அப்புறம் எனக்கு தன்னம்பிக்​​கை இல்லாம ​போயிருந்தா என்னிக்​​கோ நான் திண்​ணை​யை காலி பண்ணியிருப்​பேன்.
   //எல்லா இடத்திலும் ‘சாதி ரீதியாக உங்களை புண்படுத்துவதாகச்’ சொல்லித் தான் பணியை உதறி வெளியேறியிருக்கிறீர்கள்//
   திரும்பவும் சிரிப்பு சிரிப்பாதான் வருது. நான் பணியாற்றிய இடத்தில் சாதி ஆதிக்கம் இருந்தது. நான் ​வெளி​யேறியதற்கு அது காரணம் அல்ல..
   அப்புறம் நான் குமுதம் சி​நேகியில் இருந்து ஏன் ​போ​னேன்? குங்குமத்திலிருந்து ஏன் ​​​போ​னேன்? ஆ.விகடனிலிருந்து ஏன் ​போ​வேன்? சன் நியூஸிலிருந்து ஏன் ​போ​னேன்? சூரியகதிரிலிருந்து ஏன் ​போகப்​போகி​​றேன்? என்பதற்​கெல்லாம் ஒவ்​வொன்றுக்கும் ஒவ்​வொரு காரணம் இருக்கிறது. அ​தை​யெல்லாம் ​​நா​னே ​சொல்ல​வேண்டிய ​நேரத்தில் ​​சொல்​வேன். நீங்கள் உங்கள் ​பொன்னான ​நேரத்​தை வீணடித்து என்​னைப் பற்றி தகவல் ​சேகரிக்க ​வேண்டாம் என அன்​போடு ​கேட்டுக்​கொள்கி​றேன்!

 11. ஆக்கப்பூர்வத்துக்கு உங்களுக்கு தெரிந்த‌ அர்த்தம் சோறு சமைப்பது மட்டும் தானா? நீங்க பெரிய அறிவாளி நந்தினி… யாருக்குமே தெரியாத அர்த்தம் உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது…

  நான் பிரபலம் இல்லை தான்… எனக்குத் தெரியும்? அதே நேரத்தில் ஒரு பிரபலமான எழுத்தாளரின் படைப்பிற்கு நான் பின்னூட்டம் எழுதவில்லை என்பதையும் அறிவேன். யாருக்கு சாதிப்பற்று அதிகம் என உங்கள் கட்டுரையை படிப்பவர்கள் உண‌ர்ந்திருப்பார்கள். அடிக்கடி சாதியைப் பற்றிய கட்டுரைகளை எழுதுவதால் உங்களுக்குள் சாதி பற்றி எரிவதை உணர முடிகிறது. இன்னும் அதைப்பற்றியே யோசித்து மனநோயாளி ஆகி விடாதீர்கள்…

 12. “அயோடின் கலக்காத சாதாரண உப்பை தடை செய்ய உத்தரவு போடுகிறது நீதிமன்றம். கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோயை உண்டாக்கும் பீடி, சிகரெட், மதுபானங்களை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் உத்தரவு போடுவதில்லை-? ” nenjai piliyum unmai thurokaththirkku thunai pokira arasiyal amaippu.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.