எழுதாமல் போன இரண்டு வருடங்கள்…

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வலை தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்… பெரிய இடைவெளியாகத்தான் தெரிகிறது. கடுமையான வேலைபளு ஏற்பட்டதே. எழுதாமல் போனதற்கு முக்கிய காரணம். எழுதாமல் விட்ட விஷயங்கள் ஏராளம், எழுதியிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது.
இந்த இரண்டு வருட இடைவெளியில் நான் நிறைய கற்றிருக்கிறேன். மிக மிக மோசமான அனுபவங்கள் மூலம். வெகுளித்தனமான, மேம்போக்கான சிந்தனையோடு இருந்த எனக்கு, இந்தக் காலம் நிதர்சனத்தை புரிய வைத்திருக்கிறது. மிக மிக மோசமான அனுபவங்களுக்கு நன்றி!
ஆங்.. நான் சொல்ல வந்த விஷயமே வேறு… எழுதாமல் விட்டாலும் என்னுடைய தளத்திற்கு நிறைய பேர் வருகை தந்து, படித்து மறுமொழி இட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்களின் வருகைதான் என்னை மீண்டும் எழுத வைத்திருக்கிறது. முகம் தெரியா அந்த நண்பர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

Advertisements

4 thoughts on “எழுதாமல் போன இரண்டு வருடங்கள்…

  1. நந்தினி எப்டி இருக்கீங்க ?நலம் தானே.

    மகளிர் சக்தில உங்க போஸ்ட் பார்த்துட்டு க்ளிக் பண்ணேன் .உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன் ,நம்பர் மிஸ் பண்ணிட்டேன்ப்பா.நிறைய எழுதுங்க.

    • நான் நலம் கார்த்திகா.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தால் மீண்டும் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.