நிலவிலிருந்து மின்சாரம்: அரசு புதிய திட்டம்

மின்வெட்டும் சில காகங்களும்

 

4 thoughts on “நிலவிலிருந்து மின்சாரம்: அரசு புதிய திட்டம்

 1. அடுத்தவர்களின் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள்

  சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நான்கு மாணவியர் சாதனை செய்துள்ளனர். நைஜீரியா நாட்டில் இந்தக் கண்டுபிடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
  14 வயதான டூரோ அய்னா அடிபோலா, பேலகே வொலுவடோயின், அகின்டேல் அபியோலா, மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய நான்கு நைஜீரிய மாணவிகள் இந்தச் சாதனையாளர்களாவர்.
  உலகின் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக நம் தமிழ்நாட்டிலும் மின்வெட்டு என்பது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த மாணவிகளின் சாதனை குறிப்பிடத் தக்கதாகிறது.
  தமிழகத்தைப் போலவே, ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பாக வளர்ந்துவரும் நாடான நைஜீரியாவில் மின்வெட்டு என்பது பழகிய ஒன்றுதான். மின்சாரப் பயன்பாடே இல்லாத பகுதிகளும் இந்நாட்டில் இருக்கின்றனவாம்.
  இந்த நிலையில் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகளின் இந்தக் கண்டுபிடிப்புக்கு அந்த நாட்டில் வரவேற்பு பெருகுவதில் ஆச்சரியமில்லை.
  லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் விளக்கிக் காண்பித்தனர்.
  முதலில் சிறுநீரை நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாகப் பிரித்து, பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு வாயு கலனுக்குப் போகிறது.
  வாயுக்கலனில் ஹைட்ரஜன் போராக்ஸ் எனப்படும் திரவமாக மாற்றப்படுகிறது. அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஒரு மின்னாக்கி (ஜெனரேட்டர்)க்கு செலுத்தப் படுகிறது. அங்கு ஹைட்ரஜன் வாயுவிலிருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது.
  ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  உங்களின் கழிப்பிடத்திலேயே சிறுநீர் பிடியுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.