Monthly Archives: திசெம்பர் 2012
பனிவிழும் அதிகாலை பொழுதில் ஒரு ஜோடி பறவைகளின் கீச்சுக்குரல்!
சென்னையின் கான்கீரிட் காடுகளிலிருந்து தப்பித்து, புத்துணர்வு பெற நீங்கள் ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. இதோ இங்கேயே இருக்கிறது ஒரு இடம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது கழிமுகத்துவாரமான கழிவெளி. நன்னீரும் கடல் நீரும் சேரும் இந்த இடத்தில் பல வகைப்பட்ட பறவையினங்கள், ஊர்வன, புல் வகைகள், மீன் வகைகள் என பல்லுயிர்ச்சூழல் நிரம்பி காணப்படுகிறது.
முதலை பண்ணை செல்பவர்கள் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த இந்த இடத்திற்கும் சென்று பாருங்கள். நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும். இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். இது வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடுவதற்கான இடமல்ல, நம் சூழலை காப்பதன் முக்கியத்துவத்தை அனுபவித்து உணர்வதற்கான இடம்.
பனி நிறைந்த ஒரு அதிகாலைப் பொழுதில் அமைதியாக அமர்ந்து, கூட்டிலிருந்து வெளியே வரும் பறவையின் கீச்சுக்குரலை கேளுங்கள். அதுவொரு இனிய அனுபவமாக இருக்கும்!
தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் தன்அறிமுக தொகுப்பு ‘ஸ்கிரிப்டி’ல்!
தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் தன்அறிமுக தொகுப்பு ‘ஸ்கிரிப்டி’ல்!
‘குங்குமம்’ இதழில் தொடராக நான் எழுதிய எழுத்தாளர்களின் தன்அறிமுகம் புத்தகவடிவில். இதோ இங்கே படிக்கலாம்.
இவரும் தொகுப்பாளிதான்!
http://www.economist.com/multimedia?bclid=1242934274001&bctid=2035061303001
நம்மூரில் தொகுப்பாளினிகள் என்றாலே முதல் தகுதியாக 20 வயதுக்குள் இருக்கவேண்டும். அழகும் ‘அம்ச’முமாக இருந்தால்தான் கேமாராவுக்கு முன்னாலேயே நிறுத்துவார்கள். குத்து பாடல்களை தொகுத்தளிக்க அந்த தகுதி தேவையாக இருக்கிறது. சரி போகட்டும் ‘தி எகனாமிஸ்ட்’ பத்திரிகையின் இணைய பக்கத்தில் 2012-ன் சிறந்த புத்தகங்களை பட்டியலிடுகிறார்கள் இந்த தொகுப்பாளின் வீடியோ இணைப்பு இங்கே…
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்து அட்டை