ஆசிட் வீச்சால் கண்கள் பறிக்கப்பட்ட விநோதினிக்கு உதவுங்கள்!

விநோதினி தன் எதிர்காலம் குறித்து எத்தனை கனவுகள் கண்டிருப்பார் என்று தெரியாது. ஆனால் இன்று அவருடைய அத்தனை கனவுகளும் அமிலக் கரைசலில் கரைந்துபோய் இருண்ட வெளியில் தவித்துக் கொண்டிருக்கின்றன.

படம்

காரைக்காலில் சமீபத்தில் 23 வயதே ஆன விநோதினியின் மீது நடந்த ஆசிட் வீச்சு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். தன் அப்பாவுடன் சென்று கொண்டிருந்த விநோதினியின் மீது தன்னை காதலிக்க மறுத்ததாகச் சொல்லி சுரேஷ் என்பவன் பாட்டில் ஆசிட்டை வீசியிருக்கிறான். அடுத்த நொடியே முகம் முழுக்க சிதைந்துபோனது. அமில சிதைவுகளோடு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப் பட்ட விநோதினியை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கண்ணிலும் பார்வை பரிபோய்விட்டதைச் சொன்னார்கள். ஆரம்பகட்ட மருத்துவத்துக்கே லட்சங்கள் செலவாகியிருக்கிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த விநோதினியின் பெற்றோரால் அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியவில்லை.
இப்போது முழுக்க சிதைந்துவிட்ட கண்களின் தோற்றத்தை உருவாக்கும் அறுலை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக விநோதினியின் நண்பர்கள் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். விநோதினிக்கு உதவ விரும்புகிறவர்கள் இந்த இணைய தளத்தின் மூலமாக உதவாலாம். உதவி செய்ய நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்திலிருந்தே உதவி செய்யலாம்.  http://www.orangestreet.in/projects/vinodhini இங்கே க்ளிக்குங்கள். உங்களில் ஒருத்தியாக உதவி கேட்டு நிற்கும் விநோதினிக்கு உதவுங்கள்-.
விநோதினி பற்றிய விடியோ இணைப்பு

தப்பிய வடகிழக்கு பருவமழை – இடம் மாறிய பூநாரைகள்!

படம்

நளினமும் அழகும் மிக்க பறவையினங்களில் ஒன்று பூநாரை! சென்னைக்கு அடுத்துள்ள பழவேற்காடு பகுதி பூநாரைகளுக்கு ரொம்பவும் பிடித்த இடம்.  இது ஒரு சூழலியல் சுற்றுலா தளமும்கூட. கடலை ஒட்டியிருக்கும் கழிமுகப் பகுதிகளில் கிடைக்கும் பாசியும் இறாலும் அதிகப்படியாக கிடைப்பதால் இந்தப் பகுதியில் சீசனின்போது ஆயிரக்கணக்கான பூநாரைகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம்.
பொதுவாக பூநாரைகளின் சீசன் ஏப்ரல் மாதத்துக்கு மேல்தான் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பூநாரைகள் வரத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் சூழுலியல் செயல்பாட்டாளர் திருநாரணன். தி நேச்சர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பை நிறுவி பல்வேறு சூழலியல் சார்ந்த பணிகளைச் செய்துவரும் இவர், அதன் ஒரு பகுதியாக பழவேற்காடு போன்ற பகுதிகளில் களஆய்வு மேற்கொள்கிறார்.
‘‘வருடா வருடம் பழவேற்காடு பகுதிகளில் எங்கள் அமைப்பு சார்பாக களஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் ஆய்வில் கவனித்த விஷயம்…ஜனவரியிலேயே பூநாரைகளை அதிக அளவு பார்க்க முடிந்ததுதான். பழவேற்காடு ஆந்திர_தமிழக எல்லையில் அமைந்திருக்கும் பகுதி. வழக்கமாக நவம்பரில் வரத்தொடங்கும் பூநாரைகள் ஆந்திர மாநில எல்லைகளான சூலூர்பேட்டை, தடா பகுதிகளில் இருக்கும். அங்கு தண்ணீர் வற்றத் தொடங்கியது. தமிழகத்தின் அண்ணாமலைச் சேரி, பொன்னேரி பகுதிகளுக்கு வரத்தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் ஆந்திர எல்லையோர நீர்நிலைகள் வற்றிப்போய், இப்போதே தமிழக பகுதிகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன.

படம்

இப்படி மழை தவறி பெய்வது அல்லது சரியான மழை பொழியாதது தொடர்ந்தால் வரும் காலங்களில் பூநாரைகள் இந்தப் பகுதிகளுக்கு வருவதை நிறுத்திவிடும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்நு எச்சரிக்கை மணி அடிக்கிறார் திருநாரணன்.

படங்கள் : தி நேச்சர் டிரஸ்ட்

 

தொடர்புடைய பதிவுகள்

வெளிர் சிவப்பு ஓவியம்!

சிலந்திகளின் படையெடுப்பு பருநிலை

மாற்றத்தின் அறிகுறி?!

கால்களின் பயணம் – ஒரு புகைப்பட தொகுப்பு

ஒரு மழை நாளில் நனைந்த கால்கள்...

ஒரு மழை நாளில் நனைந்த கால்கள்…

அவுட் ஆஃப் போகஸ் ஆன படம். ஆனாலும் இந்த வண்ணச் சிதறல் ரசிக்க வைக்கிறது...

அவுட் ஆஃப் போகஸ் ஆன படம். ஆனாலும் இந்த வண்ணச் சிதறல் ரசிக்க வைக்கிறது…

மார்கழி கோலத்துடன் இந்த கால்கள்...

மார்கழி கோலத்துடன் இந்த கால்கள்…

வழிபட காத்திருக்கும் இந்த கால்கள்...


வழிபட காத்திருக்கும் இந்த கால்கள்…

 

 

 

தைத்திருநாள் வாழ்த்துகள்!

நாங்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை, இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளான பொங்கல்தான்.

படம்

எளிமையாக எங்கள் வீட்டில் பொங்கலிட்டு இயற்கைக்கு நன்றி சொன்னோம்!

படம்

நண்பர்களுக்கு தைத் திருநாள் வாழ்த்துகள்.

எல்லாம கர்மவினை!

‘கர்மவினை’ போன்ற பல அறிவியல் அனுகூலங்களை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்னபிறகும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் முன்னோர்களால் ஏன் நிகழ்த்தமுடியவில்லை?

journalism copy

‘கர்மவினை’ பற்றி அடிக்கடி நண்பர் ஒருவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார். அதாவது நியூட்டன் தன்னுடைய ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’ என்ற மூன்றாம் விதியை 1687ம் ஆண்டில் வெளியிடுவதற்கு முன்பே நம் முன்னோர்கள் ‘கர்மவினை’ என்ற ஒற்றை வார்த்தைக்குள்(அதாவது ‘கர்மம்’ என்றால் செயல், ‘வினை’ என்பது செயலுக்கு எதிராக வருவது) சொல்லிவிட்டார்கள் என்பது அவரின் விளக்கம். தட்டையாக எடுத்துக்கொள்ளும்போது இது நம்மையெல்லாம் பெருமையில் திக்முக்காட வைத்துவிடும்! நம் தாத்தாக்கள் (பாட்டிகள் இதில் சேர்த்தியில்லை) எப்படி யோசித்திருக்கிறார்கள் பாருங்கள் என்று மயிர் கூச்செறிய பேசத்தோன்றும். பேசமட்டுமே செய்வது நமக்கே உரிய சிறப்பு குணாதிசயம்! இப்படிப் பேசுபவர்கள் இன்று பல்கிப் பெருகிவிட்டார்கள்.

எல்லாம் சரிதான் ‘கர்மவினை’ பற்றி சொன்னவர்களால் ஏன் அதை அறிவியல் ரீதியாக அதை நிரூபிக்க முடியலில்லை?

‘கர்மவினை’ போன்ற பல அறிவியல் அனுகூலங்களை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்னபிறகும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் முன்னோர்களால் ஏன் நிகழ்த்தமுடியவில்லை?

இன்னொரு விஷயம்… ஒரே விதமான சிந்தனைகள் பல பேருக்கு ஒரே சமயத்தில் தோன்றுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த சிந்தனைக்கு யார் முதலில் நடைமுறை வடிவம் கொடுக்கிறார்கள் என்பதே முக்கியம். அந்த வகையில் நம் முன்னோர்கள் எல்லாம் நல்ல சிந்தனாவாதிகள் மட்டுமே. இதுபோன்ற சிந்தனைகள் உலகம் முழுக்க உண்டு. ஆப்பிரிக்க பழங்குடிகளிடம் உண்டு, இன்காக்களிடம் உண்டு, ஆஸ்திரேலிய  அபராஜினல்களிடமும் உண்டு.

‘கர்மவினை’ பற்றி சிந்தித்தவர்கள்தான் மக்களை பகுத்து, இவர்கள் இதை மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற வருணாசிரம கட்டுப்பாட்டை விதித்து, அவர்களை சிந்திக்கவே விடாதபடி செய்துவிட்டவர்கள். இதுதான் பெருமைபடுவதற்குரிய விஷயமா என்று சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.