இந்த வருடம் கோடையின் முடிவில் எங்கள் வீட்டு முருங்கை மரம் பூத்துக் குலுங்கியது. சென்ற வாரம் பெய்த மழையில் முருங்கைப் பூக்கள் பளிச்சென மின்னின. அதில் வழிந்தோடிய தேனைக்குடிக்க மழைக்குப் பிறந்த வண்ணத்துப் பூச்சிகள் படையெடுத்தன. பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. இரண்டு வகையான வண்ணத்துப்பூச்சிகள் பெருமளவில் இருந்தன. ஒன்று கருமையில் வெண்மையான புள்ளிகளைக் கொண்டும் மற்றொன்று கருமையில் வெளிர் நீல நிற புள்ளிகளைக் கொண்டும் இருந்தன. நானும் மகன் கோசியும் சேர்ந்து ரசித்தோம். சிலவற்றை படம் பிடித்தோம்…