’’உணர்வுகளைச் சொல்வதே சிறந்த புகைப்படம்!’’

portrait

”ஒரு புகைப்படம், உங்களைப் பாதிக்கணும். சிறு புன்னகை, ஒரு துளி கண்ணீர், பொங்கும் கோபம் என உங்களுக்குள் ஏதோ ஓர் உணர்வைக் கிளப்ப வேண்டும். அதுதான் சிறந்த புகைப்படம்!” – நிதானமான வார்த்தைகளில், அழுத்தமாகப் பேசுகிற நந்தினி வள்ளி, புகைப்படக் கலைஞர்!
தமிழ்நாட்டில் அவ்வளவாகப் பிரபலமாகாத ‘ஸ்டேஜ் போட்டோகிராஃபி’ நந்தினி வள்ளியின் அடையாளம்!
”இயற்கையாக இருப்பதை எடுப்பது ஒரு வகை. கமர்ஷியலாக ஜோடித்து எடுப்பது இன்னொரு வகை. ஸ்டேஜ் போட்டோகிராஃபி என்பது மூன்றாவது வகை. சுருக்கமாகச் சொன்னால், இது மாடர்ன் ஆர்ட் மாதிரி. ஏதாவது ஒரு எண்ணத்தை அடிப்படையாகவைத்து, அதற்கான விஷயங்களை செயற்கையாக உருவாக்குவோம். கிருஷ்ணர், இந்தக் காலத்தில் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பது ஒரு கான்செப்ட். நட்சத்திர விடுதியில் கிருஷ்ணர் உட்கார்ந்திருப்பார். அப்படி ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் விதவிதமான உணர்வுகள் தோன்றுமே… அதுதான் ஸ்டேஜ் போட்டோகிராஃபி!” என்று விளக்கம் தருகிறார் நந்தினி வள்ளி.

Nandhini valli
”எம்.ஏ., ஃபிரெஞ்ச் படித்து முடித்த பிறகு, லண்டன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் போட்டோகிராஃபி படிக்க வாய்ப்பு கிடைச்சது. தொழில்நுட்பம் எங்கேயும் கற்றுக்கொள்ளலாம். படைப்புத்திறன் நம்முடையதுதானே. நாமே நமக்கான ஸ்டைலை உருவாக்கிக்க முடியும். அப்படி எனக்காக நான் பிடிச்ச ஸ்டைல், ஸ்டேஜ் போட்டோகிராஃபி!
முதல் முயற்சியிலேயே என் படங்கள் நிறைய கேலரிகளில் இடம்பிடித்துவிட்டன. என் எல்லைகள் இன்னும் இன்னும் விரிவடைய வேண்டும் என்பதே என் விருப்பம்!” என்கிறார் நந்தினி வள்ளி.

2 thoughts on “’’உணர்வுகளைச் சொல்வதே சிறந்த புகைப்படம்!’’

  1. இன்றைக்குத் தான் ஒரு கட்டுரை படித்தேன். முன்பெல்லாம் ஓவியங்கள் தான் மிகச் சிறந்த கலை வெளிப்பாடு; புகைப்படங்களால் அதைச் செய்ய முடியாது என்று ஒரு கருத்து நிலவி வந்ததாம். இப்போது இந்த எண்ணம் தவறு என்று பல புகைப்படக் கலைஞர்களால் அவர்களது புகைப்படங்கள் மூலம் நிரூபிக்கப் பட்டு வருகின்றன என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.
    இந்தப் பதிவில் நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் நந்தினி வள்ளியின் புகைப்படங்கள் புதிய கோணத்தில் கலையை வெளிப்படுத்துகிறது.

    படைப்புத்திறன் அதிகம் உள்ள இந்தப் பெண்ணின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
    அவருக்கு வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.