சும்மாதான் இருக்கிறேன்

வீட்டிலிருக்கும் பெண்களுக்கான வேலைப் பளுவை தற்சமயம் உணர்கிறேன். வீட்டிலிருக்கும் பெண்களை சும்மாதான் இருக்கிறார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது. பணிக்குச் சென்ற நாட்களில் இத்தனை வேலைப் பளுவை அனுபவித்ததில்லை. அது ஒருவகையான வாழ்க்கையாக இருந்தது, இது வேறுவகையானதாக இருக்கிறது. இதுபற்றி விரிவாக எழுத வேண்டும். இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறேன். நாளின் முடிவில் சாத்தியப்படாமல் போய்விடுகிறது. கிடைக்கும் நேரத்தில் நிறையதை படிப்பதற்கு செலவிடுகிறேன். அது ஒரு காரணம். மக்களவைத் தேர்தல், உக்ரைன் பிரச்னை, தற்சமயம் படித்துக்கொண்டிருக்கும் ராமலட்சுமியின் அடைமழை, ரிவர்பெண்ட்டின் பற்றி எரியும் பாக்தாத்(மொழிபெயர்ப்பு கவிதா முரளிதரன்), ஜெயந்தி சங்கரின் படைப்புகள் பற்றி எழுத உத்தேசித்திருக்கிறேன். பெண்கள் தினத்தை ஒட்டி 4 பெண்களுக்காக புதிய தொடர் ஒன்றை எழுத இருந்தேன். அதுவும் தள்ளிப்போய்விட்டது.

6 thoughts on “சும்மாதான் இருக்கிறேன்

  1. எந்த ஒரு பதவி உயர்வையும் எதிர் பார்க்காமல் கடமையே கண்ணாக நினைத்து வேலை பார்ப்பவர்கள் வீட்டு பெண்கள்! அவர்களுக்கு சம்பளம் கிடையாது! நோய் நொடி இல்லாமல் தன்னையும் பார்த்து கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் பார்த்து கொள்ளும் அவளுக்கு ஒரு பாராட்டு கூட கிடையாது. நான் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்று சொல்லும் குடும்ப தலைவிகளை பார்க்கும் பொழுது சிறிது எரிச்சல் வரதான் செய்கிரது. அவர்களுக்கு சம்பளம் குடுக்க வேண்டும் என்று சட்ட திட்டம் கொண்டு வந்தால் அவர்களுக்கு சம்பளம் குடுத்து மாளாது என்று நினைத்து பயந்து போய் தான் அப்படி எதுவும் வர வில்லையோ என்னவோ 🙂

  2. கண்டிப்பாக தன் மனம் விரும்பும் செயலைச் செய்ய நேரம் ஒதுக்க முடிவதில்லை… வீட்டில் தானே இருக்கிறாய் என அனைத்து விதமான பொறுப்புகளும் அவர் தலையில்… தனக்கிருக்கும் வேலைப் பளுவில் தனக்கான நேரங்களை அவள் ஒதுக்குவதேயில்லை…

  3. வெற்றி கிட்டும் தொடருங்கள்.
    தங்கள் ஊடக அறிவையும் கலந்து
    பல புதிய பெண்களை எழுதவைக்க
    நேரம் ஒதுக்கி முன்னேற
    வாழ்த்துகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.