என்னுடைய தினக்கூலி அனுபவங்களை மே தினத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அதற்கான சூழல் அமையவில்லை. அதைப் பற்றி நினைத்தாலே ஒரு வெறுப்பும் ஆராத சினமும் சேர்ந்து கொள்கிறது. எழுதினாலாவது இது குறையும் என்று பார்க்கிறேன். இந்த மாதம் முடிவதற்குள் எழுதிவிட வேண்டும் என தீர்மானித்திருக்கிறேன். மே தினம் குறித்த பெருமிதமும் தேவையும் இப்போது உணர்கிறேன். நேற்றைய நாள் முழுக்க இந்த சிந்தனையிலே கழிந்தது. இடது சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது, இது என்னை உணர வைக்கிறது. மேற்கொண்டு சிந்தாந்தங்கள் இப்போதைக்கு எதுவும் இல்லை.
காலையில் மின்னஞ்சல் திறந்தவுடன் உற்சாகமூட்டும் ஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை என்கிற கருத்துப்படம் கண்ணில் பட்டது. ஜென் பென்சில்ஸ் என்ற பெயரில் Gavin Aung Than வரையும் கருத்துப்படங்கள் இணையவெளியில் பிரபலமானவை. பிரபலங்களின் மேற்கோள்களை எடுத்துக்கொண்டு அதை கருத்துப்படங்களாக மாற்றி வருகிறார் Gavin Aung Than. இவருடைய புகழ்பெற்ற கருத்துப்படம் The Lover, இணையத்தில் உலவும் பலருக்கு இந்த கருத்துப்படம் கண்ணில் பட்டிருக்கும். இவர் கருத்துப்படங்களில் உள்ள நேர்த்தி எனக்குப் பிடித்திருக்கிறது.
இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை இவருடைய கதையைச் சொல்கிறது. இது எனக்கும் உங்களுக்கும்கூட பொருந்தலாம்.
நேற்று RT யில் ஒரு செய்தி பார்த்தேன். அமெரிக்காவில் மரணதண்டனை குற்றம் சுமத்தப்படும் 25 நபர்களில் ஒருவர், செய்யாத குற்றத்திற்கு மரணத்தை தண்டனையாகப் பெறுகிறார் என்றது அந்தச் செய்தி. உலகெங்கிலும் மக்களை கொன்று குவிப்பதையே தொழிலாக செய்துவரும் அமெரிக்கா, மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் மனித உரிமை மீறல்களுடன் அரங்கேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்தும் கவலைப்படப்போவதில்லை.
சிறந்த பகிர்வு