கடந்த சனிக்கிழமை புதிய அணிகலன்களை உருவாக்க சில வகையான மணிகளை வாங்கினேன். நான் அதிகமாக அணிகலன்களை அணிவதில்லை. தங்கம் அணிவதில் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. பணிபுரிய தொடங்கிய புதிதில் பெரிய காதணிகளை விரும்பி அணிந்ததுண்டு. இப்போது அதுவும் இல்லை. பத்து மணிகளுக்குள் அடங்கிவிடும் நான் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அணிகலன்கள் எளிமையாக இருக்கின்றன. அதற்காகவே இவ்வகையான அணிகலன்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. அணிகலன்களை அதிகம் விரும்பும் இந்திய பெண்களுக்கு இந்த எளிமையான அணிகலன்களை விரும்புவார்களா என்று தெரியவில்லை. என்னுடைய படைப்புகளை பார்த்தவர்கள் பிடித்திருக்கிறது என்று சொன்னார்கள். உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
வட்ட மற்றும் சதுர மர மணிகளால் ஆன அணிகலன்…
sand stone என்று சொல்லப்படும் மணல் கற்களால் ஆன அணிகலன் இது…
இதுவும் மணல் கற்களில் ஒரு வகை. இதன் தட்டையான வட்டவடிவ என்னை ஈர்த்தது…
நீல நிற படிகக் கற்களால் ஆன அணிகலன்…
இதுவும் மர மணிகளால் ஆனது, நிறம் இந்த அணிகலனை அழகூட்டுகிறது..