பழவேற்காடு செல்ல வேண்டும் என்பது கிட்டத்தட்ட மூன்று ஆண்டு முயற்சித்தேன். இப்போதுதான் அது நிறைவேறியது. பறவைகள் சீசன் இல்லாத காலமான ஆகஸ்ட் மாதத்தில் எங்கள் பயணம் அமைந்தது. திட்டமிட்டதே பூநாரைகளைப் பார்க்க வேண்டும் என்பதாக. ஆனால் பழவேற்காடில் பூநாரைகள் இல்லை, பழவேற்காடு ஏரியின் இன்னொரு பகுதியான அண்ணாமலைச் சேரியில் பூநாரைகள் இப்போதும் இருப்பதாக சமீபத்தில் படித்தேன். பூநாரைகளை காணும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம்…
மகன் கோசிகனும் கணவரும் இந்தப் பயணத்தில் மிகுந்த உற்சாகமாக இருந்தார்கள்.
பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில்…
சில நீர்க்காகங்கள், கொக்குகள், கூழைக்கடா, செங்கால் நாரைகளைக் கண்டோம். பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள கடற்கரை மிக தூய்மையாக, அமைதியாக இருந்தது.
இத்தனை அமைதியான கடற்கரையை நான் ரசித்ததில்லை…மகனும் கணவரும் அலைகளோடு விளையாடினார்கள்.
4நூற்றாண்டுகள் பழமையான கல்லறை…
பதிவு நேராகப் பார்த்துப் பேசுவதுபோல அமைந்துள்ளது. நான் பழவேற்காடு போனதில்லை. உன் வர்ணனை மூலம் பார்த்தாகிவிட்ட நிறைவு. கணவரும்,மகனும், நீங்களும் நன்றாகவே ரஸித்துள்ளீர்கள்.. ஜிமெயில் போவதில்லை. கவனிக்கவும். அன்புடன்
நன்றி அம்மா…
படங்களெல்லாம் அருமை. அன்புடன்
உங்கள் எழுத்துக்களை என்றுமே ரசிப்பவள் நான் எனக்குக் கிடைத்த விருதை உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். விருது கிடைத்த சின்னு ஆதித்யா என்ற என் பதிவைப் படித்தீர்களா? படங்கள் வெகு அருமை. பழவேற்காட்டை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள் நந்தினி
உங்களுடைய பாராட்டுக்கும் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி.உங்களுடைய பதிவுகளை அவ்வவ்போது படிப்பேன்.எழுதுவதற்கு நேரம் ஒதுக்கி எழுதும் உங்கள் முயற்சி, நான் கற்க வேண்டிய ஒன்று. நான் சோர்வுறும்போதெல்லாம் உங்களையும் காமாட்சி அம்மா, ரஞ்சனியையும் பார்த்து உற்சாகம் கொள்வதுண்டு. நீங்களெல்லாம் எங்களைப் போன்ற இளையவர்களுக்கு உற்சாகமூட்டும் முனுதாரணமாக இருக்கிறீர்கள்.