குளவியின் தளராத முயற்சி…

 

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஒரு சிமெண்ட் தொட்டியில் குளவி ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. விடியற்காலையில் பெய்த மழையின் சொதசொதப்பு மண்ணில் அப்படியே இருக்க, அதை நேர்த்தியாக ஒரு குயவனைப் போல குழைத்து குழைத்து தன் கூட்டை கட்டிக் கொண்டிருந்தது இந்தக் குளவி.

இந்த இடத்தில் தொட்டிச் செடிகள் வளர்க்க ஆரம்பித்த காலத்திலிருந்த இந்தக் குளவி இங்கே வசிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கலாம். மழை வரும்போதோ, செடிகள் நடும்போதோ கூடு உடைந்துவிட்டால், அடுத்த சில நாட்களில் கூடு கட்டிவிடும் இந்தக் குளவி. இந்த முறை கூடு கட்டும்போது அதை பதிவு செய்ய விரும்பினேன்.

உள்ளிருக்கும் மண்ணைக் குழைத்து, முன்பக்க கால்களால் உருட்டி மேலே கொண்டி வந்து, அதை கட்டிக்கொண்டிருக்கும் வரிசைப்படி வைத்து தன் பின் பக்கத்தால் மண்ணை அழுத்துகிறது. இதனால் கூட்டின் உள்பக்கம் நேர்த்தியாக உருளை வடிவம் பெறுகிறது. எனக்கு கிராமங்களில் மண் வீடு கட்டுவது நினைவுக்கு வந்தது. ஆனாலும் இத்தனை நேர்த்தியாக மனிதர்கள் கட்டிய மண்வீட்டை நான் பார்த்ததில்லை!
DSCN0807

DSCN0808

DSCN0819

DSCN0820

குளவி கட்டி முடித்த மண் கூடு!

 

இதை காணொலியாகவும் பதிவு செய்திருக்கிறேன். ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் பார்க்கவும்…

4 thoughts on “குளவியின் தளராத முயற்சி…

  1. வெகு அருமை நந்தினி இயற்கையோடு இணைந்ததுதான் வாழ்க்கை. உங்களின் காணொளியையும் கண்டு ரசித்தேன் அதனால் தான் அதற்கு potter wasp என்று பெயர் குயவனைப்போன்ற குளவி அதற்கு முட்டையிடும் பருவம் வந்தால்தான் அது கூடு கட்டும் தன் குஞ்சுகளைக் காப்பாற்ற மிக பாதுகாப்பான கூட்டைக் கட்டும் ஓரறிவு ஜீவனுக்கு எத்தனை மூளை எத்தனை அக்கறை இயற்கை வியப்பாகவும் உள்ளதுதானே?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.