சில புதிய படைப்புகள்…

கடந்த சனிக்கிழமை புதிய அணிகலன்களை உருவாக்க சில வகையான மணிகளை வாங்கினேன். நான் அதிகமாக அணிகலன்களை அணிவதில்லை. தங்கம் அணிவதில் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. பணிபுரிய தொடங்கிய புதிதில் பெரிய காதணிகளை விரும்பி அணிந்ததுண்டு. இப்போது அதுவும் இல்லை. பத்து மணிகளுக்குள் அடங்கிவிடும் நான் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அணிகலன்கள் எளிமையாக இருக்கின்றன. அதற்காகவே இவ்வகையான அணிகலன்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. அணிகலன்களை அதிகம் விரும்பும் இந்திய பெண்களுக்கு இந்த எளிமையான அணிகலன்களை விரும்புவார்களா என்று தெரியவில்லை. என்னுடைய படைப்புகளை பார்த்தவர்கள் பிடித்திருக்கிறது என்று சொன்னார்கள். உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

 

வட்ட மற்றும் சதுர மர மணிகளால் ஆன அணிகலன்…

sand stone என்று சொல்லப்படும் மணல் கற்களால் ஆன அணிகலன் இது…

இதுவும் மணல் கற்களில் ஒரு வகை. இதன் தட்டையான வட்டவடிவ என்னை ஈர்த்தது…

 நீல நிற படிகக் கற்களால் ஆன அணிகலன்…

இதுவும் மர மணிகளால் ஆனது,  நிறம் இந்த அணிகலனை அழகூட்டுகிறது..

7 thoughts on “சில புதிய படைப்புகள்…

 1. Hi…

  Your designs are really superb and eye-catching.But can you make the chain out of some other material?Instead of making the chain in golden color if you try with silver plated or simply black chord it would take them to another level..it’s just a thought.your choice of stones and their arrangement is awesome otherwise.

 2. வெகு அருமையாக உள்ளன நந்தினி அதிக பளுவும் இல்லாமல் காதுக்குக்கும் கழுத்திற்கும் அழகாக இருப்பதோடு இதை அணிந்து சென்றால் ஆபத்தும் இல்லை எனப்து புரிகிறது தங்கம் விற்கும் விலையில் தங்க நகை அணிந்து வெளியே செல்லவே பயமாக உள்ளது நமது ஆடைகளுக்கு மேட்சாகவும் இருக்கும் பாராட்டுக்க்ள் தொடருங்கள் உங்கள் பணியை

 3. ஆசிகள். மாலைகளெல்லாம் மனங்கவர்வைகளாக இருக்கிறது.. நீங்களும் ஸகலகலா வல்லவிதான். பெருமைப்படுகிறேன்.
  எனக்குக் கிடைத்த அவார்டை 4 பெண்கள் தளத்திற்கும் அளித்திருக்கிறேன்..
  எங்களையெல்லாம் நினைவு கொள்ளும் வகையில் இதையும் ஏற்றுக்கொண்டு பதிவிடவேன்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
  என்றும் அன்புடன்

  • நன்றி அம்மா, உண்மையைச் சொல்லப்போனால் நீங்கள் எல்லாம் என் வலைத்தளத்துக்கு வந்து படித்து, பின்னூட்டம் இடுவதே அவார்டு கொடுப்பதுபோலத்தான்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.