பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது!

சமீபத்தில் கல்யாண் ஜுவல்லரியின் அச்சு விளம்பரம் ஒன்றில் அரச கமீரத்துடன் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சிறுவன் குடை பிடிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சிறுவர் பணிக்கு அமர்த்தப்படுவது ஒழிக்கப்பட்ட இந்த காலத்தில் இப்படியான விளம்பரங்கள் அதை ஊக்குவிப்பதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த விளம்பரத்தின் நுண்ணிய அரசியலே குடை பிடிக்கும் சிறுவன் கறுப்புத் தோலுடயவான சித்தரித்ததில்தான் இருந்தது. அதையும் சுட்டிக் காட்டி ஊடகங்களில் விமர்சனம் எழுந்த பிறகு. ஐஸ்வர்யா தன்னுடைய பங்கை விளக்கினார். நகைக்கடை நிறுவனம், வேறு வழியில்லாமல் மன்னிப்புக் கேட்டது. பிரச்னை முடிந்துவிட்டது! ஆனால் என்னால் அந்த விளம்பரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதில் இருந்த சிறுவன், என் மகனை நினைவு படுத்தினான். அரச குமாரிக்கு குடை பிடிக்கும் சிறுவனாக என் மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தபோது, என் மனம் வலித்தது. நிச்சயம் இந்த விளம்பரத்தை வடிவமைத்தவர்கள், எம்மைப் போன்ற கறுப்பினத்தவராக இருந்திருக்க முடியாது. வெள்ளைத் தோலில், சாதியின் உச்சியில் நிற்பதாக பரவசம் கொள்ளும் பார்ப்பன மேட்டிக்குடிகளாகத்தான் இருக்க முடியும்.

நூறாண்டுகளுக்கு முன் உங்களுக்கு குடை பிடித்ததை, சமத்துவ சமூகம் நிலை நாட்டப்பட்டுவிட்டதாக சொல்லப்படும் இந்த நூற்றாண்டிலும் நினைவு படுத்தி எங்களை இழிவு படுத்துகிறீர்கள் மிஸ்டர் பரத்வாஜ். ஆனால் மனிரத்னம்  இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பார்ப்பனர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிற ஒற்றைவரியை சினிமா விமர்சகர்கள் சொல்லும்போது அது உங்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. உடனே தமிழ் சினிமாவில் வர்க்கமும் சாதியும் என்று கட்டுரை எழுதுகிறீர்கள். உங்கள் கொந்தளிப்புக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது தி இந்து.  உங்களுடைய பல சினிமா விமர்சனங்களில் பிற்போக்குத்தனமான போக்குகளை சுட்டி எழுதுவீர்கள், பெண்களைப் பற்றிய மோசமான சித்தரிப்புகளையும் நீங்கள் கோடிட்டி காட்டுவீர்கள். உங்கள் மீது மதிப்பிருந்தது. ஆனால் தி இந்துவின் நடுப்பக்கத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை, உங்களுடைய பார்ப்பன ஒரிஜினை, பார்ப்பன மேலாதிக்கத்தை அருமையாக எனக்கு உணர்த்திவிட்டது மிஸ்டர் பரத்வாஜ்! தமிழ் சினிமாவில் பார்ப்பனர்கள் கேலிக்குரியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், பார்ப்பன பின்னணியில் கதைக்களம் அமைவது சினிமாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. ’ஓ காதல் கண்மணி’யில் முக்கிய கதாபாத்திரங்கள் பார்ப்பனர்களாக சித்தரிக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது, இறுதியாக வர்க்கமும் சாதியும் சினிமாவில் சாதியைக் காட்டுவதாலோ, சினிமா விமர்சனத்தில் அதை சுட்டுவதலோ அழிந்துவிடுவதில்லை என்று முடிகிறீர்கள்.

இதில் ஒரு முத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்…அந்தக் கட்டுரையில் வேலையில்லா பட்டதாறி படத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். தனுஷுக்கு அருண் சுப்ரமணியன் என்கிற பார்ப்பன வில்லன்  வெகுஜெனங்களை திருப்தி படுத்துவதற்காக தேவைப்படுகிறார் என்றும் இதனால்தான் நம் கதாநாயகர்கள் ஒழுங்காக படிக்காதவர்களாக இருந்தும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களாக, ப்ளூ காலர் வேலைக்குச் செல்பவர்களாக காட்டப்படுகிறார்கள் என்றும் கட்டுரையின் ஒரு பத்தியில் வருகிறது. (ஆனால் அந்தப் படத்தில் தனுஷ் ஒயிட் காலர் வேலை செய்பவராகக் காட்டப்படுகிறார்..) நீங்கள் பார்ப்பனர் அல்லாதவர் மீது எத்தகைய காழ்ப்பில் இருக்கிறீர்கள் என்பதை கோடிட்டு காட்டும் வரிகள் இவை. அதாவது இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்தை வலியுறுத்துகிறீர்கள். ஆமாம் எங்களால் ஆங்கிலம்  பேச முடியாது, அல்லது சரிவர பேச முடியாது,  பள்ளி- கல்லூரிகளில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண் பெறுவதே எங்கள் தலைமுறையினருக்கு பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில் என் அம்மா-அப்பா எட்டாம் வகுப்பை தாண்டாதவர்கள், என் தாத்தாவுக்கு படிக்கத் தெரியாது, என் தாத்தாவின் தாத்தாவின் வரலாறே எனக்குத் தெரியாது(வரலாறு எழுதுமளவுக்கு எழுத்தறிவு எங்கள் பரம்பரைக்கே கிடையாது!). இப்படியிருக்க என்னால் ஆங்கிலம் பேசவோ, 90 சதவீத மதிப்பெண் பெறவோ நிச்சயம் முடியாது. அதற்காக எங்களை கீழானவர்கள் என்று நீங்கள் வலியுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. காலம்காலமாக எங்களை சிறுமைப் படுத்தினீர்கள். இப்போதும் அதிகார மையங்களில் அமர்ந்து எங்களை சிறுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள், இதற்கு எதற்கு முற்போக்கு வேடம்? உங்கள் வேடம் களைந்தது மிஸ்டர் பரத்வாஜ்!

 

பதிப்புக்கு பின் மேம்படுத்தியது: திரு. பரத்வாஜ் ரங்கன் ,  ‘ஓ கா. க’ படத்தின் விமர்சனத்தில் படத்தின் பார்ப்பன பின்னணியை சுட்டிக்காட்டியபோது, ஏன் படத்திற்கு பார்ப்பன முத்திரையை தருகிறீர் என விமர்சனத்திற்கு கருத்திட்டவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அதற்காகத்தான் நடுப்பக்கக் கட்டுரையை எழுதியதாகவும் என்னுடைய கமெண்ட் பதிவுக்கு பதிலளித்து தன்னுடைய வலைப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாவதாக நான் நாளிதழில்தான் கட்டுரையைப் படித்தேன், தி இந்துவின் இணையதளத்திலோ, திரு. ரங்கனின் வலைப்பதிவிலோ அல்ல. அதனால் விமர்சனத்துக்கு எத்தகைய எதிர்வினை வந்தது என்பது எனக்குத் தெரியாது. அதோடு, திரு. ரங்கனின் விமர்சனத்தை இந்துவில் படித்தேன். அவர் சுட்டிக்காட்டியிருக்கும் விமர்சன வரிகளில் ஆட்சேபத்துக்கு இடமில்லை. பார்ப்பனர் வாழ்வியலை படமாக்குவது குறித்தும் அதை ரசிப்பது குறித்தும் எனக்கு எந்த காழ்ப்பும் இல்லை.

திரு. ரங்கன் சுட்டிக்காட்டியது போன்றே மற்ற விமர்சகர்களும் ’ஓ. கா. க’வின் பார்ப்பன பின்னணி குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா விமர்சனத்துக்கு வந்த விமர்சனத்துக்காக திரு. பரத்வாஜ் ரங்கனுக்கு தி இந்துவின் நடுப்பக்கத்தில் கொதித்தெழுந்து எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அவர் வழக்கமாக எழுதும் மெட்ரோ பிளஸ் பத்தியிலேயே அதை எழுதியிருக்கலாமே! அவர் கொடுத்த முக்கியத்துவம், கட்டுரையில் இருக்கும் நுண் அரசியல் அல்லது பார்ப்பனர்களின் பிரதிநிதியாக அவர்களின் உளவியலை பிரதிபலிக்கும் கருத்துகளுக்கு என்னுடைய கருத்தை பதிந்திருக்கிறேன். அதோடு நாம் மதிக்கும் ஒருவரிடமிருந்து இப்படியான கருத்துக்கள் வருவது அதிர்ச்சியானதும்கூட!

சினிமாக்களில் பார்ப்பனர் சித்தரிப்பு பற்றி தனி கட்டுரையே எழுதலாம். அதில் பாஸிட்டிவ்வான சித்தரிப்புகள்தான் அதிகமாக இருக்கும். அதையே ஒடுக்கப்பட்ட/ கீழ்சாதிகள் பற்றி எடுத்துக் கொள்ளுங்கள்…பெரும்பாலானவை நெகட்டிவ்வான சித்தரிப்புகள்தான். திரு.ரங்கனுக்கு ஏற்பட்ட ஒரிரு சம்பவங்களை வைத்து எல்லாருமே பார்ப்பனர்களை வெறுக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவர் சுட்டும் ஒரு சம்பவத்திலேகூட பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இல்லாதபோது ‘பார்ப்பனர்களாக’ புரிந்துகொள்ளப்படும் பெயர்களை ஏன் கதாநாயகனுக்கு சூட்ட வேண்டும்? அப்படியான பெயர்கள் வேண்டாம் என மறுப்பதில் என்ன தவறு இருக்கிறது? பார்ப்பனர்களின் வாழ்வியலை பற்றிய கதைக்களம் அமையும்போது அவர் அவராக வருவதில்தான் எதார்த்தம் இருக்கும். அதுபோல பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவனாக ஒரு கதாநாயகனை உருவாக்கும்போது அவனுக்குரிய பெயரை வைப்பதுதானே சரி…திரு. ரங்கன் குறிப்பிடுவது போல ஆங்கிலம் பேசத் தெரியாத, பள்ளிக்கூடம் போகாத, டீக் கடையில் வேலை பார்க்கும் கதாநாயகனுக்கு ராகுல் என்று பெயர் வைத்தால் நன்றாகவா இருக்கும்?!

திராவிட அரசியல்வாதிகள் அவர்களுக்கு கூட்டாளியாக விரும்பும் சினிமாக்காரர்கள் பார்ப்பன எதிர்ப்பை திட்டமிட்டு மக்கள் மத்தியில் உருவாக்குகிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

9 thoughts on “பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது!

 1. //நிச்சயம் இந்த விளம்பரத்தை வடிவமைத்தவர்கள், எம்மைப் போன்ற கறுப்பினத்தவராக இருந்திருக்க முடியாது. வெள்ளைத் தோலில், சாதியின் உச்சியில் நிற்பதாக பரவசம் கொள்ளும் பார்ப்பன மேட்டிக்குடிகளாகத்தான் இருக்க முடியும்.//

  How did you come to this conclusion? Just because you identify yourself as dark skinned, this should have been done by some one from the white skinned brahmin upper caste?
  Do you think only people with lighter skin tone carry on the discrimination against dark skinned people? If you think so you are wrong. We see movies and movie songs praising the heroine’s white skin. Most of the time, the directors, the song writers, even the hero is dark in these movies.
  Here you have assumed that only brahmins do that and then linked it with Baradwaj’s article just because he is a brahmin.

  //ஆனால் மனிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பார்ப்பனர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிற ஒற்றைவரியை சினிமா விமர்சகர்கள் சொல்லும்போது அது உங்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.//

  It was Baradwaj Rangan who pointed it out in his review, not someone else. Then the commentors criticised him for pointing that out.

  //இதனால்தான் நம் கதாநாயகர்கள் ஒழுங்காக படிக்காதவர்களாக இருந்தும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களாக இருந்தும் ப்ளூ காலர் வேலைக்குச் செல்பவர்களாக காட்டப்படுகிறார்கள் என்றும் கட்டுரையின் ஒரு பத்தியில் வருகிறது//
  //It’s why most of our heroes play characters who can’t speak English, or speak pidgin English, don’t do well in school, and often have blue-collar jobs.//

  Blue collar job means a job with manual labour. I think you have got blue collar jobs and white collar jobs mixed up.
  What you have written here is not the same as what he wrote.

  // பள்ளி- கல்லூரிகளில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண் பெறுவதே எங்கள் தலைமுறையினருக்கு பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில் என் அம்மா-அப்பா எட்டாம் வகுப்பை தாண்டாதவர்கள், என் தாத்தாவுக்கு படிக்கத் தெரியாது, என் தாத்தாவின் தாத்தாவின் வரலாறே எனக்குத் தெரியாது(வரலாறு எழுதுமளவுக்கு எழுத்தறிவு எங்கள் பரம்பரைக்கே கிடையாது!). இப்படியிருக்க என்னால் ஆங்கிலம் பேசவோ, 90 சதவீத மதிப்பெண் பெறவோ நிச்சயம் முடியாது. அதற்காக எங்களை கீழானவர்கள் என்று நீங்கள் வலியுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.//

  Here, you are just stereotyping. You are doing the same thing that he does sometimes. English knowledge is not something that has to come through genes. There are many people from the lower section of the society who have learnt and are able to speak good english.
  Nowhere in that article, there is anything against reservation. You derived that conclusion based on the misunderstanding of the term blue collar.

  The article says every section of the society should get proper representation in the movies and not just be caricatures. And if a movie shows an upper caste person and the review points that out, there is nothing wrong is what he is saying.

  Many other commentors in his blog have correctly pointed out what is wrong in his article. Your article is not one of them, because you have based your arguments on what is not there (even hidden) in the article.

  • // How did you come to this conclusion? Just because you identify yourself as dark skinned, this should have been done by some one from the white skinned brahmin upper caste? Do you think only people with lighter skin tone carry on the discrimination against dark skinned people? If you think so you are wrong. We see movies and movie songs praising the heroine’s white skin. Most of the time, the directors, the song writers, even the hero is dark in these movies.//
   கறுப்பு நிற சிறுவனை அடிமையாக காட்டுவதற்கும் வெள்ளை நிற கதாநாயகியை வர்ணிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது நண்பரே.. அடிமைப்படுத்தும் மனநிலை இருப்பவர்கள், அடிமைகளை காட்ட விரும்புவார்கள். வெள்ளை நிறத்தை புகழ்ந்து, வர்ணித்தே பழக்கப்பட்ட கறுப்பு தோலுடைய கவிஞர்கள் அப்படியேதான் எழுதுவார்கள். இதற்கு விளம்பரக் குழுவில் இருந்தவர்கள் எந்த சாதியை/வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று புலனாய தேவையில்லை.
   //Here, you are just stereotyping. You are doing the same thing that he does sometimes. English knowledge is not something that has to come through genes. There are many people from the lower section of the society who have learnt and are able to speak good english.
   Nowhere in that article, there is anything against reservation. You derived that conclusion based on the misunderstanding of the term blue collar.

   The article says every section of the society should get proper representation in the movies and not just be caricatures. And if a movie shows an upper caste person and the review points that out, there is nothing wrong is what he is saying.

   Many other commentors in his blog have correctly pointed out what is wrong in his article. Your article is not one of them, because you have based your arguments on what is not there (even hidden) in the article.//

   ப்ளூ காலர், ஒயிட் காலர் பதங்கள் புரிகிறது. வேலையில்லா பட்டதாறி படத்தில் தனுஷ் ஒயிட் காலர் வேலை பார்ப்பவராக காட்டப்படுகிறார் என்கிற வரியை சேர்த்துக் கொள்ளுங்கள் அந்த வாக்கியத்தின் அர்த்தம் முழுமை அடையும். இட ஒதுக்கீடு குறித்து மேல் சாதி/ மேல் வர்க்கத்தின் உளவியல் சிக்கல்தான் இப்படியான வரிகள் வந்துவிழக் காரணம்.
   எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா விமர்சனத்துக்கு வந்த விமர்சனத்துக்காக திரு. பரத்வாஜ் ரங்கனுக்கு தி இந்துவின் நடுப்பக்கத்தில் கொதித்தெழுந்து எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அவர் வழக்கமாக எழுதும் மெட்ரோ பிளஸ் பத்தியிலேயே அதை எழுதியிருக்கலாமே! அவர் கொடுத்த முக்கியத்துவம், கட்டுரையில் இருக்கும் நுண் அரசியல் அல்லது பார்ப்பனர்களின் பிரதிநிதியாக அவர்களின் உளவியல் கருத்துகளுக்கு என்னுடைய கருத்தை பதிந்திருக்கிறேன். அதோடு நாம் மதிக்கும் ஒருவரிடமிருந்து இப்படியான கருத்துக்கள் வருவது அதிர்ச்சியானதும்கூட! சினிமாக்களில் பார்ப்பனர் சித்தரிப்பு பற்றி தனி கட்டுரையே எழுதலாம். அதில் பாஸிட்டிவ்வான சித்தரிப்புகள்தான் அதிகமாக இருக்கும். அதையே ஒடுக்கப்பட்ட/ கீழ்சாதிகள் பற்றி எடுத்துக் கொள்ளுங்கள்…பெரும்பாலானவை நெகட்டிவ்வான சித்தரிப்புகள்தான். திரு.ரங்கனுக்கு ஏற்பட்ட ஒரிரு சம்பவங்களை வைத்து எல்லாருமே பார்ப்பனர்களை வெறுக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

   மற்றபடி நீங்கள் குறிப்பிடும் ’ஆங்கில பேசுவது ஜீன்கள் வழி வருவதல்ல, கஷ்டப்பட்டால் ஆங்கிலம் கற்கலாம் என்கிற விளக்கங்கள்’ ரொம்ப ஸ்டிரியோ டைப் மிஸ்டர். அருண்.

 2. உங்களுக்கெல்லாம் என்ன inferiority complex ஆ, why do u people worry, u are well protected by the constitution, no one is looking for to snatch ur opportunities.i believe u feel very insecure, there is no need to be, or is it the elections?

  • //உங்களுக்கெல்லாம் என்ன inferiority complex ஆ, why do u people worry, u are well protected by the constitution, no one is looking for to snatch ur opportunities.i believe u feel very insecure, there is no need to be, or is it the elections?//
   உங்களுடைய கமெண்டிலே எவ்வளவு superiority complex உங்களுக்கு உள்ளது என்று தெரிகிறது…என்னுடைய இடம் எனக்கு, அதை யாராலும் பறிக்க முடியாது. 🙂
   இன்னமும் எங்கள் ஊரில் தலித்துக்கள் சாதி இந்துக்களின் வீடுகளில் நுழைய முடியாது, அவர்களோடு சரிசமமாக பொது இடங்களில் அமர முடியாது. (சாதி இந்துக்கள்தானே, நாங்கள் அல்ல என நீங்கள் ஒதுங்க முடியாது. ஏனெனில் அந்த சாதி அடுக்குகளை வடிவமைத்ததே நீங்கள்தானே.) இதில் சட்டங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக உள்ளன என்பது நகைப்பைத் தருகிறது.

   நான் எந்த அரசியல் இயக்கத்தையும் சேர்ந்தவள் அல்ல, ஆதரிப்பவளும் அல்ல.

 3. இட ஒதுக்கீட்டை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர்,
  பார்ப்பனர்கள் அப்பிராணிகள் என்று நம்புவோர்,
  இங்கு செல்லவும்.http://aadhavanvisai.blogspot.com

 4. Well done sister! Do not be surprised or concerned by some Ava comments. Keep writing to expose Ava and their stupidity!

 5. அவசியம் பார்க்கவும். உண்மை புரியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.