லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

செய்து பாருங்கள்

title

இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்ட திருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
1986ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின்படி 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது; 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதமும், 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இச்சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தின்படி 14 வயது வரையுள்ள குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்த முடியும்; அதுமட்டுமின்றி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யவும் முடியும்.
இதுநாள் வரை குழந்தை தொழிலாளர் என்றாலே சுமை தூக்கும் சிறுவர், கல்லுடைக்கும் சிறுவர், செங்கல் சூலைகளில் மண்சுமக்கும் கொத்தடிமை சிறுவர்கள்தான் பொது புத்தியில் ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக நாள்தோறும் இன்னலுறும் இவர்களின் வாழ்க்கை மீட்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு உண்டான அடிப்படை…

View original post 67 more words

Advertisements

2 thoughts on “லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

  1. இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார்.

    அப்படியானால் ஏராளமான இந்து மறைப்புக்கள் இந்தியாவில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்று இருக்கின்றன. அவற்றில் இருந்து மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்ட பிரதமரான நரேந்திர மோடிக்கு நன்றி.

  2. குழ்ந்தை தொழிலாளி சட்டத்தின் உள்நோக்கத்தை மிக தெளிவான முறையில் கண்டு அலசியிருக்கிறீர்கள்.இதுவரை வேறு எவரும் இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.வாழ்த்துகள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.