4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…

பெரும்பாலான பெண்களை பழமையான சிந்தனைகளுடன் ஒன்ற வைப்பதில் வெகுஜென பெண்கள் இதழ்களின் பங்கு அபாரமானது. கணவனை முந்தானையில் முடிந்து கொள்வது எப்படி? கணவனின் மனம் கோணாமல் நடந்துகொள்வது எப்படி என்று வெளிப்படையாகவே தலைப்பு வைத்து எழுதும் பெண்கள் பத்திரிகைகள், குடும்ப வன்முறைகள் பற்றி கள்ள மவுனம் காக்கின்றன. வெளிப்படையான காரணம் பத்திரிகை வாங்க காசு தரும்(?) கணவனுக்கு எதிராக எழுதினால், அந்தப் பத்திரிகை வீட்டுக்கு வருவதேகூட தடை செய்யப்படலாம் என்பதே. இன்று பல பெண்கள் பத்திரிகைகள் ஆண்களும் எங்கள் பத்திரிகையைப் படிக்கிறார்கள் என்று தாங்களாகவே தங்களை ஆண்வயப் படுத்திக் கொண்டு வெளிப்படுகிறார்கள். இதில் இருக்கும் நுண் அரசியல் பெண்கள் பத்திரிகைகளும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பட்டவை என்பதே.

செய்து பாருங்கள்

wrapper 1

வழமையாக பெண்களுக்கான இதழ்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே 4 பெண்கள் தளம் தொடங்கப்பட்டது. ஆர்வத்தின் காரணமாக அவசர அவசரமாக சரியான நிலைப்பாட்டில் 4 பெண்கள் தளம் இதுநாள் வரை செயல்படவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறோம். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்கிற புரிதலுக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது, இந்தக் காலக்கட்டத்தில் வெகுஜென பெண்கள் இதழ்களுக்கும் தீவிர பெண்ணியத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இடைவெளி பற்றி நாம் அதிகம் விவாதிக்காததும் இந்த இடைவெளியை நீக்க எத்தகைய இணைப்பு நடவடிக்கை தேவை என்பதையும் சிந்திக்க முடிந்தது.  பெரும்பாலான பெண்களை பழமையான சிந்தனைகளுடன் ஒன்ற வைப்பதில் வெகுஜென பெண்கள் இதழ்களின் பங்கு அபாரமானது. கணவனை முந்தானையில் முடிந்து கொள்வது எப்படி? கணவனின் மனம் கோணாமல் நடந்துகொள்வது எப்படி என்று வெளிப்படையாகவே தலைப்பு வைத்து எழுதும் பெண்கள் பத்திரிகைகள், குடும்ப வன்முறைகள் பற்றி கள்ள மவுனம் காக்கின்றன. வெளிப்படையான காரணம் பத்திரிகை வாங்க காசு தரும்(?) கணவனுக்கு எதிராக எழுதினால், அந்தப் பத்திரிகை வீட்டுக்கு வருவதேகூட தடை செய்யப்படலாம் என்பதே. இன்று பல பெண்கள் பத்திரிகைகள் ஆண்களும் எங்கள் பத்திரிகையைப் படிக்கிறார்கள் என்று தாங்களாகவே தங்களை ஆண்வயப் படுத்திக் கொண்டு வெளிப்படுகிறார்கள். இதில் இருக்கும் நுண் அரசியல் பெண்கள் பத்திரிகைகளும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பட்டவை என்பதே.

இதன் அடிப்படையிலே ஆண்களின் ஆயுளை நீடிக்கும் விரதங்கள், பூஜை, புனஸ்காரங்கள் முக்கியத்துவம் பெருகின்றன.  வீட்டுப் பொறுப்புகள் பெண்களுக்கானவையே என்று மீண்டும் மீண்டும் நினைப்படுத்தப் படுகின்றன. இந்து மத அடிப்படை வாதத்தை அப்படியே தக்கவைப்பதில் சில லட்சம் பிரதிகள் விற்பனையாகும் பெண்கள் பத்திரிகைகள் வெகுசுலபமாக வீட்டின் வரவேற்பறைக்கே வந்து செய்கின்றன. அடிப்படையில் மதங்கள்…

View original post 345 more words

Advertisements

2 thoughts on “4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…

  1. வெகுஜன பெண்கள் இதழ் பற்றிய தங்கள் கருத்து மிகவும் ஏற்புடையது. நான்கு பெண்கள் இதழ் மாதமிருமுறை மலரவிருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.