பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்

செய்து பாருங்கள்

cartoon

மேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது.

ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில் பணியாற்ற பெண் இராணுவ வீரர்கள் தடுக்கப்படுகிறார்கள். இராணுவத்தில் 5% அளவிலேதான் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அரசாங்கமும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய பத்திரிகைகளுமே, பெண்களின் பங்களிப்பை மறுக்கும்போது பணியிடங்களில் சம வேலைவாய்ப்பு, சமத்துவம் என்கிற பேச்சுகள் துவங்குவது இன்னும் தாமதப்படலாம்.

எழுத்தாளர் சுகிர்தராணியும் தன்னுடைய கட்டுரையில் தன் பணியிடத்தில் நிலவும் சமத்துவமின்மை குறித்தும், அரசும் சமூகமும் பெண் ஆசிரியர்களுக்கான கட்டுப்பாட்டை , உருவகத்தை எப்படி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என கேள்விக்குட் படுத்தியுள்ளார்.

கிறித்துவ மடாதிபதிகள், இந்துத்துவ மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள் பெண்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைக்க வேண்டும் என்று காலம்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு பெண் வாசல் தாண்டி வெளியேறினால் அவள் ‘மோசமான’ நடத்தை கொண்ட பெண் என்று ஆணாதிக்க அடிப்படை வாதத்துடன் அவர்கள் இப்போதும் கூக்குரலிடுகிறார்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் ஆண்களின் அடிவயிற்றில் பீதியைக் கிளப்புகிறார்கள். சமீபத்தில் தொலைவில் வேலைக்குச் செல்கிறார்கள்…

View original post 201 more words