விஷ்ணுப் பிரியாவைக் கொன்றது யார்?

vishnu priya

திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த 27 வயதான காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப் பிரியா, பணியில் சேர்ந்த ஏழு மாதக் காலத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் பணி நெருக்கடி காரணமாக இந்த முடிவை நாடுவதாகவும் தன்னால் இந்தப் பணியைத் திறம்பட செய்ய முடியவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

விஷ்ணுப் பிரியாவின் நெருங்கிய தோழியும் கீழக்கரை துணை கண்காணிப்பாளருமான மகேஸ்வரி, “ஆரம்பத்திலிருந்தே கோகுல்ராஜ் கொலை வழக்கு சரியான திசையில் விசாரிக்கப்படவில்லை. நேர்மையான விசாரணை நடைபெறக்கூடாது என்று உயர் அதிகாரிகளே அழுத்தமாக இருந்தனர். இதை இந்த விசாரணைத் தொடங்கிய போதிருந்தே என்னிடம் விஷ்ணுப் பிரியா தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்பில்லாத இரண்டு நபர்களைப் பிடித்து வைக்கவும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் போடவும் மேல் அதிகாரிகள் ப்ரியாவை நிர்பந்தித்திருந்தனர். இதில் ஏற்பட்ட அழுத்தத்தாலேயே ப்ரியா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்” என வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

 

Advertisements

One thought on “விஷ்ணுப் பிரியாவைக் கொன்றது யார்?

 1. வணக்கம்

  http://www.velunatchiyar.blogspot.com -thendral எனது வலைத்தளம்.

  வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழா 11.10.15 அன்று புதுக்கோட்டையில் நடக்க உள்ளது…விழாவில் வலைப்பதிவர்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டு நூல் வெளியிட உள்ளோம்…தாங்கள் அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்…

  வர இயலாத சூழ்நிலையில் தங்களது வலைப்பக்கத்தை கையேட்டில் பதிவு செய்யவும்,தங்களது நண்பர்களின் வலைப்பக்கத்தைப் பதிவு செய்யவும் உதவி செய்யும் படி கேட்டுக்கொள்கின்றேன்..

  மேலும் விவரங்களுக்கு காணவும் http://www.bloggersmeet2015.blogspot.com.

  மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com.

  நன்றி …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.