எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு!

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன், தன்னுடைய முகநூலில் நயன்தாரா செகலின் எதிர்ப்புணர்வை நாயின் ஊளையுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இதைக் கண்டித்து முகநூலில் பல தரப்பினர் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். அதனுடைய தொகுப்பு இங்கே…

ஞாநி சங்கரன்

லொள்ளு சபா செய்தி : யுவ புரஸ்கார் விருது என்பது நாய் பிஸ்கெட் என்றே ஒருவர் நம்பி அதற்காக வாலை இன்னும் தொடர்ந்து ஆட்டிக் கொண்டிருப்பதைக் காண பரிதாபமாக இருக்கிறது.

Salman Syed

சும்மா கிடைத்தவர்கள் திருப்பி கொடுக்க ஓரளவு வாய்ப்பிருக்கிறது.
செலவு செய்து வாங்கியவர்கள் நிலைமை தர்ம சங்கடம்தான்….

…… சாகித்ய விருது….!

Kutti Revathi

அந்த அவார்டை வைத்துக்கொண்டு அப்படி என்னதான் செய்யப்போகிறீர்கள்? அல்லது இதுவரை என்னதான் செய்தீர்கள் என்று சொன்னால், அடுத்தமுறை நாங்களும் ‘நாலுபேருக்கு’ வாங்கித்தருவோம் இல்லையா?

Subramanian Ravikumar

ஜெய இந்துவெறி மோகனப் பாம்புக்கு
அபிலாசையுள்ள சந்திர விரியன் குட்டியொன்று
விருது விஷப் பல்லோடு இப்போது
சோடியாக மோடி சேர்ந்துள்ளது…

இயக்குநர் தாமிரா

அன்பிற்கினிய அபிலாஷ் சந்திரன்.

அரசியல் நுண்ணறிவும்..ஒரு விடயத்தை நுட்பமாகப் பார்க்கும் கூர் நோக்கும் கொண்ட மிக முக்கியமான இலக்கியப் படைப்பாளி அபிலாஷ். காலம் தாண்டி கல்வெட்டுக்களில் பதியப்படக்கூடிய பல போர்வடிவங்களை தனக்குள்ளடக்கி வைத்திருப்பவர்.சாகித்ய அகதமி விருதினையோ யுவபுரஷ்கார் விருதினையோ திருப்பித் தரத் தேவையற்ற வழி முறை ஒன்றை கைவசம் வைத்திருக்கிறார்.
ராம்தாஸின் காதல் நாடகம் என்கிற சொல்லாடலையும் அதன் எதிர்வினையையும் …தாத்ரி கொலைக்கான எதிர்வினையான மாட்டுக்கறி உண்ணும் திருவிழாவையும் அவர் ஒப்பிட்டு எழுதி இருக்கும் விதத்தில் ஒரு நேர் நோக்கு பார்வை இருக்கிறது.
.
பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டம் நிகழ்த்திய மாட்டுக்கறி திருவிழாக்களிலோ அல்லது இடது சாரிக்கள் நிகழ்த்தும் மாட்டுக்கறி திருவிழாக்களிலோ வெறும் மாட்டுக்கறி உண்ணும் சடங்கு மட்டும் இருக்கிறது என உணர்கிறாரா எனத் தெரியவில்லை.

அசோக் நகரில் நடைபெற்ற மாட்டுக்கறி உண்ணும் அதிருவிழாவில் மாட்டுக்கறி உணவு குறித்த ஒரு பண்பாட்டு நீட்சியை காஞ்சனை சீனிவாசன் அவர்கள் முன் வைத்ததும் அதன் தொடர்ச்சியான விவாதமும்.. ஒரு நல்ல முன்னெடுப்பு என்பதை அபிலாஷ் அதில் கலந்து கொள்ளாததனால் உணரவில்லை.

அடிப்படையில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். இந்துத்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் ஒரு நேரடிப் பிரச்சினையாக உருவெடுத்த தாத்ரி கொலை நிகழ்வின் எதிர்ப்பினை சமூக ஆர்வலர்கள் கையிலெடுத்தபடியால் அது இந்துத்துவ இஸ்லாமியப் பிரச்சனையாக இல்லாமல் ஒரு உணவுப் பிரச்சனையாக பொதுச்சமூகப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.

.///மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு வீட்டு செல்ல நாய் ஊளையிட்டால் அரசாங்கம் நடுங்காது” என நான் எழுதியது மிகையாக, புண்படுத்தும் நோக்கம் கொண்டதாய் தோன்றலாம். -அபிலாஷ்//

சமூக ஆர்வலர்கள் உணவு ஒடுக்கு முறைக்கு எதிராக எழுப்பிய கலகக் குரல் அரசாங்கத்தின் செவிகளுக்கு எட்டாமல் இருக்கலாம்.ஆனால் இந்த சமூகத்தின் செவிகளுக்கு சிறப்பாக எட்டி இருக்கிறது.மாடு திருடி வெட்டி உண்டார்கள் என்று எழுப்பப்பட்ட பொய் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கிறது.(அந்த வீட்டில் இருந்த கறி ஆட்டின் கறி என்பதும் ஒரு காரணம்).

மற்றபடி …அபிலாஷ் பகடியை நான் வெகுவாகவே ரசித்தேன்.அதிலும் செருப்பிற்காக வைத்திருக்கும் பணத்தின் ஒரு பகுதி லட்ச ரூபாய் என்பதும் மாட்டுக்கறி வாங்கிப் போடு நாய் மாட்டிறைச்சி பிரச்னைக்காக .. நன்றாக குலைக்கட்டும் என்பதும்..நன்றாகவே இருந்தது.. ஒரு மனிதனின் அடையாளம் தன்னை மீறி வெளிப்படுதல் அழகுதான்.

கூடிய விரைவில் ஒரு அதி முக்கியமான இடம் அபிலாஷிற்கு இருக்கிறது.. இலக்கியத்திலும்..இந்துத்துவ அரசியலிலும்.

கல்புர்க்கி விடயத்திலும் மாட்டுக்கறி விடயத்திலும்.. ஒரு புதிய போர்வடிவத்தை அபிலாஷ் முன்னெடுப்பார்.. அதில் யார் கலந்து கொள்கிறீர்களோ இல்லையோ நான் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை அபிலாஷ் ஒரு நேரடியான அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்..மாறாக பகடியாக எடுத்துக் கொண்டால்.. அபிலாஷை நாம் காப்பாற்ற முடியாது..!

வாழ்த்துக்களும் அன்பும் அபிலாஷ்.

யமுனா ராஜேந்திரன்

ஒருவரது கருத்துதுருவாக்கம் என்பது நடைமுறை அனுபவங்களின் ஆதாரங்களின் அடிப்படையில் அமையும்போது ஆய்வாக ஆகிறது. சொந்தச் சேட்டைகளை முன்வைத்துவிட்டு பிற்பாடு ஆதாரங்களை வளைப்பது அலப்பறை ஆகிவிடுகிறது. ஜெயமோகன், அபிலாஷ் சந்திரன் போன்றவர்களது எழுத்துமுறை இது. ஆதாரங்களற்றுத் தங்கள் சனாதானப் பார்வையிலிருந்து முட்டாள்தனமாக ஒன்றைப் பேசிவிட்டு பிற்பாடு மொழியைத் திருகித்திருகி ஏழெட்டு டிபன்ஸ் விளக்கவுரைக் கட்டுரைகள் எழுதுவது இவர்களது பாணி. ஜெயமோகனின் பெண் எழுத்தாளர்கள் மீதான வசவுக் கட்டுரைகளையும் அபிலாஷ் சந்திரனின் நயந்தரா சஹால் மீதான பொச்செரிப்புக் கட்டுரைகளையும் ஒப்பிட்டு வாசித்துப் பாருங்கள். ஓரே குட்டையில் ஊறிய இந்துத்துவ மட்டைகள்..

தாயுமானவன்

அவார்ட் வாங்கிய எழுத்தாளன் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னு ஒரு வாக்கியம் வரப்போகுது பாருங்க.

Suguna Diwakar

ஒருவேளை ‘அம்மா இலக்கிய விருது’ கிடைத்தவுடன் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பித் தருவார்களோ? ஆனால் அம்மா விருது பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் என்பது இலக்கியத் துயரம்!

அ. ராமசாமி

நயன்தாரா சேகலின் முடிவில் முக்கியமான தர்க்கப்பிழையைக் கண்டுபிடித்து விவாதிக்கும் அபிலாஷ் சந்திரனின் எழுத்துத்தர்க்கம் ரசிக்கத்தக்கது. சாகித்ய அகாடமியின் யுவபுரஷ்கார் விருது வாங்காத எழுத்தாளராக இருந்திருந்தால் கூடுதல் தர்க்கத்தோடு வெளிப்பட்டதாக இருந்திருக்கும். கூடுதல் ரசனைக்குரியதாகவும் ஆகியிருக்கும்.

Saravanan Arumugam

கருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவா பாசிச அரசுக்கு கண்டனம் தெரிவித்து. நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள எழுத்தாளர்கள் மத்திய அரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த சாகித்திய அகெதெமி விருதை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மனமில்லாத தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை, வாசகர்கள் ஏன் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவைக்கக் கூடாது?

இதை தான் காலையில இருந்து யோசிச்சிகிட்டு இருக்கேன், நண்பர் ராமசந்திரன் இதே கருத்தை முன்மொழிகிறார்.

நண்பர் அபிலாஷ் சந்திரன் எழுதிய புருஸ்லி புத்தகத்தை நான் திருப்பி கொடுக்க தயார், இந்த போஸ்ட்டில் அபிலாஷ் சந்திரன் அவர்களையும் இணைத்துள்ளேன், அவர் தனது முகவரியை கொடுத்தால் உடனே அனுப்ப நான் தயார்.. நண்பர்களும் பின்பற்றலாமே ??!!!

விலாசினி ரமணி

தமிழ் இந்துவில் தன் கட்டுரையைத் தொடர்ந்து, தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் எழுதியிருக்கும் அபிலாஷ் சந்திரனின் எழுத்துகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. நயந்தாரா செகலை மட்டுமல்லாது ஒட்டுமொத்த எழுத்தாளர்களையும் அவமானப் படுத்தியுள்ளார். சாஹித்ய அகடெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் அதைத் திருப்பியளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அப்படித் திருப்பியளித்த எழுத்தாளர்களை எள்ளி நகையாடியது மட்டுமல்லாமல், காழ்ப்பையும் சேர்த்தே வெளிப்படுத்தியிருக்கும் அபிலாஷிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, அவருடைய எழுத்துகளுக்கு அத்தனை மதிப்பளிக்கத்தேவையில்லை என்று அதை புறங்கையால் ஒதுக்கிச்சென்றாலும்கூட அவருக்குக் காட்டமாக யாராவது பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

Kavin

இப்படியும் எழுத முடியுமா? வியப்பாக இருக்கிறது. விருதை திருப்பித் தருவதும் தராததும் அவரவர் விருப்பம். திருப்பித்தந்த ஒவ்வொருவர் பற்றியும் இப்படி எழுத முடியுமா? காத்திருக்கிறோம். நம்மால் முடியாது என்றால் பேசாமல் இருப்பது நலம். நான் தர மாட்டேன் எனவும் கூறலாம். ஆனால் திருப்பித் தந்தவர்களை கொச்சைப்படுத்தும் பதிவு ஒன்றை எழுதி இப்படியா தரம் இறங்க வேண்டும்? மாட்டுக்கறி உண்ணும் உரிமைக்காக ஒலிக்கும் குரல்கள் எல்லாம் நீங்கள் இறுதியில் சொல்லும் நாயின் குரலாக புரிந்துகொள்ளலாமா அபிலாஷ்?

Suresh Vijayan

அபிலாஷிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. யுவபுரஸ்கார் விருதை திருப்பியளிக்க யாரேனும் வற்புறுத்தினார்களா இவரை. அதற்கென முந்திக்கொண்ட அவசர..அரைகுறை மனப் பதிவாக இதை எடுத்துக் கொள்ளலாமா…

தமிழ்க்கனல் அவருக்கு விருது கிடைத்தபோது மெய்யாகவே தகுதி படைத்தவராக இருந்தார்; இப்போதும் இனியும் அவருக்கு இது போன்ற விருதுகளுக்கான தகுதி இல்லை என்பதை நிரூபிக்கிறாரோ?

Arshiya Syed Hussain Basha

அபிலாஷ்… அபி லாஸ்ட்?

லை போயம்ஸ்

நீங்கள் உங்கள் விருதை தற்காத்துக்கொள்வது உங்கள் தார்மீக உரிமை. அதற்காக எதிர்ப்பாளர்களை தரம்பிரித்துத் தாக்குவதில் உங்களின் தரத்தை வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள். வாதத்தின்படியே, லட்ச ரூபாயை தூக்கியெறிய வழியற்றவர்கள் தான் எதிர்ப்பினை பதிவு செய்யாமல் வெறும் அறிக்கையோடு நிறுத்திக்கொண்டிருக்கிறீர்களா?

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரி உமிழ்கிறீர்கள் அபிலாஷ்

Vasu Murugavel

இது ஒரு மாற்றுப் பார்வை… கற்பனை… இதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. இதில் ஒரு விடயம் முக்கியம் என்று நான் கருதுகிறேன். எழுத்தாளன் என்றால் அவர் பஞ்சத்திலே கிடப்பான். பேருந்துகளிலே அவன் வாழ்க்கை நகரும். தனது எழுத்தை புத்தகமாக போடா பதிப்பகம் பதிப்பகமாக அலைவான். கிடைக்கும் ராயல்டியையும் ஏழை பாழைகளுக்கு கொடுத்து விட்டு தியாக வாழ்க்கை வாழ்வான், என்ற பலரின் கற்பனைகள்… இதில் சுட்டப் படுகிறது. ஒரு தட்டையான மனோபாவத்தை நாம் வளர்த்து விட்டோம்.

விருதை திருப்பிக் கொடுப்பதும் / கொடுக்காதத்தும் அவரவர் விருப்பம். கொடுப்பவர்களை / கொடுக்காதவர்களை கொச்சைப் படுத்த வேண்டாமே ..!

Rafi Ahmed

விருதை திருப்பிக் கொடுப்பதும் கொடுக்காதத்தும் அவரவர் விருப்பம். சக நண்பர்களை கேவலப்படுத்த வேண்டாம் நண்பரே.!

Marx P Selvaraj

நீங்கள் உங்கள் நாய்க்கு சாப்பிட எதுவுமே கொடுப்பதில்லையா?
உங்களுக்கு யுவ புரஸ்கார் விருதை திருப்பிக் கொடுக்க விருப்பம் இல்லை என்றால், அமைதியாகக்கூட இருக்கலாம்.
இது மாதிரி, உளற வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை.
படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், நீங்கள் மட்டும் அறிவாளி என்று நினைப்பது எல்லாம் இந்த காலத்தில் வேகாது.

Ajnabhii Al Srilanki

இப்படி ஒரு சப்பையான ஸ்டேட்டஸ் போட்டுத்தானா உங்கள் கொண்டையை காண்பிப்பது? பாவம் அபிலாஷ் நீங்கள்..

Gokul Nagarajan

அத்தனை பேரும் ஸ்டன்ட் பண்ற்துக்கும் எலீட்டாக இருப்பத்னாலேயுமா விருதை திருப்பிக் கொடுத்தார்கள்? ஒரு அடையாள எதிர்ப்பு தான். ஆனால் இவ்வள்வு நெருக்கடியான பாசிசம் சூழ்ந்திருக்கிற காலத்திலும் அதிகாரத்தை எதிர்ப்பவர்களைத் தாக்குவது தான் நமது ப்ரியாரிட்டி என்றால்… ஒன்றும் சொல்வதற்கில்லை.

Vetri Rajan

உங்கள் கட்டுரைகளை விரும்பி படிப்பவன் நான் ஆனால் நீங்கள் இவ்வளவு கீழ்தரமான அயோக்கியன் என்று எனக்கு புரியவைத்தமைக்கு நன்றி

Prakash JP

“இந்தியாவின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், நாட்டில் பாசிச சக்திகளின் போக்கிற்கு எதிராக தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி தரக்கூடிய அளவுக்கு, நாட்டில் நிலைமைகள் இவ்வளவு மோசமாக போய் கொண்டிருக்கிறதே” என்று கொஞ்சமும் வருத்தம் கொள்ளாமல், இப்படி அவர்களை கொச்சைப்படுத்தும் நிலையில் தான் அறிவு முதிர்ச்சி இருக்கிறது…

“ஆளும் வளரனும், அறிவும் வளரனும், அது தாண்டா வளர்ச்சி”

Bharathy Malar

அய்யா நீங்கள் விருதை திருப்பி கொடுங்க அல்லது குடுக்காம போங்க. ஆனா நீங்க திருப்பிகொடுக்காம இருக்கதுக்கு குடுத்தீங்களே ஒரு விளக்கம். கொய்யால அதுக்கே குடுக்கனுய்யா ஒரு விருது.

Gnanam Ponnaiah

உங்கள்பேச்சு, எழுத்து, பதிவுகள், விவாதம் எல்லாவற்றிலும் பெற்ற Goodwillஐ ஒரிரு பதிவுகளில் தொலைத்து விட்டீர்களே அபிலாஷ்!

Gireesh LS

எழுத்தாளனையும் அவனது எழுத்துக்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஒரு சராசரி வாசகனாக உங்களது எழுத்துக்களை இதுவரை படித்ததற்காக வெட்கப் படுகிறேன்.

Sankaranarayanan

SP You are clearly diverting the issue. No one is saying the writers have made a great sacrifice. A award is not equal to a job or life. Its a token or symbol. I think you consider your award as your life.

Suriyanarayanan

i have noted in an earlier occasion, a similar behavior from you, now you prove that you are consistent in doing these mudslinging. please do not blabber in the public domain.

R.r. Srinivasan

விருது வாங்கலியோ விருது….
தமிழ்நாட்டில பாதிப்பேருக்கு மேல சாகிதய அகாடமி விருது கொடுக்கப்படவில்லை,, வாங்கப் பட்டிருக்கிறது…..கஸ்டப்படு,,லாபி பண்ணீ,,,
இன்னும் என்னலாமோ பன்னி வாங்கியிருக்காங்க…
அதைப் போயி திருப்பிக் கொடு, திருப்பிக்கொடுன்னா…..
ஈழ இனப்படுகொலையிலேயே எதுவும் நடக்கல…

Advertisements