“இந்தியாவை இந்துத்துவ நாடாக அறிவியுங்கள்”

udav

சிவ சேனா கட்சியின் புகழ்பெற்ற தசரா விழா பேச்சுக்கு இந்த ஆண்டு ஏக பிரபலம் கிடைத்திருக்கிறது. சிவ சேனை ஆரம்பிக்கப்பட்ட புதிதில் சிவாஜி பார்க்கில் நடந்த தசரா விழாவில் பால் தார்க்கரே மண்ணின் மைந்தர்களே, தென்னிந்தியர்களையும் மதராஸிகளையும் அடித்து விரட்டுங்கள் என்று பேசினார். இப்போது அவருடைய மகனும் சிவ சேனாவின் தலைவருமான உத்தவ் தார்க்கரே “இந்தியாவை இந்துத்துவ நாடாக அறிவியுங்கள்; மாட்டிறைச்சியை நாடு முழுவதும் தடை செய்யுங்கள்” என பேசியிருக்கிறார். வியாழக்கிழமை நடந்த தசரா விழாவில் அவர் உதிர்த்த சில கருத்துக்கள் இதோ…

* தாத்ரி சம்பவம் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அவமானம் இல்லையா?

* மாட்டிறைச்சி உண்பதாகச் சொல்லி வட இந்தியர்களை கேவலப்படுத்திய மத்திய அமைச்சர் கிரண் ரிஜு மீது பாஜக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

* கசூரி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நாங்கள் என்ன வன்முறையிலா இறங்கினோம்? எதற்காக எங்களைத் தடை செய்ய வேண்டும்?

* யாகூப் மேமனைத் தூக்கிலிட்டதற்காக ஏன் இப்படி தேம்புகிறீர்கள்? ஏனென்றால் அவர் ஒரு முஸ்லிம். இதே உணர்வு இந்துக்கள் மேலும் உங்களுக்கு வருமா?

* சனாதன் சன்ஸ்தா அமைப்பின் மீதும், கைது செய்யப்பட்ட சமீர் கெய்வாட் மீதும் குற்றத்தை நிரூபித்துவிட்டு பிறகு குற்றவாளிகள் என கை நீட்டுங்கள்.

* மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் புரோஹித், சாத்வி பிராக்யா மீது ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?

* இந்துக்கள் மதம் மாறுவது உங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் அவுரங்கசீப் சாலை பெயர் மாற்றப்பட்டதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்…

* வீர சாவர்க்கரைப் போல காங்கிரஸ் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டிருக்கிறதா?

* ராவணனுக்கு எதிராக ராமன் போரிட்டதுபோல, பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் களம் காணுவோம்.

* பாலசாகேப்(பால் தார்க்கரே) உயிரோடு இருந்திருந்தால் நாங்கள் இன்னும் புலிகளாக இருப்பது கண்டு பூரித்திருப்பார். ஆனால் சிலர்தான் ஆடுகளாக மாறிவிட்டார்கள்.

* பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக பேசினால் உடனே பாஜகவுடன் கூட்டணியை எப்போது முடித்துக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எங்கள் பணி முடிந்ததும் நாங்கள் உறவை முறித்துக்கொள்வோம்.

* நாம் நிச்சயம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவோம். அது எப்போது என்று சொல்ல முடியாது.

Advertisements