ஆட்சிக் கனவிலிருக்கும்போதே நிலஅபகரிப்பா?

stalin tour

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது மின்சாரம் திருடுவது, ஒன்றிரண்டு மரங்களை வெட்டிச் சாய்ப்பது என செய்வது ஊரறிந்த விஷயங்களாகிவிட்டன. கடந்த மாதம் மாண்டியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்கப் போன ராகுல் காந்தி வாகனத்தில் வருவதற்காக, முற்றாத பல ஏக்கர் நெல் பயிர்கள் அறுத்து வீணடிக்கப்பட்டன. பீகாரில் மோடி கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்காக ஒரு தனியார் கல்லூரி வளாகத்துக்குள் இருந்த 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. தமிழகத்தில் அதுபோல நடக்காமல் இருந்தால் எப்படி? நமக்கு நாமே விடியல் பயணம் மேற்கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்காக திமுகவினர் அந்த அறப்பணியைச் செய்து முடித்திருக்கின்றனர்.

திமுக பொருளாளர் மேற்கொண்டிருக்கும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தின் நிறைவு நாளான நவம்பர் 8-ஆம் தேதி செங்கல்பட்டு அருகே பிரமாண்ட பேரணி நடைபெற இருக்கிறது. இரண்டு ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் வைத்திருக்கும் நிலத்தில் இந்தப் பொதுக்கூட்டத்துக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலத்தை ஒட்டி அமைந்திருக்கும் இரண்டு குளங்களை மண் நிரப்பி சமன் செய்துள்ளனர் என்கிற செய்தியை வெளியிட்டுள்ளது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலத்தை இப்படி சமன் செய்திருக்கிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. குளம் வற்றியுள்ள நிலையில் இது அரசு வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்புப் பலகையும் அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கிறது.

இப்போது.காம் செங்கல்பட்டு கோட்டாட்சியரை இது குறித்து அணுகி கேட்டது. பேனர் வைக்க மட்டுமே எங்களின் அனுமதி கேட்பார்கள். பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார் அவர். ஆனால், அங்குள்ள ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, குளத்தை சமன்படுத்திய அந்தப் பகுதியில் அவசர அவசரமாக குளத்தைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறது வருவாய்த் துறை.

குளத்தைக் கண்டுபிடிக்கும் பணியில்...
குளத்தைக் கண்டுபிடிக்கும் பணியில்…

“நாங்கள் 385 ஏக்கரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருக்கிறோம். அந்தப் பகுதிக்குள் இந்த இரண்டு குளங்களும் வருகின்றன. பொதுக்கூட்டம் முடிந்ததும் அந்த இடம் அப்படித்தான் இருக்கும்” என்று பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் இருக்கும் திமுகவினர் கூறுகின்றனர்.

செங்கல்பட்டு சேர்மனாக உள்ள கே. அன்புச்செல்வன், துணை சேர்மனாக உள்ள சி.எஸ்.சரவணனும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. திமுகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதி என்பதாலேயே மு.க.ஸ்டாலின் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடிக்க தேர்ந்தெடுத்திருக்கலாம்.

கடந்த திமுக ஆட்சியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது திமுகவினர் செய்த வகைதொகையில்லாத நில அபகரிப்புகள்தான். கவுன்சிலர்கள் தொடங்கி அமைச்சர்கள்வரை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு வழக்குகளில் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறிவருகிறார். இந்நிலையில் ஆட்சிக்கும் வரும் முன்பே நில அபகரிப்புகளில் ஈடுபடுவது எந்தவகையில் விடியலைத் தரும்?

 

Advertisements

One thought on “ஆட்சிக் கனவிலிருக்கும்போதே நிலஅபகரிப்பா?

  1. சினிமாக்களில் எல்லா அங்கங்களையும் காட்டி ஆடும் பெண்கள், நாகரிக உடை என்ற பெயரில் ஜட்டி அளவிற்கு ஆடை அணிந்து தெருவில் சுற்றும் பெண்களை பார்த்து பாலுணர்ச்சி தூண்டப்பட்ட ஆட்களுக்கு எளிதாக கிடைக்கும் இரை இந்த விவரம் அறியா சிறுமிகள்.இதற்கு காரணமான பெண்களில் மார்புகளை முதலில் அறுத்தெறிய வேண்டும்.
    அவர்களுக்கு முதலில் தண்டனை தர வேண்டும்.
    நிறைய விவாதங்களில் சேலை கட்டினால் மட்டும் வன்புணர்ச்சி செய்யவில்லையா என்று வாதிடுகின்றனர்.
    உடை காரணமல்ல. விளம்பரங்கள், சினிமாவில் வரும் பெண்களை அடைய முடியாதவன் தன வெறியை தனித்துக் கொள்ள ஒரு வடிகால் தேடி 8 மாத குழந்தையோ, 80 வயது குழந்தையோ ,கற்பழிக்கிறான்.
    ஆக முதலில் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் இது போன்ற பெண்களே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.