‘மோடிக்கு நான் கைரேகை ஜோசியம் பார்த்தேன்’ பிரபல ஜோதிடர்

2015-ஆம் ஆண்டின் தேர்தலாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்துவிட்டது. இந்தியாவுக்கான பிரதமர், பீகார் மாநில முதல்வர் வேட்பாளர்போல் நிதிஸ்குமாருக்கு நேரடி போட்டியாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். அமீத் ஷா உள்பட பாஜக தேசிய தலைவர்கள் பாட்னாவின் நட்சத்திர ஹோட்டல்களில் இரண்டுமாதமாக முகாமிட்டு வேலைப்பார்க்கிறார்கள். நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்திருக்கும் நிலையில் பரபரஸ்பர குற்றச்சாட்டுக்களை நிதிஸ்குமாரும் மோடியும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த வாரம் தாந்த்ரீகர் ஒருவரிடம், நிதீஷ்குமார் ஆசி பெறுவது போன்ற விடியோவை வெளியிட்டது பாஜக. அதை முன்வைத்து பிரதமர், “பீகார் மக்கள் மந்திர-தந்திர ஜனநாயகத்தைத்தான் விரும்புகிறார்களா? 18-ஆம் நூற்றாண்டு மனநிலையில் உள்ளவர்கள் எப்படி மாநிலத்தை வழிநடத்தப்போகிறார்கள்?” என்று பிரச்சார மேடைகளில் முழங்கினார்.

மோடிக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததாகச் சொல்லும் ஜோசியர்
மோடிக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததாகச் சொல்லும் ஜோசியர்

இந்நிலையில் பிரபல கைரேகை ஜோதிடர் பெஜன் தருவாலா, தன்னிடம் மோடி கைரேகை ஜோசியம் பார்க்க வந்தார் என்று பேசியிருக்கிறார். மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும் என்பதை தான் தான் கணித்துச் சொன்னதாகவும் அவர் பேசியிருக்கிறார். நிதீஸ், மாந்திரீகரை சந்தித்ததை கடுமையாக விமர்சித்த பாஜக தரப்புக்கு ஜோதிடரின் இந்தப் பேச்சு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisements