விருது திரும்ப அளிக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக பாலிவுட் பெண்கள்

zoya akthar

வளரும் சகிப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய விருது பெற்ற 24 திரைக் கலைஞர்கள் வியாழக் கிழமை தங்களுடைய விருதுகளைத் திரும்ப அளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் பாலிவுட்டில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பிரபல நடிகர் அனுபம் கேர், விருதுகளை திரும்ப அளிப்பது சரியல்ல என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தரின் மகளும் இயக்குநருமான ஸோயா அக்தர், “இது அமைதியான வழியில் நடத்தப்படும் போராட்டம். இதற்கு நான் ஆதரவளிக்கிறேன். ஒருவேளை நான் தேசிய விருது பெற்றிருந்தால், நிச்சயம் இந்த சந்தர்ப்பத்தில் திரும்ப அளித்திருப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார். இவர் இயக்கிய லக் பை சான்ஸ் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம். ஸிந்தகி நா மிலேகா டோபாரா என்ற படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றவர் ஸோயா.

இதுபோல பாலிவுட் நடிகை கல்கி கோச்சிலின், “நாட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அரசாங்கத்துக்கு உணர்த்தே இப்படியான போராட்ட வடிவத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது மிகவும் தைரியமான செயல்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisements