முட்டாள் இடதுசாரியாக இருப்பதில் எனக்குப் பெருமைதான்!

பாரீசில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல் குறித்து இப்போது.காமில் ‘பாரீஸ் தாக்குதல்: யாரை பயமுறுத்த?’ என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.  இந்தக் கட்டுரைக் குறித்து எழுதப்பட்டுள்ள பின்னூட்டங்களில் பாரீஸில் நடந்த தாக்குதலை நான் நியாயப்படுத்தி எழுதியுள்ளதாக எழுதியிருக்கிறார்கள். என் மீது ‘முட்டாள் இடதுசாரி’ என்பன போன்ற அவதூறுகளையும் பின்னூட்டங்களில் எழுதியுள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்து சில புரிதல்களை ஏற்படுத்த முயற்சிக்கிறேன். என்னுடைய எண்ணங்களை விடியோவாக என்னுடன் இணைந்திருக்கும் வாசகர்கள் முன் வைக்கிறேன்.

நன்றி.

Advertisements

6 thoughts on “முட்டாள் இடதுசாரியாக இருப்பதில் எனக்குப் பெருமைதான்!

 1. அனைத்து பேனைகளும் எழுதுவதற்காகத்தான் தயாரிக்கப்படுகின்றன.
  அதேபோல அனைத்து துப்பாக்கிகளும் உயிர்பலி வாங்குவதற்காகத்தான் தயாரிக்கப்படு கின்றன.
  அவற்றை யார் பயன்படு த்துகிறார்களோ அதைப் பொறுத்துத்தான் அவற்றின் பெறுபேறுகள் அமையும்.

  அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்துப் படுகொலைகளும் கண்டிக்கத்தக்கவை.

  எப்போதும் படுகொலைகள் நடக்கும் போது அவற்றை செய்பவர்களுக்கு அது நியாயமானதாகவும் அதனால் பாதிக்க ப்படுபவர்களுக்கு அநியாயமாகவும் தோன்றும்.

  இதில் எது நியாயம் எது அநியாயம் என்பது அந்தப் படுகொலைகளை வைத்து நடத்தப்படும் அரசியலைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும்.

  பிரான்சுக்கு எப்போதும் காலணித்துவ ஏகாதிபத்திய பக்கம் ,புரட்சி பக்கம் என்று இரண்டுபக்கங்கள் இருக்கின்றன.

  பிரெஞ்சு புரட்சியும், பாரிஸ் கொம்யூனும் விடுதலைக்கு போராடுபவர்களுக்கு வரலாற்றுப் பாடங்கள்.

  பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அறுவடை என்று சொல்லிக் கொண்டு பிரெஞ்சு அப்பாவி மக்களை கொன்றுவிக்கும் மத அடிப்படைவாதத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

  லெபனானில் கென்யாவில் நைஜீரியாவில் ஏமனில் கூட இந்த மத அடிப்படைவாதிகளால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம் பலஸ்தீனத்திலும் சிரியாவிலும் மக்கள் வகைதொயின்றி கொல்லப்படுவதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.இதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது

  இந்தப்படுகொலைகளுக்குள் கடந்த வெள்ளி 13 ல் நடந்த பிரெஞ்சு படுகொலைகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால் பிரஞ்சு மக்களை நிம்மதியாக வாழவிடமாட்டோம் என்று மக்களுக்கு எதிரான அரசியலாக இதை இந்த அடிப்படைவாதிகள் மற்றியது தான்.

  இங்கே நாங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் இந்த அடிப்படை வாதிகள் லெபனானிய கென்ய நைஜீரிய ஏமன் மக்கள் மீது இப்படியான ஓர் போர் பிரகடனம் ஒன்றை செய்யவில்லை.

  இன்றுவரை பலஸ்தீன மக்களை வகைதொகையின்றி கொன்று குவிக்கும் இசுரேலுக்கு எதிராக போராட இந்த அடிப்படை வாதிகள் முன்வரவில்லை.

  இந்த அரசியலுக்கு எதிராகத்தான் பலரும் பிரெஞ்சு மக்களோடு கைகோர்த்திருக்கிறார்கள்.

  • அமெரிக்காவிற்கு எதிராகவும் கூடத்தான் போர் பிரகடனம் செய்யவில்லை அய்யா. இதயிம் கவனிக்கவும்

 2. பின்னூட்டம் என்கிற பெயரில் அனானிகள் நிறைய பேர் கோழைத்தனமாக இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள் என்பதற்கு இந்தளவு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்பது எனது கருத்து.ஏனெனில் அவர்களுக்கு இந்த பதிலால் எந்த தெளிவும், மன நிறைவும் வந்து விடப் போவதில்லை என்பதே.அதிலும் “முட்டாள் இடதுசாரி” என்கிற வசையை சிரமேற்பது -அது விமர்சன பூர்வமான விளக்கங்களோடு- என்றாலும் தேவையில்லை.

 3. பாசிசம் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அதை நாம் எதிர்க்கவேண்டும். இந்தியாவில் தற்போது தலை காட்டும் இந்த பாசிசத்தை நம் நடுநிலையாளர்கள் கடுமையாக எதிர்த்தே வருகிறார்கள். இல்லாவிட்டால் நமது நாடும் மற்றொரு ஆப்கானிஸ்தான் நிலைக்கு வரலாம். ஆனால் அதே சமயத்தில் மேற்கில் இதே படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள், அப்பாவிகளை கண்டபடி சுட்டுவிட்டு மதவாதம் பேசுவது போன்ற அடிப்படைவாதம் நடைபெற்றால் இதே நடுநிலைவாதிகள் காட்டும் முகமே வேறு. அவர்கள் உடனே குற்றம் சொல்வது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைத்தான். இது ஒரு விதமான காம்யூனிஸ்ட் அடிப்படைவாதம். முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு வலிந்து உங்களைப் போன்றவர்கள் உலகின் தற்போதைய ஆபத்தான மதவாதத்தை ஆரோக்கியமாக வளர்த்துவருகிறீர்கள்.

  லெபனான் சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் இதே படுகொலைகள் எந்த அமெரிக்க ஐரோப்பிய மதவாதிகளால் நடத்தப் படுகின்றன என்று முடிந்தால் குறிப்பிடவும். அங்கு அப்பாவி மக்களைக் கொல்பவர்களும் இதே மதவாதிகள்தான். உங்களால் சொல்ல முடிவதெல்லாம் இதற்க்கெல்லாம் மூல காரணம் அமெரிக்காவின் பேராசைதான் என்பது மட்டுமே. அதைக்கூட ஒரு கோஷ்டி கானம் போலத்தான் சொல்கிறீர்களே தவிர அந்தக் குற்றச்சாட்டின் உள்ளே செல்வதில்லை. அமெரிக்காவை குற்றம் சொல்வது சுலபம் . ஏனெனில் அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. பொதுவாக நாம் எல்லோருக்கும் அமெரிக்காவின் மீது ஒரு வன்மம் இருப்பதால் இது ஒரு இயல்பான எதிர்வினை.

  இஸ்ரேல் மீது கை வைக்க துணிச்சல் இல்லாத பேடிகள் அகதிகளை வரவேற்கும் மேற்குலகின் மனிதாபிமானத்தை பயன்படுத்திக்கொண்டு தஞ்சம் புகுந்த நாடுகளிலேயே தங்கள் கைவரிசையை “வீரத்தனமாக” வெளிக்காட்டுகிறார்கள். இதை எதிர்த்துப் பேச வேண்டிய உங்களைப் போன்றவர்களின் பேனாக்கள் கோழைத்தனமாக மவுனம் காக்கின்றன. isis போன்ற அடிப்படைவாத மத இயக்கங்கள் அமெரிக்க சதி என்று கூவும் நீங்கள் கூடிய விரைவில் அந்த இயக்கங்களில் இருப்பவர்களே அமெரிக்கர்கள்தான் என்று சொல்ல அதிக நாட்கள் ஆகாது.

  எங்கள் நாடுகளில் மக்கள் சாகிறார்கள். நீங்கள் மட்டும் சுகமாக வாழலாமா? என்பதே இந்த மதவாதிகளின் கோபம். உங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் பேனாக்கள் இந்த கோபத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. மனிதாபிமானத்தை “வாழவைக்கும்” எழுத்து. இது போல நிறைய எழுத வாழ்த்துக்கள். வந்தனம்.

 4. பாரீஸ் தாக்குதல் யாரை பயமுறுத்த என்கின்ற பதிவில் நீங்க சொன்னது

  கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சார்லி ஹெபடோ பரப்பிய வெறுப்பை இந்தத் தாக்குதல் மூலம் இஸ்லாமியருக்கு எதிரான ஃபோபியோவாக ஊடகங்கள் முன்னெடுத்தன.

  பத்திரிக்கையாளராகிய உங்களுக்கு உள்ள அதே சுதந்திரம் மதிப்புக்குரிய திரு.Charlie Hebdo உள்ளது.உங்களுக்கு இந்திய தலைவர்களை எவ்வளவு மட்டமாக விமர்சிக்க உரிமையுள்ளது போலவே அவருக்கும் எவரையும் விமர்சிக்கும் உரிமை உள்ளது.எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.
  அப்படியிருக்க ஒரு ஜனநாயக நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளராகிய நீங்க மதவாத இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளீர்கள்.
  எனது கடுமையான கண்டணங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.