ஆன் லைனில் தீவிரவாதிகளை உருவாக்குவது எப்படி?

பாரீஸ் தாக்குதலை அடுத்து மேற்குல மக்களிடையே மட்டுமல்ல, மேற்கத்திய ஊடகங்களிலும் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. அதற்கொரு உதாரணம்தான் கடனா வாழ் சீக்கியரை பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியாக சித்தரித்து செய்திகள் வெளியிட்டுள்ளன ஸ்பானிய ஊடகங்கள்.

விரேந்தர் ஜப்பால் என்கிற இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கனடா எழுத்தாளரின் ஒளிப்படங்களை மார்ஃபிங் செய்து ‘யாரோ’ ஆன் லைனில் வெளியிட அது வைரலாகியிருக்கிறது. இந்தப் ஒளிப்படத்தைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விரேந்தரின் மார்ஃபிங் புகைப்படத்துடன் வந்த செய்தி..
விரேந்தரின் மார்ஃபிங் புகைப்படத்துடன் வந்த செய்தி..

தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட தன்னுடைய ஒளிப்படம் வைரலானதை அடுத்து, தன்னுடைய விளக்கத்தை அளித்திருக்கிறார் விரேந்தார்.

tweet

“என்னை அடிப்படையான விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். நான் டர்பன் அணியும் சிக்கியன், கனடாவில் வசிக்கிறேன். இதற்கு முன் பாரீஸ் சென்றதே கிடையாது” என்று அறிவித்திருக்கும் விரேந்தர். இத்தகைய பிரச்சினையில் சிக்கிக் கொண்டதால் தான் சிலரால் தாக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

terr 2

இது ‘ஆன் லைனில் வளரும் தீவிரவாதம்’ என பல உலக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் விரேந்தரின் மார்ஃபிங் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்பானிஷ் பத்திரிகை, தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்டுள்ளது.

Advertisements