இந்திரா காந்தியை நினைவு கூற 10 காரணங்கள்

Indira Gandhi

இந்திரா காந்தியின் 98-வது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 1966-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பெண் இந்திரா காந்தி. அவருடைய பிறந்த நாளில் அவரை நினைவுகூர 10 காரணங்கள் இருக்கின்றன. அவை…

1. 1971-ஆம் ஆண்டு இரண்டு பகுதியாக பிரிந்திருந்த பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியை வங்காள தேசமாக உருவாக்கக் காரணமாக இருந்தவர் இந்திரா காந்தி.

2. பஞ்சாபில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தை அடுத்து விளைச்சலை அதிகரிக்கும் பொருட்டு
‘பசுமை புரட்சி’ என்ற பெயரில் வீரிய விதைகளையும் செயற்கை உரங்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியவர் இந்திரா. பசுமை புரட்சி, ஆரம்ப ஆண்டுகளில் சாதகமான பலன்களை ஏற்படுத்தினாலும், 50 ஆண்டுகால நோக்கில் பல பாதகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

3. சீனாவின் அணு ஆயுத சோதனைக்கு 1967-ஆம் ஆண்டு அணு ஆயுத தயாரிப்பை அங்கீகரித்தவர் இந்திரா. 1974-ஆம் ஆண்டு பொக்ரானில் ‘சிரிக்கும் புத்தர்’ என பெயரிட்ட அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியவர் இந்திரா.

4. இந்திய அரசியலைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டபோது, ஹிந்தி தேசிய மொழியாக ஆனது. ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிராத பல மாநிலங்களுக்கு இது மிகப் பெரும் சிக்கலாக இருந்தது. இதைப் போக்க ஆங்கிலத்தையும் 1967-ஆம் ஆண்டு தேசிய அலுவல் மொழியாக்கினார்.

5. இந்தியாவிலிருக்கும் ஏழ்மையை அகற்றும் பொருட்டு வங்கிகளை தேசிய மயமாக்குவதாக அறிவித்தார் இந்திரா. 1967-ஆம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாகின. இந்திரா காந்தியின் திட்டங்கள், செயல்பாடுகளில் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது இது.

6. அரபு-இஸ்ரேலிய பிரச்சினையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டார் இந்திரா. காஷ்மீரில் பிரச்சினை செய்யும் பாகிஸ்தானை எதிர்கொள்ள தனக்கு அரபு நாடுகள் உதவியை நாடினார் இந்திரா. இதன் அடிப்படையில் அவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தார்.

7. 1971-ஆம் ஆண்டின் போது பாகிஸ்தானுடன் போர் உருவானது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்கா. சோவியத் ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் மட்டுமல்லாது பெருமளவில் ஆயுதங்களை வாங்கும் நிலையில் நெருங்கி இருந்தது இந்தியா. இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் இந்திராவை சூனியாக்காரி என்று பொருள்பட பேசினார். ‘புத்திசாலி நரி’ என்றும் வர்ணித்தார். இந்தப் போரில் வென்றதற்காக வாஜ்பாஜ், ‘துர்கா தேவி’ என்று வர்ணித்தார்.

8. இன்றைக்கு தமிழக மீனவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ள, கச்சத் தீவை இலங்கைக்கு 1974-ஆம் ஆண்டு தந்தவர் இந்திரா.

9. இந்திராவை நினைவுபடுத்தும் முதன்மையான விஷயம் 18 மாதங்கள் இந்தியாவை அவசர நிலையில் வைத்திருந்தவர் என்பதே. தன்னுடைய அரசியல் எதிரிகளை ஒடுக்கும்பொருட்டு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் இந்திரா. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது அழியாத கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.

10. ‘ஆபரேஷன் ப்ளு ஸ்டார்’ இந்திராவை நினைவு படுத்தும் முக்கிய விஷயங்களில் ஒன்று. 1984-ஆம் ஆண்டில் பஞ்சாபில் பிரிவினையைத் தூண்டிய பிந்தரன்வாலாவை ஒடுக்கும் முயற்சியில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலுக்கு ராணுவத்தை அனுப்பினார் இந்திரா. இது அவர் உயிரைப் பறிக்கும் சம்பவத்தில் போய் முடிந்தது. தன்னுடைய சீக்கிய மெய்க்காவலர்களாலேயே 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

Advertisements

One thought on “இந்திரா காந்தியை நினைவு கூற 10 காரணங்கள்

 1. 1.உலகிலேயே முதல் ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் சர்காரை கவிழ்த்தார்.
  2.ஜனாதிபதி தேர்தலில் சொந்த கட்சி வேட்பாளரையே தன்னுடைய ஈகோ பிரச்சனையால் தோற்கடித்தார்.
  3தன்னுடய சொந்த கட்சியை உடைத்தார்.
  4.கட்சியில் உட்கட்சி ஜனநாயகத்தை அழித்தார்.எல்லா முடிவுகளையும் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று கொண்டுவந்தார்.கட்ச்சிபல்லாயிர கணக்கான கோஷ்டிகளாக இன்று பிரிந்து இருக்கிறது.
  5.அகாலி தளத்தை உடைக்க பிந்தரன்வாலாவை வளர்த்தார்,அதன் விளைவு அனைவரும் அறிவர்.
  6.காமராஜரை அழிப்பதற்காக கருணாநிதியை வளர்த்தார்,கருணாநிதியை ஒழிக்க MGR -ஐ ஊக்கபடுத்தினார்.ஆனால் என்ன செய்தும் அவர் கட்சியை தமிழ்நாட்டில் அழிவிலிருந்து காப்பாற்றமுடியவில்லை.
  7.இந்தமாதிரி அடாவடி தனங்களினால் இன்று அவருடைய கட்சி பல மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் கூட இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.