ஐபிஎல் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதி டி. எஸ்.தாக்கூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார்

ts-thakur

புதிய முறையில் நீதிபதிகள் நியமனம்

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கு மாற்றாக, நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும் இந்த முறையை மாற்றி, நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையத்தை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தது. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி லோதா, தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச். எல்.தத்து உள்பட பல நீதிபதிகள் இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

கொலிஜியம் முறையே தொடரும்!

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், “நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையத்தை உருவாக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாடாளுமன்றம் ஏகமனதாக உருவாக்கிய இந்த நியமன ஆணையம் சட்டவிரோதமானது. நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை என்பது 99-வது அரசமைப்பு திருத்தச் சட்டத்திற்கு முன்பிருந்தே வழக்கத்தில் உள்ளது. எனவே, தற்போது நடைமுறையில் இருக்கும் கொலிஜியம் முறையே தொடர்ந்து அமலில் இருக்கும்” என்றுஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தலைமை நீதிபதி நியமனம்

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் எச்.எல் தத்து, வரும் 2-ஆம் தேதியுடன் ஒய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ் தாகூரை நியமிக்குமாறு, அவர் பிரிந்துரை செய்திருந்தார். அவரது பரிந்துரையை ஏற்று, டி.எஸ்.தாகூரை, புதிய தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இப்போது.காமில் புதிய தலைமை நீதிபதி பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Advertisements