சீக்கிய படுகொலையை நியாயப்படுத்தினாரா ராஜீவ் காந்தி? பரபரக்கும் வீடியோ

1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தன்னுடைய சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, சீக்கியர்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களே இந்த வன்முறை முன்நின்று நடத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

 

காங்கிரஸை வாயடைக்க வைக்க பாஜகவின் திட்டம்?

இந்நிலையில் சீக்கிய படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்கத் தயார் பாஜக அமைச்சர் பேசிவருகின்றனர். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தவிடாமல் முடக்கியது காங்கிரஸ். இதனால் பல முக்கிய மசோதாக்கள் பாஜக அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது. குளிர்காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டிருக்கு நிலையில், ஏற்கனவே பல பிரச்சினைகளை கைவசம் வைத்திருக்கும் காங்கிரஸ், கூட்டத்தொடரை நடத்தவிடாது என்பதை ராகுல் காந்தியின் விடாப் பிடிப் பேச்சால் தெரிந்து வைத்திருக்கிறது பாஜக அரசு. இதன் காரணமாக சீக்கிய படுகொலை விஷயத்தை வைத்து காங்கிரஸை வாயடைக்க வைக்கலாம் என கணக்குப் போடுகிறது.

ராஜீவ் காந்தி என்ன பேசினார்?

சீக்கிய படுகொலை குறித்து ராஜீவ் காந்தி பேசியது ஏற்கனவே உலகம் அறிந்த ஒன்றுதான். “ஒரு மரம் சாயும்போது பூமி அதிரத்தான் செய்யும்” என்று சொன்னதன் மூலம் சீக்கியர்கள் படுகொலை நியாயப்படுத்தினார் என அவர் பேசிய பேச்சின் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் மூத்த வழக்கறிஞர் எச்.எஸ். பூல்கா.

சீக்கிய படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வரும் பூல்கா, பாஜக-காங்கிரஸின் அரசியலுக்கிடையே தன் இனத்தின் படுகொலைக்கு நியாயம் தேட முயற்சிக்கிறார்.

Advertisements