சென்னையின் பெருமழையில் ஒரு பயணம்

CUgc0EpWUAAWjAk

நுங்கம்பாக்கத்தில் தேங்கிய நீரில் நீந்திச் செல்லும் பேருந்து

சென்னை மக்கள் திங்கள்கிழமை(23-11-2015) இரவை ஆயுசு முழுக்கவும் நினைவில் வைத்துக் கொள்வார். அப்படியொரு அனுபவம்; கொட்டித்தீர்த்த பெருமழையும் நகர முடியாமல் திணறிய வாகனங்களும் திங்கள் இரவை பேரிடர் நேர அனுபவமாக்கிவிட்டன.  அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் போய் சேர்ந்துவிடக்கூடிய தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நான்கரை மணி நேரத்தில் போய் சேர்ந்தேன்.

விடாது துரத்திய மழையும், வழி நெடுக மக்கள் பட்ட பாடுகளும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நிறைந்துவிட்டன.  குறிப்பாக பெண்களின் அவஸ்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அதிகாலை 1 மணிக்கு, 4 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்த பெண்களின் அனுபவங்களைக் கேட்டபோது அவர்கள் மேல் அனுதாபம் கூடியது.

எனக்கிருந்த ஒரே பிரச்சினை என் மகன் பசியோடு காத்திருந்தான் என்பதுதான். ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் அவனைத் தொடர்பு கொண்டு ‘இதோ வந்துவிட்டேன்’ என சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ‘நீ போம்மா அப்படித்தான் சொல்லுவ’ என்று சலித்துக்கொண்டு இணைப்பைத் துண்டிப்பான்.

பசிக்கிறதே என்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை பிரிக்கப் பார்த்து அதை பிரிக்கத் தெரியவில்லை என்றான். மனம் வலித்தது.  நல்லவேளையாக உணவகத்தில் தோசை கிடைத்தது. இருவரும் சேர்ந்து உண்டபோது மணி 11 ஆகியிருந்தது.

என் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இரவு 1 மணி, 4 மணிக்கெல்லாம் வீடு போய் சேர்ந்தவர்களின் குழந்தைகள் எப்படி உண்டிருப்பார்கள்?  பெண் தான் வீட்டுக்கு வந்து சமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்கிற நிலை இந்தக் காலத்திலும் நீடிப்பது சரிதானா? ஆண்கள் எப்போது தங்கள் வீட்டுப் பெண்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்?

பெருமழையும் திங்கள்கிழமை இரவின் அசாதாரண பயணச் சூழலும் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்விகளை  மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன!

4 thoughts on “சென்னையின் பெருமழையில் ஒரு பயணம்

 1. Recently, I found your blog. I am glad find you, now i am reading almost every day. Your writing has clear ideas and close to reality. Eventhough i am reading your blog for 2 weeks now, the காகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன! post made write the comment and me thank you making me imaging Kakams and Kuil nests –

 2. உண்மைதான் சகோதரி .பெண்கள் வேலைக்கு போகின்றனரோ இல்லையோ
  ஆண்கள் அவர்களின் வேலைகளில் பங்கெடுப்பது தான் முறை .இங்கு கனடாவில் பெரும்பாலான ஆண்கள் வீட்டில் மனைவிக்கு உதவி செய்வதுடன்
  நன்கு சமைப்பார்கள் ,இது வெளிநாட்டு வாழ்கை தந்திருக்கும் ஒரு செயல் .

  என்னதான் தலை கீழாக நின்றாலும்ஆண்களால் தரமுடியாத அந்த அது! :உங்கள் பதிவில் காணப்பட்ட அந்த “தாய்மை உணர்வுதான்”,ஆண்களின் மழை பற்றிய பதிவுகளில் கானப்படாத ஒரு தாயின் உணர்வுகளோடு பகிரப்பட்ட உங்கள் பகிர்வே மனதைத்தொட்டது .நல்லதொரு தாய்க்கு மகனாக பிறந்து இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் .

  இதுதான் நான் முதன் முதலில் உங்கள் வலைத்தளத்தில் எழுதும் கருத்து .என்ன ஒரு பெண் அரசியல் பற்றி எழுதுவதா என்று ஒரு கோபம் இங்கு பலருக்கு இருக்கும் போல .இருந்தாலும் பேனா வையும் ,ஆயுதங்களையும் கைகளில் வைத்திருந்த பெண்களை நேரே பார்த்தவன் என்ற வகையில் என்றும் எனது ஆசிகள் உங்களுக்கு உண்டு ,பேனாவை ஆயுதமாக்கி முன்னேறுங்கள் !துணிந்து நில்லுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

  நன்றி ,

  • பெண்களை புரிந்துகொண்டமைக்கு நன்றி கரிகாலன். உங்களைப் போன்றோரின் புரிதல் நிச்சயம் நல்ல மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.