’பேசாம நீங்கள்லாம் இஸ்ரேலுக்குப் போயிடுங்க’

இந்துமதவாதம் குறித்து யார் என்ன பேசினாலும் இந்துமதவாதிகள் எடுத்த உடனே பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்லிவிடுகிறார்கள். ஷாரூக் கான், சல்மான் கான் வரிசையில் சமீபத்தில் இவர்கள் அமீர்கானையும் பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்லியிருக்கிறார்கள். பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்லுக்குப் புகழ்பெற்ற சிவ சேனாவின் அமைச்சர் ஒருவர் இப்படி பேசியிருக்கிறார்.

எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளித்துக் கொண்டிருப்பது குறித்து பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், நாட்டில் சகிப்பின்மை சூழல் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார். அதே கருத்தை டெல்லியில் நடைபெற்ற சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கான ரான்நாத் கொயங்கா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமீர்கானும் இப்போது தெரிவித்திருக்கிறார்.

“உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முதியவர் அக்லக் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களை படிக்கும்போது அது எனக்கு எச்சரிக்கையூட்டுவது போல் தோன்றுகிறது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை எடுத்துரைக்கும் விதமாக நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் என் மனைவி கிரண் ராவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி நாட்டைவிட்டே வெளியேறி விடலாமா என்றுகூட என்னிடம் பேசினார்” என்று விழா மேடையில் பேசிய அமீர்கான்,

“நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தங்களின் அதிருப்தியை படைப்பாளர்கள் வெளிப்படுத்த விருதுகளை திருப்பி அளிப்பதும் ஒரு வழிதான்” என்று தெரிவித்தார். அமீர்கானின் இந்தப் பேச்சுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு போலவே, பாஜகவும் பாஜக ஆதரவு இயக்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். உத்தர பிரதேச பாஜகவினர் அமீர்கானின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்து மகா சபை என்கிற அமைப்பு அமீர்கானும் ஷாரூக் கானும் பாகிஸ்தானுக்குப் போகட்டும் என்று சொன்னது. அதுபோல சிவ சேனாவுக்கு இப்போது அமீர்கானுக்கு எதிராக கொடி தூக்கியுள்ளது.

“அமீர்கான் இந்தியாவில் கொண்டாடப்படும் கலைஞர். ஆனால் இப்போதுதான் தெரிந்திருக்கிறது, நாம் இத்தனை நாளும் பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்று. அவர் இந்தியாவில் இருப்பது ஆபத்து என நினைத்தால் தாராளமாக பாகிஸ்தானுக்குப் போகட்டும்” என்று பேசியிருக்கிறார் மகாராஷ்டிராவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் சிவ சேனாவின் தலைவருமான ராம்தாஸ் கடம்.

 

நான் மாட்டிறைச்சி பற்றி எழுதிய ஒரு பதிவுக்கு சிலர் நீயெல்லாம் பாகிஸ்தானுக்குப் போக வேண்டிய ஆள் என்று பின்னூட்டமிட்டார்கள்.

‘நாங்க ஏங்க பாகிஸ்தானுக்குப் போகணும் வரலாற்று ரீதியில் பார்க்கப்போனா இது எங்க ஊரு, நீங்கதான் வந்தேறிகள்(!). ஸோ…நீங்கள்லாம் இஸ்ரேலுக்கு பக்கத்துல தனி நாட்டை அமைச்சுட்டு அங்க போயிடுங்க’ என்று தோழர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எழுதிவிட்டேன்.

Advertisements

4 thoughts on “’பேசாம நீங்கள்லாம் இஸ்ரேலுக்குப் போயிடுங்க’

  1. இந்து மதம் குறித்து ஏதாவது சொன்னால் வெளிநாட்டு போ என்றுதான் சொல்வார்கள்
    ஆனால் இஸ்லாம் பற்றி சொன்னால் தலையே போய் விடும்
    .
    அது சரி விஸ்வரூபம் பிரச்சினைக்கு உங்களை போன்ற நடுநிலை நக்கிகள் எங்கே போயிருந்தார்கள்
    ( நான் தமிழன் எனவே நடுநிலை நக்கிகள் என்னை வந்தேறி என்று சொல்ல முடியாது)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.