என்னை புகைப்படம் எடுத்த சிறந்த ஃபோட்டோகிராபர்…

சிலர் நேரில் பார்ப்பதைவிட படங்களில் நேர்த்தியாகத் தெரிவார்கள். இயற்கையாக அவர்களுக்கு அத்தகைய முகவடிவம் இருக்கும்.  இவர்களை படம் எடுக்க கைதேர்ந்த கலைஞர்கள் தேவையில்லை. யார் படம் எடுத்தாலும் அந்தப் படங்களில் இவர்கள் நேர்த்தியாகத் தெரிவார்கள். எனக்கு அப்படியான முகவடிவம் கிடையாது.  ஒளிப்படங்களில் மிகவும் தட்டையாகத் தெரிவேன்.

கோசிகன் (நான் எடுத்த ஒளிப்படம்)

கோசிகன் (நான் எடுத்த ஒளிப்படம்)

என்னை தட்டையாக அல்லாமல் ஓரளவு நேர்த்தியாக படம் எடுத்தது என் மகன் கோசிகன்தான். ஒன்றை ரசனையோடு அணுகும்போதுதான் அது நேர்த்தியாக வரும்.  அவன் என்னை மட்டுமல்ல, பார்க்கும் எல்லாவற்றையும் ரசனையோடு அணுக முயற்சிக்கிறான் என்று எண்ணுகிறேன்.

ஒளிப்பட தொகுப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது கோசிகன் எடுத்த இந்தப்படம் கிடைத்தது. அது குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நன்றி!

கோசிகன் எடுத்த படம்

கோசிகன் எடுத்த படம்

6 thoughts on “என்னை புகைப்படம் எடுத்த சிறந்த ஃபோட்டோகிராபர்…

  1. கோசிகன் எடுத்த படம் மிகவும் நன்று. எதிர்காலத்தில் சிறந்த புகைப்படக் கலைஞராக அவர் மிளிர்வதற்கான அறிகுறி இப்போதே தெரிகிறது. நீங்கள் எடுத்திருக்கும் கோசிகன் படமும் அருமை. கோசிகனுக்கு என் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவியுங்கள் நந்தினி!

  2. இந்த நந்தினியோடு நன்றாகப்பழகி, பங்கு கொண்டு பார்க்க ஆவலாகி விரும்பியஎனக்கு கோசிகன் பாட்டிக்காக எடுத்த படமாக இருக்கும். உன்னுடைய எல்லா கட்டுரைகளுமே பிரமிக்க வைக்கிறது. பழக்கம் என்னுடன் விட்டுப்போனால் என்ன நந்தினி மனதில் நிற்கிறாள். கோசிகனுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும். . அன்புடன்

    • அம்மா, உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களைப் பார்த்து நிறைய கற்றுகொண்டிருக்கிறேன். உங்களுடைய பின்னூட்டம் பார்த்து அளவிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.