வெள்ள நீரில் கலந்த சாதியம்: கடலூரில் நிவாரணம் மறுக்கப்படும் தலித் மக்கள்

தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கும் வெள்ளம் எல்லா மக்களையும் வர்க்கம், சாதி, மதம் தாண்டி இணைத்திருக்கிறது என்கிற செய்திகளை சமூக வலைத்தளங்களில் படித்துவருகிறோம். ஆனால் பெரும் துயரத்திலும் கடலூர் மக்கள் சாதியத்தை தூக்கி சுமப்பதாக தலித் உரிமைகளுக்கான தேசிய பிரச்சார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தில் பெய்த பெருமழையில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர்.  இந்த பாதிப்புகளில் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பது தலித் மக்களே என்கிறது இந்த அறிக்கை. National Campaign for Dalit Human Rights (NCDHR), Social awareness Society of Youth (SASY) இணைந்து கடலூரில் 20 கிராமங்களில் ஆய்வு நடத்தியது.

* இந்த கிராமங்களில் 90 சதவிகித தலித் மக்களின் குடிசைகள், வீடுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

* பயிர்களும் வெள்ளத்தால் வீணாகியிருக்கின்றன. கால்நடைகளை இழந்திருக்கிறார்கள்

*  ஆறுகளின் கரையோரங்களில் நீர்நிலைப்பகுதிகளில் தலித்துகளின் குடியிருப்புகள்(அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக) அமைந்திருந்ததும் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

* கடலூர் மாவட்டத்தில் தலித்துகளின் வசிப்பிடங்களில் பள்ளிகள், சமூகக் கூடங்கள் இல்லை. கடும் மழையிலும் வெள்ளத்திலும் திறந்த வெளிகளில் கழித்திருக்கிறார்கள். குறிப்பாக கொங்குராயன்பாளையம், அகரம், அம்பேத்கர் நகர் போன்ற கிராமங்களில்…

*  அரசு மீட்புப் பணிகளுக்கு கடலூரி உள்கிராமங்களுக்குச் செல்லவில்லை. சில்லான்குப்பம், காடுவெட்டி, வரகூர்பேட்டை, அன்னவல்லி போன்ற தலித்துகள் அதிகம் வசிக்கும் குக்கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்லவில்லை.

* வடக்குத்துறை, கொங்குராயன்பாளையம் போன்ற பகுதிகளில் தலித் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்கள். கொங்குராயன்பாளையத்தில் ‘மேல்சாதியினர்’ எனச் சொல்லிக் கொள்ளும் மக்கள், தலித் மக்களுக்கு பொது குடிநீர் உபயோகிக்க அனுமதிக்கவில்லை.

* அலமேலுமங்காபுரத்தில் அரசு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமுக்கு ‘மேல்சாதியினர்’ பிரச்சினை செய்வார்கள் என்று தலித்துகள் தங்களுடைய உடல்நலை பரிசோதித்துக் கொள்ள வரவில்லை.

*  அலமேலுமங்காபுரம், நாலாந்தீவு, வடக்குத்துறை போன்ற ஊர்களில் வெள்ளநீரோடு, கழிவு நீரும் கலந்து தேங்கியிருப்பதால் நோய்கள் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

TamiPost

 

Advertisements

3 thoughts on “வெள்ள நீரில் கலந்த சாதியம்: கடலூரில் நிவாரணம் மறுக்கப்படும் தலித் மக்கள்

  1. //தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கும் வெள்ளம் எல்லா மக்களையும் வர்க்கம், சாதி,மதம் தாண்டி இணைத்திருக்கிறது என்கிற செய்திகளை சமூக வலைத்தளங்களில் படித்துவருகிறோம்.//
    அப்படி தான் பரவலாக சொல்லபட்டது. வெள்ளம் அழிவால் கூட ஜாதி பார்ப்பதை மாற்ற முடியவில்லை (:

    • இது பற்றி நண்பரிடம் நான் பேசிய போது அவர் சொன்னார் வெளிநாட்டிற்கு வந்த பின்பு கூட, ஜாதி பார்க்கும் அளவுக்கு ஏற்ற தாழ்வு விரும்பும் நம்மக்களை வெள்ள அழிவு திருத்துமா!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.