ஸ்டாலினின் சமூக ஊடகத்தொடர்பு கேலியாகிறது ஏன்?

வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவிருக்கிற 30 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ள இளைஞர்களை கவரும் விதமாக இளைஞர் அதிக அளவில் நேரத்தை செலவிடும் சமூக ஊடகங்கள் மூலம் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிடுகிறன. இதில் அதிகம் கவனம் செலுத்தி வருவது பாமகவும் திமுகவுதான்.

அன்புமணியை முன்னிறுத்தி பாமக சமூக வலைத்தளங்களில் செய்யும் பிரச்சார உத்திகள் சமூக வலைத்தளங்களில் மீமிக்களாக உலவும். அதுபோலத்தான் திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் உள்பட பலர் அரசியல் வாதிகளை நெட்டிசன்கள் வருத்தெடுக்கிறார்கள்.

ஆனால், மு. க.ஸ்டாலினின் சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் பல நேரங்களில் மு.க. ஸ்டாலினின் பகிரத் தேவையில்லாத படங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ‘நமக்கு நாமே’ பயணத்திலிருந்து மு.க.ஸ்டாலினுடன் குறைந்தது நான்கு ஒளிபடக்காரர்கள் உடன் செல்கிறார்கள். எல்லா தலைவர்களும்தான் தங்களுடன் ஒளிப்படக் குழுவை அழைத்துச் செல்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் வலைத்தளங்களில் பகிரப்படும் பல படங்களில் ஸ்டாலினுடன் இந்தக் குழுவினரும் இருக்கும் படங்களும் இடம் பெற்றுவிடுகின்றன.

மீமிக்காரர்களுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும்கூட இது நல்ல அபிப்ராயத்தை எடுத்துச் சொல்லாது. சமீபத்தில் ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு படம், மோசமான சமூக ஊடக கையாளுதலுக்கு உதாரணம். அந்தப்படமும் அதுகுறித்து வந்த விமர்சனங்களும் இங்கே…

sta mk stalin twit

Advertisements

One thought on “ஸ்டாலினின் சமூக ஊடகத்தொடர்பு கேலியாகிறது ஏன்?

  1. இறங்கிவிட்ட இடத்தையாவது அழகு படுத்துங்கள் ஏறும் முயற்சி இப்போதைக்கு வேண்டாம் ஏனெனில் அரைவாசியைத் தாண்டிவிட்டனர் பலர்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.