ஏழு ஆறுகளின் பூமியில் ஆரியர் வருகை என்றொரு அத்தியாயம் வரலாற்றாசிரியர்.டி.டி கோசாம்பியின் ’இந்திய வரலாறு’ என்ற நூலில் உண்டு. ஆரியர்களுக்குத்தான், அவர்கள் முதலில் வருகை தந்த இடம், ஏழு ஆறுகள் பாயும் பூமியாக இருக்கிறது. அங்கிருந்து அவர்களுடைய வரலாறு தொடங்குகிறது என்கிறார் கோசாம்பி.
இந்நிலையில் ‘ஏழு நதிகளின் நாடு’ என தலைப்பில் ஒரு நூல் வருகிறது. அது எப்படி இந்திய வரலாறு ஆகும்? அதற்கு முன்பே வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்களின் வரலாறு ‘ஆப்பிரிக்க’ வரலாறில் இணையுமா?
இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூல் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாகப் படித்தேன். சுவாரஸ்யமான(வரலாற்றில் சுவாரஸ்யத்தின் தேவை என்ன? சுவாரஸ்யம் என்ற வார்த்தையிலேயே வரலாறு அழிக்கப்பட்டுவிடுகிறது) வரலாற்று நூல் என்று பலரும் பாராட்டுகிறார்கள். வாசிக்க வேண்டும்தான். ஆனால், ஏழு நதிகளின் நாடு என தலைப்பிட்டு இது இந்திய வரலாறு என சொல்லும்போது இதை வரலாற்று நூலாக வாசிப்பதற்கான சாத்தியங்கள் காணாமல் போய்விடுகின்றன. இதில் வரலாற்றை சரஸ்வதி நதியில் வேறு தேடுகிறாராம் நூலாசிரியர்.
Indian economist, bestselling writer சஞ்சீவ் கன்யால் எழுதிய ’ஏழு நதிகளின் நாடு’ சிறந்த வாசிப்பனுபவம் உள்ள நூலாக இருக்கலாம். ஆனால் அதை வரலாறு என்று சொல்லாதீர்கள். வரலாறு உங்களை மன்னிக்காது.
படிக்க தூண்டியது