பச்சைநிற பட்டாம் பூச்சி!

DSCN0146

இந்த பச்சை நிற பட்டாம் பூச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை. என் வீட்டு காக்கடாம் பூச் செடியில் ஒரு மழை நாளில் நீண்ட நேரமாக இது அமர்ந்திருந்தது. இலைகளின் நிறத்திலேயே இருந்தது அந்தப் பூச்சி. வெளிர் பச்சையில் ஆரம்பித்து அடர் பச்சை நிறத்தில் அதன் தொடர்புடைய எல்லா நிறங்களையும் சீராக பரவவிட்டதுபோல் உடல் இருந்தது. பட்டாம் பூச்சியை பார்த்தவுடனே சற்றே மிரட்சி ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதன் இறக்கைகளில் இருக்கும் கண்போன்ற அமைப்புதான் காரணம். இதைப்பற்றி அறிந்துகொள்ள முற்பட்டபோது இது ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் பொதுவாகக் காணப்படும் பட்டாம்பூச்சி இனம் Deilephila nerii என்பதை அறிந்தேன். வட மற்றும் தெற்கு ஐரோப்பாவிலும் இவை வாழ்கின்றன. இது கூட்டுப்புழுவாக இருக்கும்போது மணம் மிக்க மல்லிகை, நந்தியாவட்டை போன்ற செடிகளின் இலைகளை விரும்பி உண்ணும். நச்சு செடியான அரளியின் இலைகளை விரும்பி உண்ணுவதால் இதை Oleander Hawk-moth என்றும் சொல்கிறார்கள். யாருக்காவது தமிழ் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்.
ஆங்கிலத்தில் moth என வழங்கப்படுவதை தமிழில் பட்டாம்பூச்சி எனவும், butterfly  ஐ வண்ணத்துப்பூச்சி என சொல்வதுதான் சரியானது என்கிறார் சூழலியல் எழுத்தாளர் ச. முகமது அலி.

பின் இணைப்பு : இந்த பதிவைப் படித்தபின் முன்னோடி சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், இந்த  Deilephila nerii ஐ விட்டில் பூச்சி என்று வழங்குவார்கள் என்கிறார்.

சென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு

DSCN0914

சிறு வயதில் காகம் போல கருமையாக இருந்த ஒன்றைக் காட்டி இதுதான் குயில் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காகத்துக்கும் குயிலுக்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்ததில்லை. குயிலின் குக்கூ ஓசையை மட்டும் கேட்டதுண்டு. சென்னை வந்தபிறகும் மரங்களடந்த பகுதிகளில் குயிலோசையைக் கேட்டதுண்டு. ஆனால் குயிலைப் பார்த்ததில்லை. காட்டுயிர் எழுத்தாளர் முகமது அலி ஆண்குயில்தான் இனிமையான குக்கூ ஓசையை எழுப்பும், பெண் குயிலின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்காது. ஆனால் பொதுபுத்தியில் இனிமையாகப் பாடும் பெண் பாடகிகளுக்கு ‘சின்னக்குயில்’ என்று உவமை சொல்வார்கள் என்று எழுதியிருந்தார். கடந்த ஒரு மாதமாக நான் போகும் வழியெங்கும் குயில்களின் குக்கூ ஓசையை கேட்கிறேன். முதல்முதலாக பெண் குயில் ஒன்றை கோட்டூர்புரம் பகுதியில் பார்த்தேன். பழுப்பு நிறத்தில் ஆங்காங்கே வெள்ளைப் புள்ளிகளோடு ரொம்பவும் அழகாக இருந்தது. உருவத்தில் பெரிதாகவும் இருந்தது. ஆனால் படம் பிடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து எனக்கு குயிலை படம் பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

DSCN0912

குயில்கள் பெரும்பாலும் அடர்த்தியான கிளைகளைக் கொண்ட பெரிய மரங்களில்தான் அமர்ந்து கூவுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணாசாலையில், ஈகா திரையரங்கம் அருகே குயிலோசையைக் கேட்கிறேன். அவற்றை என்னிடம் இருக்கும் குறைந்த வசதிகள் கொண்ட புகைப்படக் கருவியில் தெளிவாக படம் பிடிப்பது சாத்தியமில்லாது. ஆனாலும் எப்போதாவது குயில்கள் என் புகைப்படக் கருவியின் விழித்திரைக்கு அருகில் வரும் என்று காத்திருக்கிறேன். இன்று காலை இரண்டு ஆண் குயில்களைப் பார்த்தேன். கண்கள் சிவப்பாகவும், மூக்கு வெளுத்த பச்சை நிறத்திலும் உடல் கருமையாக இருந்த அந்த இரண்டு குயில்களையும் ஓரளவு என் புகைப்படங்களில் பதிவாக்க முடிந்தது. சென்னை, கோட்டூர்புரத்தில் கிளைகள் அடர்ந்த அந்த தூங்கு மூஞ்சி மரத்தின் உச்சியில் இரண்டும் அமர்ந்திருந்தன. அருகில் ஒரு காக்கை வந்து அமர்ந்தது. இரண்டு குயில்களும் ஏதோ சொல்ல, அந்த காகம் அங்கிருந்து கிளம்பி விட்டது. நான் ஐந்து நிமிடங்கள் அவற்றைப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். வந்த சில நிமிடங்களில் இரண்டும் ஓசை எழுப்ப ஆரம்பித்தன. இது குயில்களின் இனப்பெருக்க காலம், துணை தேடி கூவுகின்றன அந்த இரண்டும்.

DSCN0915

கோடையின் வண்ணச்சிதறல் – புகைப்பட தொகுப்பு 2

கோடையின் வண்ணச்சிதறல் – புகைப்பட தொகுப்பு 2

DSCN0283

DSCN0287

DSCN0310

DSCN0317

DSCN0323

கோடையின் வண்ணச்சிதறல் – புகைப்பட தொகுப்பு

DSCN0105

DSCN0129

 

DSCN0190

??????????

DSCN0200

DSCN0202

சில பூக்கள், சில பறவைகள் – ஒரு புகைப்பட தொகுப்பு

சமீபத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் இவை…

விடியலில் ரோஜா...

விடியலில் ரோஜா…

கால்களிலும் முளைத்திருக்கும் இறகுகள்...

கால்களிலும் முளைத்திருக்கும் இறகுகள்…

கைவிரித்த நட்சத்திர பூ

கைவிரித்த நட்சத்திர பூ

வெளிர் வானத்தில் இரண்டு புறாக்கள்

வெளிர் வானத்தில் இரண்டு புறாக்கள்

சிவப்பு ரோஜா!

சிவப்பு ரோஜா!

அறுவடை முடித்த நாளில் எதைத் தேடுகிறது இந்தக் குருவி?

அறுவடை முடித்த நாளில் எதைத் தேடுகிறது இந்தக் குருவி?

 என் வீட்டு ரோஜா வண்ணங்களின் கலவையில்.

என் வீட்டு ரோஜா வண்ணங்களின் கலவையில்.

ஒரு மாலை நேர ஓய்வில் இந்த காகங்கள்...

ஒரு மாலை நேர ஓய்வில் இந்த காகங்கள்…