புனிதப்படுத்தப்படும் மரணம்!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில்  எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துபோனாலும் மரணம் அவனை புனிதப்படுத்தி சென்றுவிடுகிறது. மரணங்கள் இங்கே புனிதப்படுத்தும் சடங்காக நிலைகொண்டுள்ளன. மரணித்தவனின் நிலைப்பாடுகளை யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. மரணவீட்டின் அலறல்கள் மரணித்தவனின் இல்லாத குணாதிசயங்களை விதந்தோதுபவையாக இருக்கின்றன. தன்னை நம்பி வந்த பெண், பிள்ளைகளை நடுத்தெருவில் நிறுத்தியவனை நடு வீட்டில் வைத்து பூஜிக்கச் சொல்லும் கலாசாரம் நம்முடையது. பசிக்கும் பிள்ளைகளுக்கு பாலூட்டாத தாய் மரணத்திற்குப் பிறகு தெய்வத்திருவுரு ஆக்கப்படுவார். வரலாறு இப்படியாகத்தான் பல திருவுருக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எதையும் கேள்விக்குள்ளாக்காமல் ஏற்றுக்கொள்ளும்  நம் மூடத்தனம் மறையும்வரை இப்படியாக நாம் பல தெய்வத்திருவுருக்களை ஏற்று, வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்!