கருணாநிதியின் எகனாமிக் டைம்ஸ் பேட்டி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ‘எகானமிக் டைம்ஸ்’ இதழுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி பேட்டியளித்திருந்தார். இதன் தமிழ் வடிவம் இங்கே…

கேள்வி :- திராவிட இயக்கங்களில், திராவிட முன்னேற்றக் கழகம், மிகப் பழமையானதும், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதும், வலிமை மிக்கதுமான இயக்கமாகும். அது எதிர்காலத்தைச் சந்திப்பதற்கு ஏற்ற வண்ணம் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு வருகிறதா?

பதில் :- திராவிட இயக்கம் என்பது நூறாண்டைக் கடந்தது. அதன் வழித் தோன்றலான திராவிட முன்னேற்றக் கழகம் 66 ஆண்டுகளைக் கடந்து மேலும் வளர்ந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு அறிவிப்பும், செயல் திட்டமும், வருங்காலத் தலைமுறையை மனதிலே கொண்டு, எதிர்கால இளைஞர் சமுதாயம் பின்பற்றி வளர்வதற்கான வழிமுறைகளை வகுத்து அந்த நல்ல நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. எதிர்கால ஏற்றத்திற்கான செயல் திட்டங்கள் கழகத்தில் ஏராளமாக இருப்பதால் தான் இலட்சக்கணக்கான இளைஞர்கள் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாகவே கழகத்தின் இளைஞர் அணி வலிவும் பொலிவும் பெற்று விளங்குகிறது!

கேள்வி :- மத்தியில் உள்ள பா.ஜ.க. மாநிலங்களில் வேரூன்ற மேற்கொள்ளும் முயற்சிகளின் காரணமாக மாநிலக் கட்சிகளுக்கு அது அச்சுறுத்தலாக இருக்குமா?

பதில் :- மற்ற அரசியல் கட்சிகளுக்கு எப்படியோ; தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க., எந்நாளும் ஒரு அச்சுறுத்தலாக அமைவதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு. கழகம் ஆரம்பக் காலந்தொட்டு, ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகவே இருந்து வருகிறது. தமிழ்நாடு, தந்தை பெரியார் அவர்களாலும், அண்ணா அவர்களாலும் பெரும்பாடுபட்டுப் பண்படுத்தப்பட்ட தன்மான பூமி என்பதால், பா.ஜ.க.வின் அடிப்படைவாதக் கொள்கைகளால், தி.மு. கழகத்திற்கோ, தமிழகத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.

modi

கேள்வி :- இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற இந்த 16 மாதங்களில், ஏராளமாக பயணம் செய்திருக்கிறார். நிறைய பேசியிருக்கிறார். நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையிலும் பா.ஜ.க. விலும் உள்ளவர்கள், அவருடைய பேச்சைக் கேட்டு நடக்கிறார்களா என்பதே சந்தேகம் தான்! ஏனென்றால் அவர்களின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அப்படித் தான் உள்ளன.

கேள்வி :- 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை மோடி காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்களா?

பதில் :- பா.ஜ.க., 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது நாட்டு மக்களிடம் சொன்ன உறுதி மொழிகளை நிறைவேற்றுவதை விட, சொல்லாதவற்றை, அதாவது தேவையில்லாதவற்றை ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு அதிகமாகச் செய்து வருகிறது.

கேள்வி :- காங்கிரஸ் கட்சி எதிர்க் கட்சியாகச் செயல்பட்டு வருவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் அவர்கள் செய்து வருவது நியாயப்படுத்தப்படக் கூடியதா?

பதில் :- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க் கட்சியாக இருந்து பணியாற்றுவது என்பது புதியதல்ல. கடந்த காலங்களிலும் எதிர்க் கட்சியாக இருந்திருக்கிறது. ஜனநாயகத்தில் ஓர் எதிர்க் கட்சியின் செயல்பாடு, வினை – எதிர்வினைத் (Action – Reaction) தத்துவத்தையொட்டி, பெருமளவுக்கு ஆளுங்கட்சியின் அணுகுமுறையைப் பொருத்தே அமைகிறது. பா.ஜ.க. அரசின் பழி வாங்கும் மனோபாவத்திற்குப் பதிலளித்திடும் வகையில் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சியின் நடைமுறைகள் வகுக்கப்பட்டுச் செயல் படுத்தப்படுவதாகவே கருதுகிறேன்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்திடும் வகையில் காங்கிரஸ் கட்சி பல நிகழ்வுகளில் நடந்து கொள்வதை நியாயப்படுத்திட முடியுமா அல்லது முடியாதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விட, பா.ஜ.க. எதிர்க் கட்சியாக இருந்த போது, நாடாளுமன்றம் எவ்விதத் தடங்கலுமின்றி நடக்க வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டி ஒத்துழைத்தது என்பதை எண்ணிப் பார்த்தால், இந்திய அரசியல் எந்தத் திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்வது, ஜனநாயகத்தையே முடமாக்குவதற்கு ஒப்பானதாகும்.

ராகுல்காந்தி தலைமை ஏற்பாரா?
ராகுல்காந்தி தலைமை ஏற்பாரா?

கேள்வி :- ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை முன்னின்று நடத்தி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ஆவதற்குரிய தகுதி படைத்தவர் தானா?

பதில் :- இது உட்கட்சி விவகாரம்; எனினும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமையினை ஏற்று நடத்திட முடியுமா என்பது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி . இது போன்ற கேள்வி ராஜீவ் காந்தி தலைமைப் பொறுப்பினை ஏற்கவிருந்த நேரத்திலும் எழுப்பப்பட்டது. ராகுல் காந்தி தலைமை யேற்று கட்சியை நடத்துவதற்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும், அனுபவத்தையும் பெற்றிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி கருதுவதால் தான் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள். வெற்றிடம் எப்போதும் வெற்றிடமாக இருந்து விடுவதில்லை; வெற்றிடம் ஏற்பட்ட உடனேயே நிரப்பப் பட்டு விடுகிறது என்ற இயற்கை விதியினை நினைவில் கொள்ள வேண்டும். ராகுல் காந்தியைப் பற்றி எழுப்பப்படும் கேள்வி ஏன் பா.ஜ.க. தலைமை மாற்றத்தைப் பற்றி எழுப்பப்படவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டு மென்று விரும்புகிறேன்.

கேள்வி :- அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

பதில் :- ஜனநாயக விரோத, மக்கள் விரோத, ஊழல் நிறைந்த, செயல் திறனற்ற அ.தி.மு.க. வுக்கு எதிரான ஒவ்வொரு நாளும் பல்கிப் பெருகி வரும் வாக்குகள் சிதறி விடக் கூடாது என்பது ஒரு நல்ல நோக்கத்தின்பால் பட்டது தான். எனினும் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்தால் தான், அதிமுக வைத் தோற்கடிக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த அளவுக்கு அ.தி.மு.க. வின் பலமும் செல்வாக்கும் இமயம் போன்றதில்லை. 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் 27 சதவிகித வாக்குகளையும், 2006 தேர்தலில் 33 சதவிகித வாக்குகளையும் மட்டுமே பெற்று தோல்வியடைந்த கட்சி தான் அ.தி.மு.க. என்பதையும்; 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் 53 சதவிகித வாக்கு களையும் 2006 தேர்தலில் 45 சதவிகித வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கட்சி தான் தி.மு.க. என்பதையும்; மறந்து விடக் கூடாது.

ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள். நால்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தமடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாதென கூறி விட்டார்கள். ஒரு நாள் அவர்களுக்குப் பாடம் புகட்ட ஒரு போட்டியை வைத்தார். நால்வரையும் ஆளுக்கொரு கொம்பு கொண்டு வரச் சொன்னார். அவர்களும் கொண்டு வந்தார்கள். மூத்த மகனை அழைத்து நான்கு கொம்புகளையும் ஒன்றாகக் கட்டச் சொன்னார். பிறகு ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, கட்டிய அந்தக் கொம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை. பிறகு அந்தக் கட்டுகளை அவிழ்த்து, அந்தக் கொம்புகளை ஒவ்வொன்றாகக் கொடுத்து உடைக்கச் சொன்னார். அனைவரும் சுலபமாக உடைத்தார்கள். ஒற்றுமையோடு பலம் என்னவென்று இப்போது புரிந்திருக்கிறதா என்று கேட்டார். அவர்களும் புரிகிறது என்று கூறினார்கள். இந்தக் கதையை தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகள் புரிந்து கொண்டால் சரி!

மக்கள் நலக் கூட்டணி பற்றி...
மக்கள் நலக் கூட்டணி பற்றி…

கேள்வி :- பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகள் போன்ற சிறிய கட்சிகள் முதல் முறையாக தாங்கள் அ.தி.மு.க. வுக்கும், தி.மு.க. வுக்கும் எதிரானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே; அதைத் தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :- இப்போது சொல்வதை வைத்து எதையும் அறுதியிட்டு உறுதியாகக் கூறி விட முடியாது. அதைத் தான் “ஆரம்ப சூரத்தனம்”“ என்று அண்ணா சொன்னார். தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு கட்சிக்கும் நிலைமை தெளிவாகும்; மாற்றங்கள் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள்! நீங்களே கேள்வியில் சில கட்சிகளைக் குறிப்பிட்டு சிறிய கட்சிகள் என்று கேட்டிருக்கிறீர்கள். சிறிய கட்சிகளுக்கும், வளர்ந்து பெரிய கட்சியாக ஆக வேண்டுமென்ற எண்ணம் இருப்பது இயல்புதானே?

கேள்வி :- தமிழகத்திலே உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. வுக்கு தாங்கள் தான் எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க. வின் தலைவி வீட்டுக்கே நேராகச் சென்று உணவருந்தினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :- “வெளிப்படைத் தன்மை” என்று சொல்லிக் கொண்டே திரை மறைவு காரியங்களில் திறமையைக் காட்டுகிறது பா.ஜ.க. மர்மங்கள் நிறைந்தது அ.தி.மு.க. இந்த நிலையில் நான் எப்படி கருத்துச் சொல்ல முடியும்? இவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்களா? அல்லது அவர்கள் இவர்களை ஏமாற்றுகிறார்களா? என்பதைக் காலம் தான் கணித்துக் கூறும்.

ஸ்டாலின் வழிநடத்துவார்
ஸ்டாலின் வழிநடத்துவார்

கேள்வி :- அண்மைக் காலத்தில் மு.க. ஸ்டாலின் நடத்தி வரும் பேரணி களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அந்தப் பேரணிகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தமிழகத்தின் எதிர் காலத் தலைவராக மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார் என்று நினைக்கிறீர்களா?

பதில் :- கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கும் “நமக்கு நாமே”“ விடியல் மீட்புப் பயணம் தமிழக மக்களின் பேராதரவோடும், பாசம் மிகுந்த வரவேற்போடும், மாற்றாரும் மருளும் வகையில், மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு ஸ்டாலின் அன்றாடம் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதையெல்லாம் விரிவாகக் கூறி வருகிறார். “தி.மு. கழகத்தின் எதிர்காலம்”“ என்று நான் ஏற்கனவே கூறியதை அட்சரம் பிசகாமல் மெய்ப்பிக்கும் வகையில் தான் மக்களின் வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

கேள்வி :- கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமித்து அறிவிப்பதை எது தடுக்கிறது?

பதில் :- கழகம் நியமனக் கட்சியல்ல; மிகப் பெரிய ஜனநாயக இயக்கம்; பெரும்பான்மை விருப்பப்படியே இங்கு எல்லாம் நடக்கும்; என்று பல முறை சொல்லியாகி விட்டது. கழகத்தின் பொதுக் குழுவும், செயற்குழுவும் கூடி மேற்கொள்ள வேண்டிய முடிவினை, நான் ஒருவன் மட்டும் தனித்து எடுத்து அறிவித்து விட முடியாது. நான் அறிவிக்காமலேயே கழகத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி மிக்கவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை தான்.

2 ஜி வழக்கு தேர்தலில் தாக்கம் செலுத்துமா?
2 ஜி வழக்கு தேர்தலில் தாக்கம் செலுத்துமா?

கேள்வி :- 2 ஜி அலைக்கற்றை விவகாரம் 2016 பொதுத் தேர்தலில் தி.மு.க. வுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா?

கலைஞர் :- 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கருத்தியலான இழப்பு (Notional Loss) குறித்து தனி நீதி மன்றம் விசாரித்து வருகிறது. இது 2016 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நான் நம்புகிறேன்.

கேள்வி :-2016 பொதுத் தேர்தலில் தமிழகத் தேர்தலின் மிக முக்கிய மான பிரச்சினையாக தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில் :- தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வெறுத்து ஒதுக்கும் செயல் திறனற்ற அதிமுக ஆட்சி தொடர வேண்டுமா? செயல் திறனை ஏற்கனவே ஐந்து முறை நிரூபித்துக் காட்டியிருக்கும் தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்திட வேண்டுமா? என்பது தான் 2016 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் முக்கியமான பிரச்சினையாகும்.

கேள்வி:- வரும் தேர்தலில் ஊழல் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கக் கூடும். இந்த நிலையில் தி.மு.க. வின் இரண்டாம் நிலை தலைவர்கள் நீதி மன்ற வழக்குகளைச் சந்தித்து வரும் சூழ்நிலையில் – ஊழலுக்கெதிராக தாங்கள் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள இயலுமா?

பதில் :- அ.தி.மு.க. வின் தலைவியே வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதி மன்றத்திலே சந்தித்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்!

திராவிட முன்னேற்றக் கழகம் குடும்பச் சொத்தானது எப்படி?

மு.க. ஸ்டாலின் கட்சிக்காக சிறைச் சென்றார், உழைத்தார் என குடும்பத்தின் தலைவர் சொல்கிறார். அழகிரியின் கண்ணோட்டத்தில் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் சிறைச் சென்றாரா? என்கிற கேள்வியை முன்வைக்கலாம். தலைவரின் கூற்றுப்படி சிறைச் சென்றவர்தான் முன்னிறுத்தப்பட வேண்டும் என்றால் பல முறை சிறைச் சென்ற க. அன்பழகனை முன்னிறுத்துவார்களா? ஏன் அவரை துணை முதல்வராகக் கூட முன்னிறுத்தவில்லை?

இப்போது.காமில் முழுக் கட்டுரை…

“பெண்கள் சுயஉதவிக்குழு பணம் வட்டித்தொழில் செய்யத்தான் பயன்படுகிறது!”

premalatha-vijaykant1

அரசியல்வாதிகளுடன் பேசுவதே ஒருவகையில் காமெடியான அனுபவம்தான். நிசர்சனத்தை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தபோதும்,அதை மறைத்து வெளி அலங்காரம் பூசிக்கொண்டு நடிப்பில் கைத்தேர்ந்தவர்கள். சில சமயம் அவர்களை அறியாமலே உண்மையான முகத்தைக் காட்டிவிடுவார்கள். பிரேமலதாவும் நடித்தார். வெகுஜன இதழ்களில் எழுதும் அந்த நடிப்பையும் உண்மையென சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனாலும் மற்ற அரசியல்வாதிகள் செய்யும் அரசியலைவிட, தேமுதிக-வின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன் பிரேமலதாவுடன் நடந்த சந்திப்பு. நிறைய பேசினார். நிறைய எழுதியதை உதவி ஆசிரியர் எடிட் செய்யப்பட்டு வெளியானது இந்த பேட்டி. அவர் பேசிய ஒரு முக்கியமான விஷயம் பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் பற்றியது. பெண்களின் சுய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டது என்று சொல்லிக்கொண்டு அரசியல்வாதிகள் பெண்களை வட்டித்தொழிலுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதுகுறித்து நிறையவே பேச வேண்டியிருக்கிறது… தேர்தல் அரசியல் சூடு பிடித்திருக்கும் வேளையில் தேமுதிக-வின் அரசியல் நிலைப்பாட்டை கணிக்கும் ஆர்வத்தோடு பிரேமலதா விஜயகாந்தின் பேட்டியை மறுபிரசுரம் செய்கிறேன். நண்பர்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

பிரேமலதாவிஜயகாந்த்சமீபத்தில், திருச்சியில்நடந்ததே.மு.தி.. மகளிர்மாநாட்டைமுன்னின்றுநடத்தியதிலிருந்து, அரசியல்வட்டாரத்தில்ஹாட்டாப்பிக்ஆகியிருக்கிறார். கடைசிகேள்விவரைஎந்தவிதப்பதற்றமோமுகச்சுளிப்போஇல்லாமல், பக்குவப்பட்டஓர்அரசியல்வாதிபோன்றுமிகத்தெளிவாகவும்நிதானமாகவும்பதில்சொல்கிறார்.

”எப்படி இருந்தது மகளிர் மாநாடு?”

”சூப்பர் ஹிட்! மாநாடு அறிவித்து இருபதே நாட்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு வரலாறுபடைத்து இருக்கிறார்கள். இதற்கு முன் வேறு எந்தக் கட்சியிலும் இவ்வளவு பெண்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை. பணம் தரவில்லை; பிரியாணி போடவில்லை. ‘குடும்பத்தோடு கலந்துக்கணும்’ என்று கேப்டன் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, கூட்டத்துக்கு வந்து கலந்துகொண்டு தங்களுடைய உண்மையான பாசத்தை நிரூபித்துவிட்டார்கள் எங்கள் பெண்கள்!”

”உங்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் இந்த மகளிர் மாநாடு நடத்தப்பட்டதா?”

”எந்தக் கட்சியிலும் இல்லாத பல பாஸிட்டிவான விஷயங்கள் எங்கள் கட்சியில் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கமறுக்கிறவர்கள்தான் ‘மனைவி, மச்சினன்’ என்று தேவை இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்த லில் கேப்டன் நின்ற தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே என் சகோதரர் நின்றார். மற்ற அனைத்துத் தொகுதிகளும் கேப்டனுக்கு ரசிகர்களாக இருந்து கட்சியில் இணைந்தவர்களுக்கும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. அவர்கள் யாரும் ரத்த உறவு உள்ளவர்கள் இல்லை.

மாநாடுஅறிவிப்புசெய்தபோது, ‘பிரேமலதாவுக்குக்கட்சியில்முக்கியமானபதவிதரப்போகிறார்கள். அதைஅறிவிக்கத்தான்இந்தமாநாடுஎன்றார்கள். இதோ, மாநாடுநடந்துஒருவாரம்ஆகிவிட்டது. இதுவரைஎனக்குஎந்தப்பதவியும்கொடுக்கப்படவில்லை. நான்தே.மு.தி.கவின்அடிப்படைஉறுப்பினர் மட்டுமே! தலைவரின்மனைவிஎன்றவகையில்என்னை மகளிர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்கவைத்தார்கள். அவ்வளவுதான்!

கட்சிப்பதவிகளுக்கு வரும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் ஆர்வமோ எனக்கு இல்லை. இனிமேலும் வரப்போவது இல்லை. புரட்சிக்கலைஞரின் மனைவி என்பதே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. தொண்டர்கள் என்னை அன்போடுஅண்ணிஎன்றுஅழைப்பதேஎனக்குக்கிடைத்தமிகப்பெரியபட்டம்!”

”சமீபகாலமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சுய உதவிக் குழு பெண்களுக்கு நிறைய நலத் திட்டங்கள் வழங்குவதைப் பார்த்துதான், பெண்களை ஈர்க்கும் வகையில் உங்கள் மகளிர் மாநாட்டிலும் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?”

”எங்கள் தலைவர் பிறரைப் பார்த்து உதவி செய்யக்கூடியவர் அல்ல; உதவி செய்வது என்பது அவருடைய பிறவிக் குணம். நடிக்க வந்து, இந்த 30 வருடங்களாக ஏழை, எளியவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் மூலமாக நிறைய உதவிகள் செய்துகொண்டு இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் கொடுத்து வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக, ஜானகி அம்மாள் உயிருடன் இருந்தபோதிலிருந்தே இதைச் செய்து வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு இப்போதுதான் உதவி செய்ய மனசு வந்திருக்கிறது! அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஏதோ தாங்கள்தான் பெண்கள் சுய உதவிக் குழுக்களை எல்லாம் வளர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள். உண்மையில், சுய உதவிக் குழுக்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. பல கிராமங்களில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு, கிடைக்கும் பணத்தை வைத்து என்ன பொருளைத் தயாரிப்பது, அதை எப்படி விற்பது என்று எதுவுமே தெரிய வில்லை. கிடைத்த பணத்தை வட்டிக்கு விடுவதுதான் நடக்கிறது. சுய உதவிக் குழுக்களில் உள்ள பல பெண்கள் இதை என்னிடமே தெரிவித்தார்கள். இந்த விஷயங்கள் எங்கள் காதுக்கு வந்த பிறகுதான், இவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன் முதல் கட்டம்தான், தலைவர் தன் சொந்தப் பணத்திலிருந்து 50 லட்ச ரூபாயை சுய உதவிக் குழுப் பெண்களுக்கு வழங்கியது. விருத்தாசலம் தொகுதியில் எம்.எல்.ஏ. நிதி முழுவதையும் பயன்படுத்தியது போக, தன் சொந்தப் பணத்தில் இலவச கம்ப்யூட்டர் மையங்களையும், தண்ணீர் டேங்க்குகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர். அரசுப் பணத்தை எடுத்து யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், தன் சொந்தப் பணத்தை எடுத்துக்கொடுக்கும் மனசு எத்தனை பேருக்கு இருக்கிறது? மக்களுக்கு யார் நல்லது செய்தாலும், அதை எங்கள் தலைவரும் எங்கள் கட்சியும் நிச்சயம் பாராட்டுவோம். ஆனால், அரசு திட்டங்கள் எல்லாம் இங்கே அடிக்கல் நாட்டு விழாவோடு முடிந்துவிடுகின்றனவே?”

”பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடே இன்னும் எட்டாக் கனியாக இருக்கும்போது, உங்கள் தலைவரோ ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 50 சதவிகித இடஒதுக்கீடு தருவோம்’ என்கி றார். இது சாத்தியமா?”

”கட்சி ஆரம்பித்து நடந்த முதல் தேர்தலிலேயே 33 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெண்களுக்குக் கொடுத்து, வேட்பாளர்களாக நிறுத்தியது எங்கள் கட்சி மட்டும்தான்! பெண்களுக்குத் திறமை போதவில்லை என்று சொல்லப்படுவதால்தானே 33 சதவிகித இடஒதுக்கீடு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் முதல் பணியே எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதுதான். கல்வி கிடைத்தால் திறமை தானாக வந்துவிடும். அப்போது 33 சதவிகிதம் மட்டுமல்ல, 50 சதவிகிதமும் சாத்தியம்தான்!”

”உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வேறு என்னவெல்லாம் நலத் திட்டங்கள் கொண்டுவருவீர்கள்?”

”மக்கள் தொகையில் பெண்கள், ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள். தேர்தலில் ஆண்களைவிட அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள்கூடத் தரப்படுவது இல்லை. வீடு, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் பெண்கள். தேர்தலில் மட்டுமல்லாது, மற்ற எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம். தங்கள் காலில் நிற்க ஆரம்பித்தாலே, தடைகளை எதிர்கொள்ளும் பலம் பெண்களுக்கு வந்துவிடும். அடுத்து, மிக முக்கியமாகத் தீர்க்க வேண்டிய பிரச்னை வரதட்சணைக் கொடுமை! வரதட்சணை வரவாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டால்தான், எந்த ஆணும் எங்கள் கட்சியில் சேர முடியும். எங்கள் தலைவரும் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, வரதட்சணை என்பதே இல்லாதபடிக்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவோம். இதுவரைகண்டுகொள்ளப்படாதபழங்குடி, நரிக்குறவர்இனப்பெண்கள், திருநங்கைகள்எனஎல்லோரையும்உயர்த்தும்திட்டங்களைச்செயல்படுத்துவோம்!”

”பொறியியல் கல்லூரியை நிர்வகிக்கிறீர்கள்; தவறாமல் கட்சிக் கூட்டங்க ளுக்குச் செல்கிறீர்கள்; குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும்இருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

”ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாளக்கூடிய திறமை என்னைப் போல எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பிரித்து வேலை செய்தால், இன்னும்கூட நிறையச் செய்ய முடியும்!”

26/03/08