பேராசிரியர் சாய்பாபா அவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டன் இந்திய தூதரகத்தின் முன்னால் போராட்டம்!

டில்லி பல்கலைக்கழக பேராசிரியரும் மக்கள் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளருமான G.N. சாய்பாபா அவர்கள் ரகசியமாக சாதாரண உடையில் வந்திருந்த இந்திய போலீசால் கடந்த வருடம் மே மாதம் 9 ம் திகதி கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்’ (UAPA), கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மத்திய சிறையில்ஒரு இருண்ட தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சக்கர நாற்க்காலியில் இயங்குகின்ற உடல் குறைபாடு உடைய ஒருவர். சிறையில் அவரது உடல் நலம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டு வருகின்றது. கலாநிதி G.N. சாய்பாபா அவர்கள் மக்கள் ஜனநாயக உரிமை கழகத்தின் முன்னணி செயற்பாட்டளரும்; ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் மலை பிரதேசங்களில் உள்ள கனிமங்களை ஏகாதிபத்தியங்கள் கொள்ளை இடுவதற்க்காக “பச்சை வேட்டை” என்ற பெயரில் அமெரிக்க அரசு ஆப்கானிஸ்த்தானிலும். ஈராக்க்கிலும் குவித்துள்ள ராணுவத்திற்கும் அதிகமான எண்ணிக்கையான ஆயுத துணைப்படைகளை அனுப்பி இந்த மலைப்பிரதேசங்களில் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து வருகின்ற “ஆப்பிரேசன் கிறீன் கன்றிற்கு (Operation Green Hunt)” எதிராக தொடர்ச்சியான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்ட விரோதமாக கடத்தி செல்லப்பட்டு போலிக் குற்றச்சாட்டடில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் சாயிபாபா அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, லண்டனில் உள்ள இந்திய தூதராலயத்தின் முன்னால் எதிர்வரும் 28ம் திகதி ஞாயிறு பகல் 1 மணி முதல் மறியல் போராட்டம் நிகழவுள்ளது. இதனை இந்திய தொழிலாள் சங்கம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து ஒழுங்கமைத்துள்ளது.

Release Delhi University Professor, Dr GN Saibaba from Prison!

Join the picket at the High Commission of India, Aldwych, London, WC2B 4NA

From 1pm on 28th June 2015

Dr GN Saibaba, a professor of Delhi University and a versatile democratic rights champion was clandestinely abducted on 9th May 14 by plain-clothes Indian policemen. Since then, charged under the draconian anti-terror law the ‘Unlawful activities Prevention Act’ (UAPA), he has been kept under solitary confinement in a dark cell of Nagpur Central Prison in the Indian State of Maharashtra.

Dr Saibaba, who is wheelchair bound with 90% disability, has been in the forefront of democratic rights movements across the Indian subcontinent. He campaigned tirelessly against ‘Operation Green Hunt’ – the Indian State’s war on the poorest of the poor of India, such as Dalits, Apasis and peasants of Central and Eastern India, who are struggling to safeguard their lands, forests and rivers from being grabbed by the mighty and powerful multi-national corporations – both foreign and Indian – in the name of ‘development’. For questioning the model of this so called ‘development’, Dr Saibaba is incarcerated. Expression of one’s views on political and socio-economic issues is not a crime but a very basic democratic right granted by the Indian Constitution to all its citizens. Perhaps Dr Saibaba’s only “crime” is that he stood in solidarity with the sons and daughters of the soil, who are on the verge of extinction, thanks to the corporate assault on their lives and livelihood.

Dr Saibaba suffers from a heart ailment and degeneration of the vertepae for which he needs constant expert medical attention. After his incarceration, his health has seriously deteriorated in the prison. The Indian State has ensured that Dr Saibaba’s bail application was rejected thrice. The trial has not started even after a year, and the authorities are denying him the necessary medical attention, which suggests that the Indian State is slowly letting Dr GN Saibaba’s health deteriorate to point of no return. Imprisoning a 90% disabled violates the provisions of the Code of Criminal Procedure, the Persons with Disabilities Act, and the UN Conventions. This is just a glaring example of a complete travesty of justice which happens far too often in the Indian subcontinent. There are 300,000 prisoners waiting for trial in the Indian jails,