மன்னிப்பு கோருகிறேன்…

நட்சத்திர பதிவராக குறைந்தபட்சம் தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் திட்டமிட்டிருந்தேன். புறச்சூழல் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாகக்கூடிக்கொண்டே இருக்கின்றன. நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இந்த நேரத்தில்தான் வீட்டுக்கு வண்ணம் பூச தோன்றியிருக்கிறது. குப்பைகளுக்கு நடுவே வாழ்வதுபோல இருக்கிறது இரண்டு வாரங்களாக. வீட்டில் உள்ள நாங்கள் சீக்காலிகளாகியும் உரிமையாளர் மனமிறங்கி வேலைகளை தூரிதப்படுத்தாமல் இருக்கிறார். நடுவே தோழியின் திருமணத்திற்காக சுற்றியது… எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களாக இணைய இணைப்பு தூண்டிக்கப்பட்டிருக்கிறது.நாளைக்காவது பிரச்சினையை சரிசெய்து விடுவார்கள் என நினைத்து,இப்போது இன்டர் நெட் சென்டரிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து புதிய பதிவுகளை எதிர்பார்த்திருந்த, எதிர்பார்க்கும் நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

9 thoughts on “மன்னிப்பு கோருகிறேன்…

  1. நீங்கள் உங்களுடைய இலங்கைத்தமிழர் (ஈழத்தமிழரைச் சொல்கிறீர்களோ?) பற்றிய இடுகையிலே பின்னூட்டத்தினை அனுமதிப்பதாகத் தெரியவில்லை.

    சி. புஸ்பராஜா, அ. மார்க்ஸ். ஷோபா சக்தி இவர்களைமட்டும் தேர்ந்தெடுத்து உசாத்துணை தரும் உங்களைப் போன்றவர்களிடம் இப்படியான செயற்பாட்டினை எதிர்பார்க்கவேண்டியதுதான்.

    நீங்கள் சுட்டியவர்களின் சாகசங்கள் பற்றி உங்களைவிட அதிகம் அறிந்தவர்கள் என்ற அளவிலே நாங்கள் பட்டியலிடலாம். என்ன செய்வீர்கள்? புலி ஆதரவாளர்கள் என்று ஓரங்கட்டிப் பட்டியலிடுவீர்கள். தமிழ்ச்செல்வன், மாதவராஜ் போன்ற பல பொய்யுடமைவாதிகளைப் பார்த்தாகிவிட்டது. எல்லோருக்கும் தமக்குச் சிக்கல் வராதவரைக்கும் வசதிக்குப் பொதுவுடமையும் மனிதாபிமானமும் தேவைப்படுகிறது. இவ்வகையிலே நடைமுறைக்குத் தப்பித்துக்கொண்டு, சுற்றியிருப்பவர்களிடையே பெரிய மனிதாபிமானப்போர்வார்ப்புண்ணாக்கு என்று பெயரெடுப்பதற்கு இப்படியான ‘இலங்கைத்தமிழர்கள்’ (ஸ்ரீலங்கா தமிழர்களோ?) பற்றிய பதிவுகள் சிலருக்கு அவசியமே.

    இன்னமும் எழுதலாம். எதற்கு? அலுத்துவிட்டது. சோனியா அம்மையாருக்கும் நந்தினி அம்மையாருக்கும் பெரிய வேறுபாடில்லை; இருவருக்கும் ‘மனிதாபிமானமும்’ ‘விலங்குப்பண்பெதிர்ப்பும்’ பொங்கி, பொங்கற்பானையிலிருந்து வழிந்தோடுகிறது.

    எதற்கும் அ. மார்க்ஸ் பற்றி திரேதா(?) எழூதி கீற்றிலே வந்த கட்டுரையையும் படித்துவிடுங்களே? இந்தியப்பத்திரிகையாளர்களைப் பற்றி எமக்குப் பெரிதும் மதிப்பில்லை. அதனாலே, இத்தோடு நிறுத்திவிடுகிறோம்.

    இப்பின்னூட்டம் அனுமதிக்கப்படுமென்ற நம்பிக்கையில்லை. ஆனால், பதிவுலகிலே இதனைப் பார்வைக்குக் கொண்டு செல்வது அத்துணை கடினமில்லை என்பதை உணர்வீர்களென்று நிச்சயமாக நம்புகிறோம்.

  2. பரவாயில்லை. கிடைக்கும் நேரத்தில் காகிதத்தி எழுதி வையுங்கள். இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள் எங்களுக்குப் படிக்கக் கிடைக்கும்.

  3. சகோதரி நந்தினிக்கு

    “இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை”
    என்ற கட்டுரையில் உள்ள சில வரிகள் எனக்கான பதில் என எண்ணத்தோன்றியது.
    முதலில்
    ‘தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழ்ந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம்’
    கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. யாரும் வரையறுத்து விடமுடியாதவை.ஊடகப்பணியில் பணியாற்றியவன் என்ற ரீதியில் நன்கு பரிச்சயமுண்டு. உறவிழப்புக்களின் மத்தியில் தேசத்தின் நெருக்கடியான சுழலில் இருக்கும் போது உங்கள் பதிவை பார்க்க நேர்ந்தது ‘கோபம் கொப்பளித்தது'(கவனிக்கவும் கண்களில்) என்னை மீறி வார்த்தைகள் பதிவாகிவிட்டன.
    ‘என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்லஇ அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன்’

    தங்களது ஆதங்கத்துக்கும் அக்கறைக்கும் நன்றி இருப்பினும் சில தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களையும் காரணங்களையும்(நீங்கள் சோபாசக்தியின் விசிறியாக இருக்கலாம் ) முன்வைத்து தங்களது எழுத்துக்களை மழுங்கடிக்காதீர்கள்.
    தங்களது எழுத்துக்கள் சிலவற்றை எனது நிலையிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பரந்துபட்ட கருத்துக்களை (அவை எதிர் மறையாயிருப்பினும்) ஏற்கும் மனப்பக்குவம் உள்ளது.
    அடுத்த சண்டைக்கு நான் வரவில்லையென்றால் எனக்கொரு கவிதை எழுதுங்கள்……………………………….
    உங்கள் சமூக அக்கறை உணர்வு. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  4. ‘சாகச மனநிலை’ கட்டுரை வலைப்பூவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதா? அழுத்தினால் அந்தப் பக்கத்தைச் சென்றடைய முடியவில்லை என்று வருகிறது. கட்டுரையைப் படிக்காவிட்டாலும் பின்னூட்டங்களிலிருந்து அதன் சாராம்சத்தை அறியமுடிகிறது. வர்மன், yam சொல்லியிருப்பவை ஏற்கத்தக்கவையாக இருக்கின்றன.

    “தங்களது ஆதங்கத்துக்கும் அக்கறைக்கும் நன்றி இருப்பினும் சில தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களையும் காரணங்களையும்(நீங்கள் சோபாசக்தியின் விசிறியாக இருக்கலாம் ) முன்வைத்து தங்களது எழுத்துக்களை மழுங்கடிக்காதீர்கள்.”

    என்பதை வழிமொழிகிறேன்.

  5. //நட்சத்திர பதிவராக குறைந்தபட்சம் தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் திட்டமிட்டிருந்தேன். புறச்சூழல் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாகக்கூடிக்கொண்டே இருக்கின்றன. நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இந்த நேரத்தில்தான் வீட்டுக்கு வண்ணம் பூச தோன்றியிருக்கிறது. குப்பைகளுக்கு நடுவே வாழ்வதுபோல இருக்கிறது இரண்டு வாரங்களாக. வீட்டில் உள்ள நாங்கள் சீக்காலிகளாகியும் உரிமையாளர் மனமிறங்கி வேலைகளை தூரிதப்படுத்தாமல் இருக்கிறார். நடுவே தோழியின் திருமணத்திற்காக சுற்றியது… எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களாக இணைய இணைப்பு தூண்டிக்கப்பட்டிருக்கிறது.நாளைக்காவது பிரச்சினையை சரிசெய்து விடுவார்கள் என நினைத்து,இப்போது இன்டர் நெட் சென்டரிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து புதிய பதிவுகளை எதிர்பார்த்திருந்த, எதிர்பார்க்கும் நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.//

    த்சொ.. த்சொ.. வாலி படத்தில் விவேக்கிடம் ஒருவர் கக்குவான், ஹார்ட் ப்ராப்ளம், கை கால் விழுந்திடிச்சின்னி ஒவ்வொண்ணா சொன்னா மாதிரி இருக்கு 🙂

    நக்கலடிக்கிறேன் என்று கோபித்துக் கொள்ள வேண்டாம். உம்மணாம்மூஞ்சியான உங்களை சிரிக்க வைக்க நினைத்தேன்!

  6. நானும் “இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை “என்ற உங்கள் பதிவை பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. இதுபற்றி உங்களுக்கு ஓர் கடிதம் அனுப்பினேன் இதில் எனக்கு ஏதும் ஆச்சரியம் இல்லை புலிகளை யாராவது விமர்சனம் செய்தால் ஆக குறைந்த பட்சம் அவர்கள் அந்த பதிவை தங்களால் முடிந்தவரை மற்றவர்கள் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்பது நான் ஏற்கெனவே அறிந்தது தான்.

  7. முதன் முதலில் ஒரு நட்சத்திரப் பதிவராக எங்களை அதிகம் விசனத்துக்கு உள்ளாக்கியவர் நீங்கள் தான்.

    உங்கள் பதிவினையொட்டிய எங்கள் பின்னூட்டக் கேள்விகளுக்கும் பதிலே இல்லை.

    உங்கள் நேபாளத்தையும் , ஈழத்தையும் ஒன்றுபடுத்தி எழுதிய பதிவில் நான் / மற்றும் பலர் வைத்த விமர்சனத்திற்கு எதுவித பதிலும் இல்லை.

    “இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை “ என்ற பதிவைப் படித்தேன். ஆனால் பின்னூட்டமிட இயலவில்லை. மாற்றுக் கருத்தை அனுமதிக்க வேண்டாம் என்ற உங்கள் விருப்பத்தின் காரணமாகவா என்றும் தெரியவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.