பெண்

இன்னுமொரு ’சிறந்த பட்டியல்’!

தமக்குத் தெரிந்தவர்கள், தமக்குத் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என தன் சுயத்தை சுற்றியிருப்பவர்களை மட்டும் பட்டியல் போடுவது எழுத்தாளர்கள், ஊடகக்காரர்களின் வழக்கமாகிவிட்டது. நியூஸ் மினிட் பட்டியல் எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பட்டியலில் உள்ளவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், பு.தலைமுறையின் ஜென்ராம், நியூஸ் 7 செந்தில், விஜயன் இவர்களின் பங்களிப்பை இந்தப் பட்டியல் புறக்கணித்துள்ளது. பூங்குழலி, வெங்கட பிரசாத்தின் மனைவி என்ற அளவிலே சுருக்கப்பட்டிருக்கிறார். பூங்குழலியின் தமிழ் உச்சரிப்பும் எளிமையும் என்னை மிகவும் ஈர்த்தவை. நியூஸ் 7 … Continue reading

கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?

கற்பழிப்பு என்கிற சொல் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி, சில ஊடகங்கள் அந்தச் சொல்லை பாலியல் வல்லுறவு, பாலியல் வன்செயல் என மாற்றுச் சொற்களோடு பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதிகம் படிப்பதாக சொல்லப்படும் தினத்தந்தி, தினமலர் போன்றவை இன்னமும் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றன. கற்பழிப்பு என்ற சொல்லில் இவர்கள் கொண்டுள்ள தனிப்பட்ட ஈர்ப்பை புரிந்து கொள்ள, இவர்கள் எழுதும் கற்பழிப்பு செய்திகளை படிப்பது அவசியம். இன்றைய தினத் தந்தியில் நாமக்கல்லில் ஒரு மாணவி … Continue reading

சாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி!

மேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. இல்லையெனில் பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் அரசியல்வாதியாகவும் மேட்டுக்குடியினரின் சிநேகிதனாகவும் கல்விக்கென எவ்வித முன்னெடுத்தலையும் செய்யாத சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் … Continue reading

4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…

Originally posted on நான்கு பெண்கள்:
வழமையாக பெண்களுக்கான இதழ்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே 4 பெண்கள் தளம் தொடங்கப்பட்டது. ஆர்வத்தின் காரணமாக அவசர அவசரமாக சரியான நிலைப்பாட்டில் 4 பெண்கள் தளம் இதுநாள் வரை செயல்படவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறோம். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்கிற புரிதலுக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது, இந்தக் காலக்கட்டத்தில் வெகுஜென பெண்கள் இதழ்களுக்கும் தீவிர பெண்ணியத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இடைவெளி பற்றி நாம் அதிகம் விவாதிக்காததும் இந்த இடைவெளியை நீக்க எத்தகைய இணைப்பு…

பெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…

இதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன்.  இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை  உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது.  சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த … Continue reading

ஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்வதற்காக இன்றைய நாளிதழ்களை தேடியபோது, கிருஷ்ணகிரி கல்லூரி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியை தினமலர் எழுதியிருக்கும் விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. உடலால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை எழுத்தால் வன்முறை செய்திருந்தது தினமலர். சம்பவத்தை நேரில் பார்த்து எழுதியதைப் போல் எல்லா தகவல்களும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் பாதி இட்டுக்கட்டிய பொய். மஞ்சள் பத்திரிகைகளில் எழுதுவதுபோல படிப்பவர்களுக்கு கிளுகிளுப்பான உணர்வை தர வேண்டும் என்று எழுதுபவர்கள் … Continue reading

வேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்

நான் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பேறுக்குப் பிறகு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்குப் போகவேண்டாம் என்று வற்புறுத்தி அவர்களை போக விடுவதில்லை. இந்த இரண்டு காரணங்களையும் என் விஷயத்தில் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். எப்போதும் நான் வேலைக்குப் போவேன் என்று திருமணத்திற்கு முன்பே என் வீட்டாரிடம் உறுதியாக சொல்லியிருந்தேன். அதன்படி திருமணமாகி, கர்ப்பம் தரித்திருந்த ஒன்பது மாதங்கள் வரை வேலைக்குச் சென்றேன். வேலையிலிருந்து விலகிய … Continue reading

சும்மாதான் இருக்கிறேன்

வீட்டிலிருக்கும் பெண்களுக்கான வேலைப் பளுவை தற்சமயம் உணர்கிறேன். வீட்டிலிருக்கும் பெண்களை சும்மாதான் இருக்கிறார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது. பணிக்குச் சென்ற நாட்களில் இத்தனை வேலைப் பளுவை அனுபவித்ததில்லை. அது ஒருவகையான வாழ்க்கையாக இருந்தது, இது வேறுவகையானதாக இருக்கிறது. இதுபற்றி விரிவாக எழுத வேண்டும். இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறேன். நாளின் முடிவில் சாத்தியப்படாமல் போய்விடுகிறது. கிடைக்கும் நேரத்தில் நிறையதை படிப்பதற்கு செலவிடுகிறேன். அது … Continue reading

பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்?

பெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் … Continue reading

’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன். ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு … Continue reading

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்!

பெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்…

ஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்முறை

பெண்களும் சாதி உணர்வும்

“திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!”

ஆழ்கடலில் திசைமாறிய படகு…

மெட்ரோபாலிடன் நகரங்களில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆண்களின் சகிப்பின்மைதான் காரணம்!

”தனியா வாழற பெண் எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான்” – பாமா